சர்வாதிகாரி (திரைப்படம்)

சர்வாதிகாரி என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், அஞ்சலிதேவி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்தனர். நம்பியார் எதிர் நாயகனாக நடித்திருந்தார்.[1] இப்படம் நம்பியாரை மிகப்பெரிய நட்சத்திரமாக நிலை நிறுத்தியது.[2] ம.கோ.இராவுக்கு இது 25வது படம். இது சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. திருச்சியில் அதிகபட்சமாக 141 நாட்கள் ஓடியது. இத்திரைப்படத்தின் மூலம் டி. பி. முத்துலட்சுமி நகைச்சுவை நடிகையாகவும் துணை நடிகையாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்தப் படம் தி கேலண்ட் பிளேட் என்ற அமெரிக்கத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3]

சர்வாதிகாரி
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைஉரையாடல்: ஏ. வி. பி. ஆசைத்தம்பி
திரைக்கதை: கோ. த. சண்முகசுந்தரம்
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
நம்பியார்
நாகைய்யா
வி. கே. ராமசாமி
அஞ்சலி தேவி
எம். சரோஜா
எஸ். ஆர். ஜானகி
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 14, 1951
நீளம்17212 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

மணிப்புரியின் அரசன் (புலிமூட்டை ராமஸ்வாமி) ஒரு கைப்பாவை. மன்னனை வீழ்தும் திட்டத்துடன் இருக்கிறார் அமைச்சர் மகாவர்மன் (எம். என். நம்பியார்). அதற்கு முட்டுக்கட்டையாக தளபதி உக்ரசேனர் (நாகையா) மற்றும் அவரது மெய்க்காப்பாளரான பிரதாபன் (ம.கோ.இரா) உள்ளனர். இதனால் பிரதாபனை மயக்க மீனா தேவியை (அஞ்சலி தேவி) அமைச்சர் அனுப்புகிறார். ஆனால் மீனாதேவி பிரதாபனை உண்மையாகவே காதலிக்கிறாள். பல திருப்பங்களுக்குப் பிறகு, பிரதாபனுடனான ஒரு மோதலில் மகாவர்மன் அம்பலப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அதன் பிறகு உக்ரசேனர் முதல் சனாதிபதியாகவும், பிரதாபன் புதிய தளபதியாகவும் நியமிக்கப்படுகின்றனர். மணிப்புரி இராச்சியம் ஒரு குடியரசாக மாறுகிறது.

நடிப்பு

படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் பெயர்களுக்கு ஏற்ப நடிகர்கள் பெயர் குறிப்பிடபட்டுள்ளது.

நடிகர்கள்

நடிகைகள்
நடனம்

தயாரிப்பு

இப்படத்திற்கான உரையாடலை கோ. த. சண்முகசுந்தரம் எழுதுவதாக இருந்தது ஆனால் அவரின் அரசியல் பணிகள் காரணமாக எழுத முடியாததால் அவர் ஏ. வி. பி. ஆசைத்தம்பியை உரையாடல் எழுத பரிந்துரைத்தார். திரைக்கதையை எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கோ. த. சண்முகசுந்தரம் எழுதினார். படத்திற்கு முதலில் வீரவாள் என்று பெயரிடப்பட்டது. ஆனால் ம.கோ.இரா சர்வாதிகாரி என்ற பெயரை பரிந்துரைத்தார். அதை ஏற்று டி. ஆர் சுந்தரம் படத்தின் பெயரை மாற்றினார்.[4]

பாடல்

இப்படத்திற்கு எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்தார்.[5] பாடல் வரிகளை கா. மு. ஷெரீப், அ. மருதகாசி, கே. பி. காமாட்சி சுந்தரம் ஆகியோர் எழுத திருச்சி லோகநாதன், டி. எம். சௌந்தரராஜன், எஸ். தட்சிணாமூர்த்தி, பி. ஏ. பெரியநாயகி, பி. லீலா ஆகிய பின்னணிப் பாடகர்கள் பாடினர்.

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நி:நொ)
1 "கண்ணாளன் வருவார் கண் முன்னே" பி. லீலா அ. மருதகாசி 03:23
2 "ஆணழகா என்னது கைகள் செய்த" திருச்சி லோகநாதன், பி. லீலா 03:06
3 "ஆண்டியாய்.... புவி மேல் பதவிகளையே" பி. லீலா 02:59
4 "ஓ ராயரம்மா சொகுசாக" பி. ஏ. பெரியநாயகி 07:06
5 "அல்லியின் முன் வெண்ணிலா வந்ததை" பி. லீலா 02:22
6 "ஜாக்ரதையா ஜாக்ரதை" எஸ். தட்சிணாமூர்த்தி, யு. ஆர். சந்திரா 02:27
7 "சண்டை தீர்த்து போச்சு" எஸ். தட்சிணாமூர்த்தி 02:20
8 "தடவி பார்த்து நல்லா இருந்தா" எஸ். தட்சிணாமூர்த்தி, பி. ஏ. பெரியநாயகி 04:11
9 "பஞ்சமும்... நம்ம பத்து வருஷம்" டி. எம். சௌந்தரராஜன் 02:28
10 "கரும்பின் இனிமை காதல் பேச்சு" 01:08
11 "தீது செய்யும் கூட்டம் என்றே" பி. லீலா 02:45

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்