சம்பத் ராம்
சம்பத் ராம் (Sampath Ram) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் எதிர்மறை பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர்.[2]
சம்பத் ராம் | |
---|---|
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1999 – தற்போது வரை[1] |
உயரம் | 6 அடி 0.5 அங்[1] |
தொழில்
தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட எத்தனை மனிதர்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் இவர் மூர்க்கனாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] இவர் முதல்வன் (1999) மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். அதில் இவர் காவல்துறை துணை ஆய்வாளராக நடித்தார். இருப்பினும், அப்படம் இவருக்கு ஒரு பெரிய வளர்ச்சியை வழங்கத் தவறிவிட்டது. தீனா (2001) படப்பிடிப்பில் ராம் தலையில் காயம் ஏற்பட்டது. தீனாவுக்குப் பிறகு, இவர் பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, திமிரு புடிச்சவன் (2018) படத்தில் ராம் ஒரு கனமான பாத்திரத்தில் நடித்தார். திமிரு புடிச்சவனுக்குப் பிறகு, காஞ்சனா 3 இல் அகோரியாக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.[3] ராம் தட்ரோம் தூக்குறோமில் நடிக்க கையெழுத்திட்டார், அப்படத்தில் இவர் முக்கிய எதிர் பாத்திரத்தில் நடிக்கிறார்.[4] இவரது இருநூறாவது படமான கசகசா படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[5]
திரைப்படவியல்
- படங்கள்
- முதல்வன் (திரைப்படம்) (1999)
- வல்லரசு (திரைப்படம்) (2000)
- பெண்ணின் மனதைத் தொட்டு (2000)
- தீனா (திரைப்படம்) (2001)
- சிட்டிசன் (திரைப்படம்)
(2001)
- தவசி (2001)
- காலாட்படை (2003)
- ஆஞ்சநேயா (2003)
- ஜனா (2004)
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
- ஆதி (திரைப்படம்) (2006)
- ஆழ்வார் (திரைப்படம்) (2007)
- போக்கிரி (திரைப்படம்) (2007)
- தண்டாயுதபாணி (2007)
- பிறகு (திரைப்படம்) (2007)
- கேள்விக்குறி (2007)
- ராமேஸ்வரம் (2007)
- பட்டைய கெளப்பு (2008)
- கார்த்திக் அனிதா (2009)
- தோரணை (திரைப்படம்) (2009)
- காதல் கதை (2009)
- ஜனகன் (2010; மலையாளம்)
- மதராசபட்டினம் (திரைப்படம்) (2010)
- 365 காதல் கடிதங்கள் (2010)
- அகம் புறம் (2010)
- செவனிஸ் (2011; மலையாளம்)
- வெடி (திரைப்படம்) (2011)
- வேலாயுதம் (திரைப்படம்) (2011)
- சட்டம் ஒரு இருட்டறை (2012)
- கள்ளத் துப்பாக்கி (2013)
- ஐசக் நியூட்டன் எஸ் / ஓ பிலிபோஸ் (2013; மலையாளம்)
- கோலி சோடா (2014)
- வல்லினம் (திரைப்படம்) (2014)
- கஜகேசரி (2014; கன்னடம்)
- அதிதி (2014)
- ஜெய்ஹிந்த் 2 (2014)
- பொங்கி எழு மனோகரா (2014)
- என்னை அறிந்தால் (திரைப்படம்) (2015)
- காக்கி சட்டை (2015 திரைப்படம்) (2015)
- மாரி (2015)
- கலை வேந்தன் (2015)
- அதிபர் (திரைப்படம்) (2015)
- புலி (2015)
- ஆக்டோபஸ் (2015; கன்னடம்)
- மஜிலி (2016)
- அர்த்தநாரி (2016)
- கபாலி (2016)
- தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் (2016)
- ஸ்பைடர் (2017; also in Telugu)
- தெரு நாய்கள் (2017)
- நிமிர் (2018)
- சாணக்கிய தந்திரம் (2018; மலையாளம்)
- ஆண்டனி (2018)
- திமிரு புடிச்சவன் (திரைப்படம்) (2018)
- விசுவாசம் (திரைப்படம்) (2019)
- பூமராங் (2019)
- காஞ்சனா 3 (2019)
- 100 (2019)
- கொலைகாரன் (2019)
- பப்பி (2019)
- எட்டுத்திக்கும் பற (2020)
- அசுரகுரு (2020)
- தட்றோம் தூக்றோம் (2020)
- கசகசா (2021)
- சங்கத்தலைவன் (2021)
- காடன் (TBA)
- மடை திறந்து (TBA)
- தொலைக்காட்சி
- எத்தனை மனிதர்கள் ( தூர்தர்ஷன் )
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 Kumar, Pradeep (4 May 2019). "Ajith advised me to get stunt training: actor Sampath Ram". https://www.thehindu.com/entertainment/movies/ajith-advised-me-to-get-stunt-training-actor-sampath-ram/article27034036.ece.
- ↑ "பெயர் தெரியா நட்சத்திரங்கள்..! - Kungumam Tamil Weekly Magazine". http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17153&id1=3&issue=20200823.
- ↑ Subramanian, Anupama (26 April 2019). "Sampath’s aghori act garners accolades". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/260419/sampaths-aghori-act-garners-accolades.html.
- ↑ Subramanian, Anupama (28 November 2018). "Sampath Ram bags full-length villain role". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/281118/sampath-ram-bags-full-length-villain-role.html.
- ↑ Sriram, Abhinaya (18 July 2020). "Actor Sampathram looks forward to his 200th film, after two decades in Kollywood". https://www.thehindu.com/entertainment/movies/actor-sampathram-looks-forward-to-his-200th-film-after-two-decades-in-kollywood/article32121265.ece.