தீயவன் (Theeyavan) என்பது 2008 ஆம் ஆண்டய தமிழ் காதல் பரபரப்புத் திரைப்படம் ஆகும். பி. கதிர் தயாரித்து எழுதி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஸ்ரீராஞ்சன், புதுமுகம் உதய் மற்றும் மிதுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புதுமுகம் சரிதா, ராதாரவி, குயிலி, எம். எசு. பாசுகர், ஆர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, நிழல்கள் ரவி, கணேஷ்கர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எல். வைத்தியநாதனின் மகன் எல். வி. கணேசன் இசை அமைத்துள்ளார். இது 2008 அக்டோபர் 31 அன்று வெளியானது.[1][2]

தீயவன்
இயக்கம்பி. கதிர்
தயாரிப்புபி. கதிர்
கதைபி. கதிர்
இசைஎல். வி. கணேசன்
நடிப்பு
  • ஸ்ரீரஞ்சன்
  • உதய்
  • மிதுனா
ஒளிப்பதிவுஎஸ். கருணாகரன்
படத்தொகுப்புஓ. ரவிசங்கர்
கே. மகாவிஷ்ணு
கலையகம்ஈஸ்வர் கிரியேசன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 31, 2008 (2008-10-31)
ஓட்டம்165 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

பல விளம்பரப் படங்களை இயக்கியவரான பி. கதிர், ஈஸ்வர் கிரியேஷன்ஸின் பதாகையில் காதல் மர்மத் திரைப்படமான தீயவன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். புதுமுகங்களாக தயாரிப்பாளரின் மகன் ஸ்ரீராஞ்சன் மற்றும் உதய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமானார்கள். மா மதுரை (2007) படத்தில் அறிமுகமான மிதுனா கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். மூத்த இசைக்கலைஞர் எல். வைத்தியநாதனின் மகன் எல். வி. கணேசன் இப்படத்திற்காக இசை அமைத்தார். எல். வி கணேசனின் குழந்தை பருவ நண்பராக இருந்த நடிகர் சிலம்பரசன் ஒரு பாடலைப் பாடுவதாக வதந்தி பரவியது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஊட்டி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் படமாக்கப்பட்டது. சென்னையில் ஒரு பாடலின் படப்பிடிப்பின் போது, நடிகை மிதுனா காலில் காயம் அடைந்தார்.[3][4][5][6][7][8]

இசை

படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் எல். வி. கணேசன் மேற்கொண்டார். 2008 இல் வெளியிடப்பட்ட பாடல் பதிவில் ஐந்து பாடல்கள் இருந்தன.[9][10]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் முத்துவிஜயன். 

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஏத்திகிட்டா போதவரும்"  எல். வி. கணேசன் 04:29
2. "மஞ்சள் நிலா"  பிரசண்ணா, பத்மலதா 05:01
3. "செப்டம்பர் தாண்டி"  சத்தியன், பாப் ஷாலினி 05:11
4. "கட்ட கட்ட"  யுகேந்திரன் 05:03
5. "உயிரோடு வா"  ஜெய்கிரிப்ட், கங்கா 04:15
மொத்த நீளம்:
23:59

குறிப்புகள்

  1. "Theeyavan (2008) Tamil Movie". spicyonion.com. https://spicyonion.com/movie/theeyavan/. 
  2. "Jointscene : Tamil Movie Theeyavan". jointscene.com இம் மூலத்தில் இருந்து 19 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110119161028/http://www.jointscene.com/movies/Kollywood/Theeyavan/1640. 
  3. "Negative Titles in Kollywood". kollywoodtoday.net. 16 February 2008. http://www.kollywoodtoday.net/news/negative-titles-in-kollywood/. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Kettavan musically connected to Theeyavan". chennai365.com. http://chennai365.com/news/kettavan-musically-connected-to-theeyavan/. 
  5. "'தீயவன்' சிம்பு!" (in Tamil). filmibeat.com. 8 February 2008. https://tamil.filmibeat.com/specials/08-simbu-now-turns-as-theeyavan.html. 
  6. "மிதுனாவுக்கு எலும்பு முறிவு" (in Tamil). filmibeat.com. 24 May 2008. https://tamil.filmibeat.com/heroines/24-mithuna-breaks-her-leg-in-shooting.html. 
  7. "தீயவன் படத்தை ரிலீஸ் செய்ய தடை" (in Tamil). filmibeat.com. 6 October 2008. https://tamil.filmibeat.com/specials/06-hc-stays-theeyavan-release.html. 
  8. "Court vacates interim stay on Theeyavan!". filmibeat.com. 11 October 2008. https://www.filmibeat.com/tamil/news/2008/court-vacate-stay-theeyavan-111008.html. 
  9. "Theeyavan (2008) - Ganesh LV". mio.to இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170331103627/http://mio.to/album/Theeyavan+(2008). 
  10. "Theeyavan Songs". raaga.com. https://www.raaga.com/tamil/movie/Theeyavan-songs-T0001327. 
"https://tamilar.wiki/index.php?title=தீயவன்&oldid=34198" இருந்து மீள்விக்கப்பட்டது