சிஷ்யா என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். செல்வா இயக்கிய இந்த படத்தில் கார்த்திக், ரோஷினி, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரங்கை வி. சுந்தர் தயாரித்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்தார். படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[1]

சிஷ்யா
இயக்கம்செல்வா
தயாரிப்புதரங்கை வி. சுந்தர்,
தரங்கை வி. சந்திரசேகர்
கதைசெல்வா
இசைதேவா
நடிப்புகார்த்திக்
ரோஷினி
ஒளிப்பதிவுபி. பாலமுருகன்
படத்தொகுப்புஎன். ராஜூ
கலையகம்சிறீ இராஜலட்சுமி அம்மன் சினி ஆர்ட்ஸ்
வெளியீடு25 ஏப்ரல் 1997
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

அமைச்சரின் மகள் ஸ்ருதி ( ரோஷினி ) தில்லியில் இருந்து தன் குடும்பத்தாருக்குத் தெரியாமல் சென்னைக்கு வந்துவிடுகிறாள். அவள் அரவிந்தனை ( கார்த்திக் ) காதலிக்கிறாள். ஆனால் சிபிஐ அதிகாரியான ( நிழல்கள் ரவி ) அவளைக் கண்டுபிடித்து தில்லிக்கு திருப்பி அனுப்புகிறார். இதன் மூலமாக அந்த இருவரும் பிரிக்கப்படுகின்றனர். இதன் பின்னர் என்ன ஆனது என்பதே கதையின் முடிவு.

நடிப்பு

இசை

இப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[2][3]

வரவேற்பு

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கே. என். விஜயன் எழுதிய விமர்சனத்தில், "சிஸ்யாவில் நகைச்சுவை ஒரு வலுவான பகுதியாக உள்ளது. அது மட்டுமே திரைப்படத்தை தூக்கி நிறுத்துகிறது.

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிஷ்யா&oldid=33412" இருந்து மீள்விக்கப்பட்டது