செல்வ மகள்

செல்வ மகள் 1967 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள்[1][2]

செல்வ மகள்
திரைப்படத் தலைப்பு
இயக்கம்கே. வி. ஸ்ரீநிவாஸ்
தயாரிப்புடி. எஸ். ராஜசுந்தரேசன்
கதைசுப்பு ஆறுமுகம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ராஜஸ்ரீ
ஸ்ரீகாந்த்
நாகேஷ்
மேஜர் சுந்தரராஜன்
ஒளிப்பதிவுசி. ஏ. எஸ். மணி
படத்தொகுப்புபி. வி. நாராயணன்
கலையகம்சரவணா ஸ்கிரீன்
விநியோகம்ஜி. என். வேலுமணி
வெளியீடு20 ஆகஸ்டு 1967
ஓட்டம்119 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

பல திருட்டுக்குற்றங்களை அடுத்து பலராமன் (மேஜர் சுந்தரராஜன்) தன் மனைவி பார்வதியையும் (பண்டரிபாய்) மகனையும் பிரிந்து நாட்டை விட்டு ஓடிப்போகிறான். சந்தர்ப்பவசத்தால் தாயும் மகனும் பிரிகின்றனர். இளம் பையனைக் கண்ட ஒரு நல்லவர் அவனுக்கு சேகர் (ஜெய்சங்கர்) எனப் பெயரிட்டு, வளர்த்து ஆளாக்குகிறார். அவனும் நன்றாகக் கல்வி கற்று முன்னேறுகிறான். சேகர், சாரதா (ராஜஸ்ரீ) என்ற பெண்ணைக் காதலிக்கிறான். சாரதா ஒரு பணக்கார பேங்கரான ரங்கநாதன் (வி. எஸ். ராகவன்) என்பவரின் ஒரே மகள். இந்த நிலையில் பலராமன் நாட்டுக்குத் திரும்பி வந்து பாலசுந்தரம் என்று பெயரை மாற்றிக் கொள்கிறான். தன் இன்னொரு மனைவியின் மகனான மோகன் (ஸ்ரீகாந்த்) என்பவனுடன் சேர்ந்து ஒரு நேர்மையற்ற வியாபாரத்தைத் தொடங்குகிறான். ரங்கநாதனைக் குறி வைக்கிறான். அதே சமயம் மோகன் சாரதா மேல் கண் வைக்கிறான். ஏமாற்றுகளும் தந்திரங்களும் தொடருகின்றன. முடிவில் கடந்த கால உண்மைகள் எவ்வாறு வெளியாகின்றன என்பதே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

செல்வ மகள்
பாடல்கள்
வெளியீடு1967
ஒலிப்பதிவு1967
இசைப் பாணிதிரைப்பட மெல்லிசை
நீளம்15:06
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்எம். எஸ். விஸ்வநாதன்

இத் திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல்களை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதினர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.

வரிசை
எண்
பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு(m:ss)
1 அவன் நினைத்தானா டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன் 4:26
2 யே பறந்து செல்லும் டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா 4:41
3 குயிலாக நான் வாலி 3:52
4 வெண்ணிலா முகம் டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி 3:41

மேற்கோள்கள்

  1. "selva magal". spicyonion இம் மூலத்தில் இருந்து 4 மார்ச்சு 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304095110/http://spicyonion.com/movie/selva-magal/. பார்த்த நாள்: 2016-11-20. 
  2. "selva magal" இம் மூலத்தில் இருந்து 10 மார்ச்சு 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160310184838/http://www.in.com/tv/movies/jaya-tv-147/selva-magal-34181.html. பார்த்த நாள்: 2016-11-20. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செல்வ_மகள்&oldid=33572" இருந்து மீள்விக்கப்பட்டது