வானத்தைப் போல

வானத்தைப்போல (Vaanathaippola) என்பது 2000 ஆம் ஆண்டில் தமிழ்-மொழியில் வெளியான குடும்பத் திரைப்படம் ஆகும். விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன்,[1] கௌசல்யா, அஞ்சு அரவிந்த் மற்றும் பலர் நடித்துள்ளதுனர்.

வானத்தைப்போல
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புவி.ரவிச்சந்திரன்
கதைவசந்த்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜயகாந்த்
பிரபுதேவா
மீனா
செந்தில்
ஒளிப்பதிவுஆர்தர் ஆ. வில்சன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்ஆஸ்கார் பிலிம்ஸ் பி. லிமிடெட்
வெளியீடு14 சனவரி 2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆஸ்கார் பிலிம்ஸின் கீழ் வி.ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார்[2] இசையமைத்துள்ளார் மற்றும் ஆர்தர் ஆ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தனது மூன்று இளைய சகோதரர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தியாகங்களைச் செய்யும் அக்கறையுள்ள சகோதரனின் கதையை படம் சொல்கிறது.

இந்த படம் 14 சனவரி 2000 ஆம் ஆண்டில் வெளியாகி,[3] நேர்மறையான விமர்சனங்ககளை பெற்று மற்றும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது, மேலும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. அத்துடன் இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார்  இசையமைத்திருந்தார். இரா.  ரவிசங்கர், பா. விஜய், விவேகா  நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.[4]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "காதல் வெண்ணிலா"  இரா. இரவிசங்கர்ஹரிஹரன்  
2. "எங்கள் வீட்டில் எல்லா நாளும்"  நா. முத்துகுமார் & பா. விஜய்எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன், அருண்மொழி  
3. "காதல் வெண்ணிலா"  இரா. இரவிசங்கர்பி. ஜெயச்சந்திரன்  
4. "நதியே நயில் நதியே"  பா. விஜய்சுக்விந்தர் சிங், அனுராதா ஸ்ரீராம்  
5. "ரோஜாப்பூ மாலையிலே"  பா. விஜய்கே. எஸ். சித்ரா, மனோ  
6. "தாவணியே என்ன மயக்கிறயே"  விவேகாஎஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா  
7. "வானில் வெண்ணிலா"  இரா. இரவிசங்கர்சுஜாதா மோகன்  
8. "மைனாவே மைனாவே"  விவேகாஉண்ணிமேனன், கே. எஸ். சித்ரா  

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Dinakaran". www.dinakaran.com. Archived from the original on 26 June 2004. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  2. "Viveka about his second song (Thavaniye Enna)". Behindwoods. 2020-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
  3. "VANATHAIPPOL". chennaionline.com. Archived from the original on 7 July 2001. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
  4. "தாவணியே என்ன மயக்கிறயே பாடல் - விவேகா". Behindwoods. 2020-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வானத்தைப்_போல&oldid=37558" இருந்து மீள்விக்கப்பட்டது