திவ்யதர்சினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திவ்யதர்சினி
DD press meet.jpg
திவ்யதர்சினி
பிறப்புதிவ்யதர்சினி நீலகண்டன்
பெப்ரவரி 17, 1985 (1985-02-17) (அகவை 39)
பேராவூரணி, தஞ்சாவூர், தமிழ்நாடு
மற்ற பெயர்கள்டிடி
பணிதொகுப்பாளினி, நடிகை, பேராசிரியை,
செயற்பாட்டுக்
காலம்
1998–நடப்பு
வாழ்க்கைத்
துணை
ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் (2014-2017)
உறவினர்கள்பிரியதர்சினி (அக்கா)

திவ்யதர்சினி (Divyadarshini) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி[1] இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்[2]. இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.

தொகுப்பாளினி

திவ்யதர்சினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் தற்பொழுது ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013 இல் விகடன் வழங்கியது.

தனிப்பட்ட வாழ்க்கை

திவ்ய தர்ஷினி K. நீலகண்டனிற்கும் N. ஸ்ரீலதா விற்கும் 17 பிப்ரவரி 1985 அன்று ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவரது சகோதரியான பிரியதர்ஷினியும் தொகுப்பாளினி ஆவார். இவரின் தம்பி விமானஓட்டி ஆகவும் உள்ளார்.

2014 இல் இவருக்கும் தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனிற்கும் திருமணம் நடைபெற்றது. 2017 இல் இவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

மேற்கோள்கள்

  1. Penchant for the past பரணிடப்பட்டது 2004-10-31 at the வந்தவழி இயந்திரம். The Hindu (2004-05-29). Retrieved on 2014-01-01.
  2. "DD as Professor". chennaionline.com. Oct 03, 2013. பார்க்கப்பட்ட நாள் 10 January 2014. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=திவ்யதர்சினி&oldid=22915" இருந்து மீள்விக்கப்பட்டது