ஆர். கோவர்த்தனம்
ஆர். கோவர்த்தனம் (R Govardhanam, 21 பெப்ரவரி 1928 – 18 செப்டம்பர் 2017) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1]நாதஸ்வர ஓசையிலே... (பூவும் பொட்டும்), அந்த சிவகாமி மகனிடம்... (பட்டணத்தில் பூதம்) ஆகிய பிரபலமான பாடல்களை இசையமைத்தவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஆர். கோவர்த்தனம் |
---|---|
இறப்பு | 18 செப்டம்பர் 2017 |
பணி | இசையமைப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
பெற்றோர் | ராமச்சந்திர செட்டியார் |
வாழ்க்கைக் குறிப்பு
தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டவர் கோவர்த்தனம். பெங்களூரில் வசித்து வந்தார். தந்தை பெயர் இராமச்சந்திர செட்டியார். கோவர்த்தனத்தின் தமையன் ஆர். சுதர்சனம் ஒரு பிரபலமான இசையமைப்பாளர். இராமச்சந்திர செட்டியார் குடும்பத்துடன் சென்னைக்கு குடிபுகுந்தார். தந்தையும் கருநாடக இசை அறிந்தவர். தந்தையிடமும், தமையனாரிடமும் கோவர்த்தனம் கருநாடக இசையைப் பயின்றார். சென்னைக்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட ஜாதகம் (1953) முதன்முதலாக இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படத்திலேயே பி. பி. சிறினிவாஸ் தமிழில் பாடகராக அறிமுகமானார்.[2] எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ், தேவா எனப் பல இசையமைப்பாளர்களுக்கு 'இசை ஒருங்கிணைப்பாளராக' பணியாற்றியிருந்தார்.
இசையமைத்த திரைப்படங்கள்
- ஜாதகம் (1953)
- ஒரே வழி (1959)
- கைராசி (1960)
- பட்டணத்தில் பூதம் (1967)
- பூவும் பொட்டும் (1968)
- அஞ்சல் பெட்டி 520 (1969)
- பொற்சிலை (1969)
- வரப்பிரசாதம் (1976)
மறைவு
புதிய பறவை பாடல் ஒன்று மீள்-இசையமைப்பொன்றின் போது மின்சாரம் தாக்கி, தனது செவித்திறனை இழந்தார். 1990-களில் சென்னையில் இருந்து சேலத்திற்குக் குடிபுகுந்தார். இவர் 18 செப்டம்பர் 2017 அன்று தனது 91வது அகவையில் சேலத்தில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "இசையமைப்பாளர் கோவர்த்தன் காலமானார்". தினமணி. 19 செப்தெம்பர் 2017. http://www.dinamani.com/tamilnadu/2017/sep/19/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2775457.html. பார்த்த நாள்: 19 செப்தெம்பர் 2017.
- ↑ "ஆர்.கோவர்த்தனம் அன்றும் இன்றும்!". தினமலர். 23 மே 2016 இம் மூலத்தில் இருந்து 26 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211026080731/http://www.dinamalarnellai.com/web/news/8412. பார்த்த நாள்: 19 ஆகத்து 2017.