திருவிசைப்பா
திருவிசைப்பா சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று திருப்பல்லாண்டு. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்போர் அந்த ஒன்பதின்மர்.[1]
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
பட்டியல்
ஆசிரியர் | பாடல் பெற்றதலம் | பாடிய பதிகங்களின் எண்ணிக்கை |
---|---|---|
திருமாளிகைத்தேவர் | தில்லை | 45 (1-45 பாடல்) |
சேந்தனார் | திருவீழிமிழலை,திருவாவடுதுறை,திருவிடைக்கழி | 3 (46-79 பாடல்) |
கருவூர்த்தேவர் | 10 (80-182 பாடல்) | |
பூந்துருத்தி நம்பி காடநம்பி | 2 (183-194 பாடல்) | |
கண்டராதித்தர் | தில்லை | 1 (195-204 பாடல்) |
வேணாட்டடிகள் | 1 (205-214 பாடல்) | |
திருவாலி அமுதனார் | 4 (215-256 பாடல்) | |
புருடோத்தம நம்பி | 2 (257-278 பாடல்) | |
சேதிராயர் | 1 (279-288 பாடல்) | |
சேந்தனார் திருப்பல்லாண்டு | (289-301 பாடல்) |