தெரு நாய்கள் (திரைப்படம்)
தெரு நாய்கள் (Theru Naaigal) என்பது 2017ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். ஹரி உத்ரா எழுதி இயக்கிய இப்படத்தில் பிரதீக், அட்சதா சிறீதர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் இதில் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, பாவெல் நவகீதன் , மதுசூதன், ராமச்சந்திரன் துரைராஜ், மைம் கோபி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நிடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் 2016 ஆம் ஆண்டின் நடுவில் தொடங்கியது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களுடன் 22 செப்டம்பர் 2017 அன்று வெளியானது.
தெரு நாய்கள் | |
---|---|
இயக்கம் | எஸ். ஹரி உத்ரா |
தயாரிப்பு | சுசில்குமார் ஜெயின் |
இசை | அரிஷ்—சத்தீஷ் |
நடிப்பு | பிரதீக் அட்சதா சிறீதர் அப்புக்குட்டி இமான் அண்ணாச்சி மதுசூதன் மைம் கோபி ராமச்சந்திரன் துரைராஜ் |
ஒளிப்பதிவு | தளபதி ரத்ணம் |
படத்தொகுப்பு | மீனாட்சி சுந்தர் |
கலையகம் | சிறீ புவால் மூவி புரொடக்சன்ஸ் ஐ கிரியேசன்ஸ் |
வெளியீடு | 22 செப்டம்பர் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சுபாஷ் குமாராக
- அக்சதா சிறீதர் சாஸ்திரி
- மதுசூதன் சொக்கலிங்கமாக
- மைம் கோபி மருதமுத்தாக
- சாய் தீனா
- இமான் அண்ணாச்சி கிருஷ்ணனாக
- ராமச்சந்திரன் துரைராஜ்
- அப்புக்குட்டி கதிராக
- பாவெல் நவகீதன் வினோத்தாக
- ஆறு பாலா பாவாவாக
- கஜராஜ் அரசியல்வாதியாக
- முத்துராமன்
- சூசை குமார் சேத்தாக
- கூல் சுரேஷ் மருதமுத்துவின் உதவியாளராக
- சம்பத் ராம் கஜாவாக
- ரேகா சுரேஷ்
- பிர்லா போஸ் மாவட்ட ஆட்சியராக
- நிலானி
- சரண்யா
தயாரிப்பு
ஹரி உத்ரா இந்த திரைப்படத்தை எழுதினார். இப்படத்தின் கதையானது பெருநிறுவனங்களின் செயல்பாடுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. கதையின் சர்ச்சைக்குரிய கருப்பொருள் காரணமாக தயாரிப்பாளர் ஒருவரைக் கண்டடைவது துவக்கத்தில் கடினம் என்று ஐ கிரியேஷன்ஸ் படத்திற்கு நிதியளிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு கருதினார்.[1] படத்துக்கு யு சான்றிதழை தணிக்கை வாரியம் அளித்தது. தணிக்கை வாரியம் ஆரம்பத்தில் கதையின் உள்ளடக்கம் குறித்து சந்தேகம் கொண்டிருந்ததாகவும் ஆனால் பின்னர் அது திருப்தி அடைந்ததாகவும் குறிப்பிட்டார். ஏனெற்றால் கதையானது மீத்தேன் எரிவாயுவை வேளாண் நிலங்களில் இருந்து எடுக்கும் திட்டம் குறித்த சிக்கல்களைக் கொண்டிருப்பதால் அது அரசாங்கத்திற்கு எதிரானது என்றும் ஹரி குறிப்பிட்டார்.[2]
இசை
படத்திற்கான இசையை ஹரிஷ், சதீஷ் இரட்டையர் அமைத்தனர். படத்தின் இசை உரிமையை மியூசிக் 247 வாங்கியது. இந்த இசைக் கோப்பு 28 சூலை 2017 அன்று வெளியிடப்பட்டது. அதில் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மீசைய முறுக்கி" | ஹைட் கார்த்திக் | 3:44 | |||||||
2. | "நெற்றிக் கண்ணைத் திறந்திடு" | அரிஷ் | 2:15 | |||||||
3. | "காட்டுக்குள்ள சிக்கிருச்சு" | மகாலிங்கம் | 4:21 | |||||||
4. | "கண்கள் கதை பேசுதோ" | வைக்கம் விஜயலட்சுமி | 4:18 | |||||||
5. | "தெரு நாய்கள்" | — | 2:45 | |||||||
6. | "டார்க் நைட்" | — | 1:55 |
வெளியீடு
தெரு நாய்கள் தமிழகம் முழுவதும் பிற எட்டு படங்களுடன் திரையரங்குகளில் வெளியானது. இது சென்னையில் 2017 ஆம் ஆண்டில் அதிக நெரிசல் மிகுந்த திரைப்பட வெளியீட்டு நாளாக இருந்தது.[3] இந்த படம் 22 செப்டம்பர் 2017 அன்று கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.
குறிப்புகள்
- ↑ "Hari Uthraa’s ‘Theru Naaigal’ Deals With Farmers’ Issues". http://www.desimartini.com/news/tamil/hari-uthraas-theru-naaigal-deals-with-farmers-issues/article55152.htm.
- ↑ "Theru Naaigal takes on farmer issues". 20 June 2017. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/200617/theru-naaigal-takes-on-farmer-issues.html.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/nine-films-to-hit-screens-on-september-22/articleshow/60779854.cms