வாயு சங்கிதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாயு சங்கிதை [1] என்பது ஒரு புராண நூல்.
வரகுணராமர் என்னும் பாண்டியன் குலசேகரனால் இயற்றப்பட்ட இரண்டு நூல்களில் ஒன்று.
மற்றொன்று இலிங்க புராணம்.

  • இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.

நூல் அமைதி

  • இரண்டு காண்டங்கள் உள்ளன.
    • பூர்வ காண்டம் 30 அத்தியாயம், 537 பாடல்களைக் கொண்டது.
    • உத்தர காண்டம் 30 அத்தியாயம், 797 பாடல்களைக் கொண்டது.

கதை

  • முனிவர் பிரமலோகம் சென்று முத்திக்கு வழி காட்டுமாறு பிரமனைக் கேட்டார். “நீங்கள் நைமிசாரணியம் சென்று தவம் செய்யுங்கள். அங்கு வாயுதேவன் வந்து முத்திக்கு வழி காட்டுவான்” என்றார். அவ்வாறு தவம் செய்யும்போது வாயுதேவன் கூறியதாக இதில் செய்திகள் சொல்லப்படுகின்றன.

பூர்வ காண்டம் சொல்லும் செய்திகளில் சில

  • சிவபெருமான் தன்மை, பிரபஞ்சத்தின் தோற்றம், காலத்தின் தோற்றம், பிரமன் கால்வழி,
  • சிவன் அருளிச்செயல்
  • முனிவர்களின் மனைவியர்

உத்தர காண்டம் சொல்லும் செய்திகளில் சில

  • சிவன் கண்ணனுக்குத் தீக்கை செய்தது
  • சிவலிங்க இயல்புகள்,
  • உமாமகேசுர பாசை, கிரியா பூசை, மாத பூசை, காமியகன்மம் முதலானவை

பாடல் எடுத்துக்காட்டு, ஞானயோகம் பற்றியது

விறகினைப் பற்றியே விளங்கும் தீயினை
குறைவறக் காண்குவது அன்றிக் கோதிலாது
உறைதரு தீயினைக் காண ஒண்ணுமோ
மறைதரு பொருளினை வகுக்க வல்லிர்காள்.
இதன் செய்தி – விறகில் பற்றி எரியும்போதுதானே தீயைக் காணமுடியும். அதுபோல ஞானம் பற்றி எரிந்தால்தான் இறைவனைக் காணமுடியும்.

இவற்றையும் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. தொகுப்பு என்று பொருள்படும் சம்ஹிதை என்னும் வடசொல்லின் தமிழாக்கம்
"https://tamilar.wiki/index.php?title=வாயு_சங்கிதை&oldid=17515" இருந்து மீள்விக்கப்பட்டது