காடன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காடன்
இயக்கம்பிரபு சாலமன்
கதைபிரபு சாலமன்
வனமாலி
(தொலுங்கு உரையாடல்)
நிரஞ்சன் ஐயங்கார்
(இந்தி உரையாடல்)
இசைசாந்தனு மொய்த்ரா
நடிப்புரானா தக்குபாடி
விஷ்ணு விசால்
புல்கிட் சாம்ராட்
சோயா உசேன்
ஸ்ரியா பில்கோங்கர்
ஒளிப்பதிவுஏ. ஆர். அசோக்குமார்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்ஈரோஸ் இன்டர்நேஷனல்
விநியோகம்ஈரோஸ் இன்டர்நேஷனல்
வெளியீடுமார்ச்சு 26, 2021 (2021-03-26)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
இந்தி

காடன் (Kaadan) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தை பிரபு சாலமன் எழுதி இயக்கியுள்ளார்.[1] ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் ரானா தக்குபாடி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா பில்கோங்கர், சோயா உசேன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2] இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கில் ஆரண்யா எனவும், இந்தியில் ஹாதி மேரே சாதி என்ற பெயரிலும் தயாரிக்கபட்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் சில நடிகர்கள் மாறுபட்டுள்ளனர்.[3]

இந்த படம் 2020 ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கோவியட்-19 பெருந்தொற்றால் தாமதமாகி 26 மார்ச் 2021 அன்று வெளியிடபட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படம் குறித்து 13 திசம்பர் 2017 அன்று அறிவிக்கப்பட்டது. யானைகளுக்கு எதிரான செயல்கள் தொடர்பான பிரச்சினையை வெளிச்சத்திற்கு கொண்டு வர பிரபு சாலமன் விரும்பினார்.[12] கும்கி 2 படத்தில் நடித்த உன்னிகிருஷ்ணன் என்ற யானையும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறது. இந்தி நடிகை சோயா உசேன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரானா தக்குபாடி ஆறு வாரங்களுக்கு சைவ உணவை சாப்பிட்டு இந்த படத்திற்காக 15 கிலோகிராம் எடையைக் குறைத்தார்.[13][14] தயாரிப்பாளர்கள் துவக்கத்தில் கல்கி கோய்ச்லின் இப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தனர். இருப்பினும், அவருக்கு பதிலாக ஸ்ரியா பில்கோங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[15] படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் விஷ்ணு விஷால் ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். புல்கிட் சாம்ராட் இந்தி பதிப்பில் ஒரு பாத்திரத்தை ஏற்றுள்ளார்.[16][17]

வெளியீடு

துவக்கத்தில் படமானது 2020 ஏப்ரல் 2 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக திரைப்பட வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.[18][19] பிறகு பொங்கல் பண்டிகையையொட்டி 20 சனவரி 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டப்பட்டது.[20] பின்னர், இந்த படம் 26 மார்ச் 2021 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி வெளியானது.[21]

இசை

இப்படத்திற்கான இசையை சாந்தனு மொய்த்ரா அமைத்துள்ளார். பாடல் வரிகளை ஸ்வானந்த் கிர்கிர் (இந்தி பதிப்பு) வனமலை (தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள்) எழுதியுள்ளனர்.

தமிழ்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தாலாட்டு பாடும்"  ஹரிசரண் 4:53
2. "சின்ன சின்ன"  ஹரிசரண் 4:24
3. "இதயமே"  ஹரிசரண் 5:06

மேற்கோள்கள்

 

  1. "'Haathi Mere Saathi' completes second schedule – Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/haathi-mere-saathi-completes-second-schedule/articleshow/64455673.cms. 
  2. Ians. "Rana unveils his new look in "Haathi Mere Saathi"". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rana-unveils-his-new-look-in-haathi-mere-saathi/article22349566.ece. 
  3. Iyengar, Shriram. "Haathi Mere Saathi first look: Rana Daggubati is intense, fierce as Bandev". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  4. 4.0 4.1 "Rana Daggubati on Twitter" (in en). Twitter. https://twitter.com/RanaDaggubati/status/947527148545351682. 
  5. "Haathi Mere Saathi: Vishnu Vishal joins Rana Daggubati's film". India Today (in English). பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.
  6. "Mukkabaaz actress Zoya Hussain to star in Haathi Mere Saathi?". Deccan Chronicle. 3 February 2018.
  7. S, Srivatsan (13 February 2020). "'Kaadan' is the toughest movie I've been a part of: Rana Daggubati". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/kaadan-is-the-toughest-movie-ive-been-a-part-of-rana-daggubati/article30808632.ece. 
  8. https://www.cinemaexpress.com/stories/news/2021/mar/04/haathi-mere-saathi-trailer-out-rana-daggubati-stands-between-elephants-and-encroachers-23132.html
  9. 9.0 9.1 9.2 9.3 "Prabhu Solomon's 'Kaadan' to release on April 2 – Times of India". The Times of India.
  10. "Rana's awaits the release of Aranya". The Times of India. 19 February 2020.
  11. Adsul, Riddhi. "Shriya Pilgaonkar Talks About Her Character In 'Haathi Mere Saathi', Calls It 'brave'". republicworld.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2021.
  12. "Kaadan is a soulful film: Rana Daggubati – Times of India". The Times of India.
  13. "Jungle Book: Rana Daggubati spends 200 days in different forests for 'Kaadan'". The New Indian Express.
  14. Dundoo, Sangeetha Devi (2 March 2020). "Into the wild: Rana Daggubati on 'Kaadan' and running with herds of elephants". The Hindu.
  15. "Shriya Pilgaonkar replaces Kalki Koechlin in Rana Daggubati's Haathi Mere Saathi". The New Indian Express. Archived from the original on 2021-06-22. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  16. "Vishnu Vishal wraps up 20-day schedule for Kaadan – Times of India". The Times of India.
  17. "Vishnu Vishal's look from Kaadan released". The New Indian Express.
  18. "Haathi Mere Saathi postponed due to coronavirus outbreak". https://www.cinemaexpress.com/stories/news/2020/mar/16/haathi-mere-saathi-postponed-due-to-coronavirus-outbreak-17569.html. 
  19. "Makers of Kaadan announces the film's postponement – Times of India". The Times of India.
  20. "Vishnu Vishal-Rana-starrer Kaadan slated for a Pongal release in theatres". The Times of India. 21 October 2020.
  21. "Rana Daggubati and Vishnu Vishal's 'Kaadan' to release on 26 March". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/rana-daggubati-and-vishnu-vishals-kaadan-to-release-on-march-26/articleshow/80130776.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காடன்&oldid=29489" இருந்து மீள்விக்கப்பட்டது