ரோஷினி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரோஷினி
பிறப்புராதிகா சாதனா
19 சூன் 1979 (1979-06-19) (அகவை 45)
இந்திய ஒன்றியம், மகாராட்டிரம், மும்பை
மற்ற பெயர்கள்ரோஷினி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1997–1998
உறவினர்கள்ஜோதிகா (சகோதரி)
நக்மா (ஒன்றுவிட்ட சகோதரி)

ரோஷினி என்ற திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட ராதிகா சாதனா ஒரு முன்னாள் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 1997-1998 வரை தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார். [1] [2] இவர் நடிகை ஜோதிகாவின் தங்கை.

தொழில்

நக்மாவின் பரிந்துரைக்குப் பிறகு, ரோஷினி செல்வாவின் நகைச்சுவைத் திரைப்படமான சிஷ்யாவில் நடிகையாக அறிமுகமானார். அதில் கார்த்திக்குடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். [3] பின்னர் இவர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாஸ்டர் (1997) படத்தில் நடித்தார்.

ரோஷினி நடிப்புக்கு வாய்ப்புள்ள பாத்திரங்களை ஏற்க ஆர்வமாக இருந்தார். இதனால் 1997 இன் பிற்பகுதியில் பல வாய்ப்புகளை நிராகரித்தார். அவை கவர்ச்சியான பாத்திரங்களாக இருந்தன. இவர் அதைத்தொடர்ந்து நடிகை மந்த்ரா படத்தை நிராகரித்த பின்னர், அருண்குமார் ஜோடியாக கே. பாலசந்தரின் தயாரிப்பான துள்ளித் திரிந்த காலம் (1998) இல் அவர் பணியாற்றினார். இந்த படமும் இவரது நடிப்பும் கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாக மிதமான வெறியைப் பெற்றது. [4] இருப்பினும், அதன்பிறகு, நெப்போலியன் ஜோடியாக புலி பிறந்த மண் போன்ற படங்களில் நடித்தார் அவை வெளிவரவில்லை. அதன் பின்னர் திரைத்துறையிலிருந்து விலகினார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை

ரோஷினி நடிகைகள் நக்மா மற்றும் ஜோதிகாவின் தங்கை. [6]

திரைப்படவியல்

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி
1997 சிஷ்யா பூஜா / அனு தமிழ்
குரு ப்ரீத்தி தெலுங்கு
1998 பவித்ர பிரேமா ராணி தெலுங்கு
சுப லேகலு தெலுங்கு
துள்ளித் திரிந்த காலம் தேவி தமிழ்

குறிப்புகள்

 

  1. https://www.filmibeat.com/tamil/movies/sishya.html#cast
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  3. "rediff.com, Movies: Showbuzz! Simran gives way to sis Monal".
  4. "Thulli Thirintha Kaalam: Movie Review". Archived from the original on 2017-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  5. "A-Z (V)". Archived from the original on 24 April 2013.
  6. "Tamil movies :Jyothika drives her sister away". www.behindwoods.com.
"https://tamilar.wiki/index.php?title=ரோஷினி_(நடிகை)&oldid=23354" இருந்து மீள்விக்கப்பட்டது