மௌனகுரு (திரைப்படம்)

மௌனகுரு சாந்த குமார் இயக்கத்தில் 2011 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். மு. க. தமிழரசு தயாரித்த இத்திரைப்படத்தில் அருள்நிதி, இனியா ஆகியோர் முதன்மை வேடங்களிலும், ஜான் விஜய், உமா ரியாஸ்கான் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். தமன் இசையமைப்பில் 2011 திசம்பர் 16 அன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[1][2]

மௌனகுரு
இயக்கம்சாந்த குமார்
கதைசாந்த குமார்
இசைதமன்
நடிப்பு
ஒளிப்பதிவுமகேஷ் முத்துச்சாமி
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்மோகனா மூவிசு
வெளியீடு16 திசம்பர் 2011 (2011-12-16)
ஓட்டம்2 மணி 29 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4 கோடி

நடிகர்கள்

பாடல்கள்

மௌனகுரு
இசை
வெளியீடு15 நவம்பர் 2011
ஒலிப்பதிவு2011
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்வேகா மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்மு. க. தமிழரசு
தமன் காலவரிசை
'ஒஸ்தி
(2011)
மௌனகுரு 'பாடிகார்டு
(2011)

இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.[3] பாடல்கள் 2011 நவம்பர் 15 அன்று வெளியானது.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "புதுப்புனல்"  ரஞ்சித், ராகுல் நம்பியார், சாம், எம். எல். ஆர். கார்த்திகேயன் 4:38
2. "என்னயிது"  ரஞ்சித், ராகுல் நம்பியார், ரீட்டா, ரம்யா என்.எஸ்.கே. 4:15
3. "அனாமிகா"  கார்த்திக், ஹரிணி 3:28
4. "லவ்"  ராகுல் நம்பியார் 1:18
5. "இசைக்கலவை"  தமன் 2:13
மொத்த நீளம்:
15:52

மறுஆக்கம்

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கன்னடத்தில் குரு (2012) எனவும், தெலுங்கில் சங்கரா (2015) எனவும் மறுஆக்கம் செய்யப்பட்டது. 2016 ஆவது ஆண்டில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மௌனகுரு_(திரைப்படம்)&oldid=36876" இருந்து மீள்விக்கப்பட்டது