போசியா பாத்திமா
போசியா பாத்திமா | |
---|---|
பிறப்பு | இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
படித்த கல்வி நிறுவனங்கள் | திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா) |
பணி | திரைப்பட ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
அறியப்படுவது | மித்ர், மை பிரெண்ட் |
வாழ்க்கைத் துணை | பிரதீப் செரியன் |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | கேரள அரசு தொலைக்காட்சி விருது (2015) |
போசியா பாத்திமா (Fowzia Fathima, பிறப்பு 24 சனவரி 1972) என்பவர் ஓர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர, இயக்குனர் ஆவார். மௌத்ர், மை ஃப்ரெண்ட் 2012, குலுமால்: தி எஸ்கேப் 2009, உயிர் 2006 போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக ஃபோசியா அறியப்படுகிறார். இவர் ஊடக தொழில்நுட்பங்களில் ஒளிப்பதிவுக்கான பயிற்சியாளராக உள்ளார், இவர் இந்தியாவை தளமாகக் கொண்ட சமகால திரைப்படத் தயாரிப்பு மற்றும் கற்பித்தலில் பரந்த அனுபவம் உள்ளவர்.[1]
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான ஃபோசியா பாத்திமா,[2] சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பேராசிரியராகவும், ஒளிப்பதிவுத் துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார் மேலும் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இன்பெக்ஷன் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.[3]
கல்வி
பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒளிப்பதிவுவில் பட்டய படிப்பு, 1996-1998. முதல் வகுப்பு, "ஏ" தரத்தில் தேர்ச்சி.
மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கலைத் திறனாயவில் முதுகலைப் பட்டம், 1993-1995.
சென்னை இசுடெல்லா மேரிக் கல்லூரியில் இளங்கலை பட்டம் (கலை வரலாறு, ஓவியம்), 1989-1992.
தொழில் ஒளிப்பதிவாளராக
பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களை குழுவை மட்டுமே கொண்டு ரேவதி இயக்கிய மித்ர், மை பிரெண்ட் திரைப்படத்தில் சுயாதீன ஒளிப்பதிவாளராக இவர் அறிமுகமானார்.[4] ஃபோசியா மலையாள சினிமாவில் முதல் சுயாதீனமான பெண் ஒளிப்பதிவாளராகவும், இந்திய மகளிர் ஒளிப்பதிவாளர்களின் கூட்டமைப்பிக்கு பின்னால் உள்ள சக்தியாகவும் உள்ளார்.[5][6][7][8][9][10][11][12]
திரைப்படவியல் ஒளிப்பதிவு இயக்குநராக
ஆண்டு | படம் | மொழி | இயக்குனர் |
---|---|---|---|
2015 | அகேது நாயகா | மலையாளம் | சிந்து சாஜன் இயக்கிய, இக் குறும்படமானது சிறந்த ஒளிப்பதிவுக்கான-கேரள அரசின் தொலைக்காட்சி விருதைப் பெற்றது |
2013 | இன்பெக்டடு | இந்தி | இயக்குனர் |
2012 | சோக்கர் பானி | வங்காளி ஆவணப்படம் | ஷியாமல் கர்மக்கர் [13][14] |
2009 | குலுமால்: தி எஸ்கேப் | மலையாளம் | வி. கே. பிரகாசு |
2009 | முதல் முதல் முதல் வரை | தமிழ் | கிருஷ்ணன் கோமடம் |
2008 | சிலந்தி | தமிழ் | ஆதிராஜன் |
2006 | உயிர் | தமிழ் | சாமி |
2004 | த ஷேடோ ஆப் த கோப்ரா | ஆங்கிலம் | டெட் நிக்கோலாவ் |
2003 | விசில் | தமிழ் | ஜெரி & ஜே.டி. |
2003 | குச் டு ஹை | இந்தி | அனில் வி.குமார் |
2002 | இவன் | தமிழ் | ஆர். பார்த்தீபன் |
2002 | மித்ர், மை பிரெண்ட் | ஆங்கிலம் | ரேவதி [15] |
இயக்கம் & ஒளிப்பதிவு
ஆண்டு | படம் | விவரங்கள் |
---|---|---|
2019 | வில் டூ கோப்ரட்டிவ் | மலையாள அம்ச முழு நீள ஆவணப்படம் (படப்பிடிப்பில்) |
2018 | டேவிட்ஜி கோட் | மலையாள குறும்படம் |
2017 | நதியுடே மூணாம் கரா [16] | மலையாள புனைகதை 62 நிமிடங்கள் |
குறிப்புகள்
- ↑ "A female perspective". 8 March 2017. https://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/090317/a-female-perspective.html.
- ↑ "Cinematographer Fowzia Fathima about women's participation in IFFK 2017" இம் மூலத்தில் இருந்து 2018-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181017123616/https://www.manoramaonline.com/videos/video-featured.iffk-2017.5677035645001.html.
- ↑ "Short film 'Infected' goes to Busan International Film Festival – Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Short-film-Infected-goes-to-Busan-International-Film-Festival/articleshow/23337544.cms.
- ↑ .
- ↑ "The crisis of confidence: Collective sigh against herogiri". 26 December 2017. https://www.deccanchronicle.com/nation/in-other-news/271217/the-crisis-of-confidence-collective-sigh-against-herogiri.html.
- ↑ "Women get taken advantage of in the industry". http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/apr/25/women-get-taken-advantage-of-in-the-industry-1806367.html.
- ↑ "Cinematographer launches group to assist upcoming professionals in the field". 8 March 2017. https://www.hindustantimes.com/lucknow/cinematographer-launches-group-to-assist-upcoming-professionals-in-the-field/story-IegUSiCNewSAPTZptx3yiK.html.
- ↑ "7 Indian Women Cinematographers We Should Know About". 7 December 2017. https://feminisminindia.com/2017/12/08/listicle-indian-women-cinematographers/.
- ↑ "Glitterati". https://www.outlookindia.com/glitterati/350.
- ↑ "Fowzia Fathima, Shalini Agarwal conduct workshop on practicals of handling camera, sound recording". https://www.cinestaan.com/articles/2018/mar/10/11643/fowzia-fathima-shalini-agarwal-conduct-workshop-on-practicals-of-handling-camera-sound-recording.
- ↑ "A female perspective". 10 March 2017. http://www.asianage.com/life/more-features/100317/a-female-perspective.html.
- ↑ "Women cinematographers: Through a more equal lens". 24 March 2017. https://www.livemint.com/Leisure/atnBD2X92I66T54UTQvxQL/Women-cinematographers-Through-a-more-equal-lens.html.
- ↑ "Nandigramer Chokher Pani". https://www.moviebuff.com/nandigramer-chokher-pani.
- ↑ "Film producer, Nandigram villagers detained for protesting". Press Trust of India. 11 November 2012. https://www.business-standard.com/article/pti-stories/film-producer-nandigram-villagers-detained-for-protesting-112111100073_1.html.
- ↑ ""Mitr-My Friend"". 2002-02-15 இம் மூலத்தில் இருந்து 2002-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020325164421/http://thehindu.com/thehindu/fr/2002/02/15/stories/2002021501090201.htm.
- ↑ Kumar, P. k Ajith (13 March 2017). "When a woman manned the camera". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/when-a-woman-mans-camera/article17459725.ece.