புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்

முகம்மதியர் படையெடுத்து மதுரையை அழித்தபோது அங்கிருந்த பாண்டியர் பல கிளையினராகப் பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொற்கை, கருவை எனப்படும் கரிவலம்வந்த நல்லூர், தென்காசி முதலான இடங்களில் இருந்துகொண்டு சிற்சில ஊர்களை ஆண்டுவந்தனர். இவர்களைப் பொது வகையால் தென்காசிப் பாண்டியர் எனக் குறிப்பிடுவது வழக்கம். [1] இவர்களில் மூன்று பாண்டியர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். இவர்களால் பாடப்பட்ட நூல்கள் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத் தக்கவை. [2]

பாண்டியர் பாடிய நூல்கள்

  • அபிராம பராக்கிரம பாண்டியன் - இவனது வரலாறு விளங்கவில்லை
  • சடைய வர்மன் பராக்கிரம பாண்டியன் - இவனது தலைநகர் கருவை. காலம் 1543 - 88, இவனது மக்கள் மூவர். மூவரும் புலவர்களாக விளங்கித் தமிழில் நூல்கள் இயற்றியுள்ளனர்.
  • திருநெல்வேலிப் பெருமான் என்னும் நெல்வேலி மாறன். இவனது தலைநகர் தென்காசி. காலம் 1552 - 64. இவனுக்குக் குழந்தை இல்லை. எனவே பராக்கிரம பாண்டியனின் குழந்தைகள் மூவரையும் தத்து எடுத்துக்கொண்டான்.

பாண்டியப் புலவர்கள் மூவர். இவர்கள் பராக்கிரம பாண்டியனின் மக்கள். நெல்வேலி மாறனின் தத்துப்பிள்ளைகள்

செய்தி நிரல்

அரசன் புலவர் ஆண்டு தலைநகர் இயற்றிய நூல்கள் குரு
வரகுண ராமன் (இவனைக் குலசேகரப் பாண்டியன் எனக் குறிப்பிடுவதும் உண்டு) 1560-1600 (முடிசூடவில்லை) முதலில் கருவையிலும் பின் தென்காசியிலும் வாழ்ந்துவந்தான் வாயு சங்கிதை, இலிங்க புராணம் முதலானவை அகோர சிவம், சுவாமிதேவர் என்னும் இருவர்
வரதுங்க ராமன் 1558-1613? கருவை கொக்கோகம், பிரமோத்தர காண்டம், கருவை அந்தாதிகள் ஆகியவை வேப்பற்றூர் ஈசான முனிவர்
சீவலமாறன் என்னும் அதிவீர ராமன் 1564-1610 தென்காசி நைடதம், காசி காண்டம், கூர்ம புராணம், வெற்றி வேற்கை சுவாமி தேவர்

மேலும் காண்க

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. pp. 154 முதல். {{cite book}}: Check date values in: |year= (help)
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)