பாண்டியர் பாடிய நூல்கள்
Jump to navigation
Jump to search
பதினைந்து முதல் பதினேழாம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டி நாடு தலைநகர் மதுரையை இழந்து கொற்கை, கருவை, தென்காசி ஆகிய தலைநகரங்களில் சிதருண்டு கிடந்தது. சிதருண்டு கிடந்த சிற்றரசு பாண்டியர் செந்தமிழ் நூல்கள் பல யாத்தனர். [1] அவை
எண் | நூல் | ஆசிரியர் வழக்கு | நூல் கூறும் ஆசிரியர் பெயர் | குரு |
---|---|---|---|---|
1 | இலிங்க புராணம் | வரகுணராமன் | பாண்டியன் குலசேகரன் | அகோர சிவம் |
2 | வாயு சங்கிதை (புராணம்) | வரகுணராமன் | பாண்டியன் குலசேகரன் வரகுணராமன் | சுவாமி தேசிகர் |
3 | அம்பிகை மாலை | வரகுணராமன் | குலசேகரன் | - |
4 | பிரமோத்தர காண்டம் (புராணம்) | வரதுங்கராமன் | வரதுங்கராமன் | ஈசான முனிவர் |
5 | திருக்கருவை அந்தாதிகள் (3) | வரதுங்கராமன் | - | - |
6 | கொக்கோகம் | வரதுங்கராமன் | - | - |
7 | நைடதம் | அதிவீரராமன் | அதிவீரராமன் | சுவாமி தேவர் |
8 | வெற்றிவேற்கை | அதிவீரராமன் | வீர்ராமன் குலசேகரன் | - |
9 | கூர்ம புராணம் | அதிவீரராமன் | அதிவீர பூபதி | சுவாமி தேவர் |
10 | காசி கண்டம் | அதிவீரராமன் | அதிவீரராமன் | சுவாமி தேவர் |