நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பாகும். இஃது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்த நூல் ஒன்றின் முகப்புத் தோற்றம்

பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை, 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.

திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல் தொகுப்பினையும் குறிக்கும்.

இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. இது,

  • முதலாயிரம்: 947 பாடல்கள்
  • பெரிய திருமொழி: 1134 பாடல்கள்
  • திருவாய்மொழி: 1102 பாடல்கள்
  • இயற்பா: 817 பாடல்கள்

என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

24 பிரபந்தங்கள்

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்

  1. திருப்பல்லாண்டு
  2. பெரியாழ்வார் திருமொழி
  3. திருப்பாவை
  4. நாச்சியார் திருமொழி
  5. பெருமாள் திருமொழி
  6. திருச்சந்த விருத்தம்
  7. திருமாலை
  8. திருப்பள்ளி எழுச்சி
  9. அமலனாதிபிரான்
  10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
  11. பெரிய திருமொழி
  12. திருக்குறுந்தாண்டகம்
  13. திருநெடுந்தாண்டகம்
  14. முதல் திருவந்தாதி
  15. இரண்டாம் திருவந்தாதி
  16. மூன்றாம் திருவந்தாதி
  17. நான்முகன் திருவந்தாதி
  18. திருவிருத்தம்
  19. திருவாசிரியம்
  20. பெரிய திருவந்தாதி
  21. திருஎழுகூற்றிருக்கை
  22. சிறிய திருமடல்
  23. பெரிய திருமடல்
  24. திருவாய்மொழி
  25. இராமானுச நூற்றந்தாதி

பன்னிரு ஆழ்வார்கள்

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவியாழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

பாடுபொருள்

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.


முதலாயிரம்

இயற்றிய ஆழ்வார் தலம் நூலின் பெயர் நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
பெரியாழ்வார் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பல்லாண்டு பரணிடப்பட்டது 2012-01-11 at the வந்தவழி இயந்திரம் 1 - 12 12
பெரியாழ்வார் திருமொழி 13 - 473 461
ஆண்டாள் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருப்பாவை 474-503 30
நாச்சியார் திருமொழி 504-646 143
குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி 647 - 751 105
திருமழிசையாழ்வார் திருமழிசை திருச்சந்தவிருத்தம் 752 - 871 120
தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை[1] 872 - 916 45
திருப்பள்ளி எழுச்சி 917 - 926 10
திருப்பாணாழ்வார் உறையூர் அமலனாதிபிரான்[2] 927 - 936 10
மதுரகவியாழ்வார் கண்ணிநுண்சிறுத்தாம்பு 937 - 947 11

இரண்டாவதாயிரம்

இயற்றிய ஆழ்வார் தலம் நூலின் பெயர் நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 948 - 2031 1084
திருக்குறுந்தாண்டகம் 2032 - 2051 20
திருநெடுந்தாண்டகம் 2052 - 2081 30

மூன்றாவதாயிரம்

இயற்றிய ஆழ்வார் தலம் நூலின் பெயர் நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
பொய்கையாழ்வார் காஞ்சிபுரம் முதல் திருவந்தாதி 2082 -2181 100
பூதத்தாழ்வார் மாமல்லபுரம் இரண்டாம் திருவந்தாதி 2182 - 2281 100
பேயாழ்வார் மயிலாப்பூர் மூன்றாம் திருவந்தாதி 2282 - 2381 100
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 2382 - 2477 96
நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவிருத்தம் 2478 - 2577 100
திருவாசிரியம் 2578 - 2584 7
பெரிய திருவந்தாதி 2585 - 2671 87
திருமங்கை ஆழ்வார் திருஎழுகூற்றிருக்கை 2672 1
சிறிய திருமடல் 2673 - 2712 40
பெரிய திருமடல் 2713 - 2790 78
நம்மாழ்வார் ஆழ்வார்திருநகரி திருவாய் மொழி 2791 - 3892 1101

நான்காவதாயிரம்

இயற்றிய ஆழ்வார் நூலின் பெயர் நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதி 3892 - 4000 108

காண்க

  • நாலாயிர திவ்வியப் பிரபந்தம் [3]

உசாத்துணைகள்

  • முனைவர் ஜெகத்ரட்சகன்: நாலாயிர திவ்யப் பிரபந்தம். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை.1993

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்