முருகதாஸ் (நடிகர்)

ஆடுகளம் முருகதாஸ் என்றறியப்படும் முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆவது ஆண்டில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுசின் நண்பராக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றமையால் ஆடுகளம் முருகதாஸ் என்று பரவலாக அறியப்படுகிறார்.

ஆடுகளம் முருகதாஸ்
பிறப்புமுருகதாஸ்
ஆர்யன்குப்பம், பாண்டிச்சேரி
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது வரை

திரை வாழ்க்கை

நடிகர் விஜய் நடிப்பில் 2004 ஆவது வெளியான கில்லி திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகம் ஆனார். கபடி அணியில் ஒருவராக சில காட்சிகளில் நடித்திருந்தார். இருப்பினும் வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலமாகவே அனைவராலும் அறியப்பட்டார். மௌனகுரு திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. "அற்புதமான குணச்சித்திர நடிகர்" என தி இந்து பாராட்டியது.[1] 2012 ஆவது ஆண்டில் தடையறத் தாக்க, முகமூடி திரைப்படங்களில் நடித்திருந்தார்.[2]

2013 ஆவது ஆண்டில், சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப் புலி திரைப்படத்தில் சசிகுமாரின் நண்பராகவும், தகராறு திரைப்படத்தில் நான்கு முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராகவும், கண் பேசும் வார்த்தைகள் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருந்தார்.[3] பாலமித்ரன் இயக்கும் கள்வர்கள் திரைப்படத்தில் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.[4]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2004 கில்லி ஆதிவாசி  
2006 புதுப்பேட்டை  
2009 வெண்ணிலா கபடிக் குழு  
2011 ஆடுகளம் ஊளை  
மௌனகுரு பாபு  
2012 தடையறத் தாக்க வேலு
முகமூடி
2013 கண் பேசும் வார்த்தைகள் அப்புக்குட்டி
குட்டிப் புலி  
தகராறு ஆறுமுகம்
2014 இது கதிர்வேலன் காதல் கதிர்வேலனின் நண்பர்
குக்கூ கவாசு  
ஜிகர்தண்டா அவராகவே சிறப்புத் தோற்றம்
கள்வர்கள்    
2015 ஈட்டி புகழின் நண்பர்  
2016 விசாரணை முருகன்  
அஞ்சல கல்யாண ராமன்
சைத்தான் இரவி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முருகதாஸ்_(நடிகர்)&oldid=21463" இருந்து மீள்விக்கப்பட்டது