பொற்சிலை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பொற்சிலை
திரைப்பட பாடல் நூலின் அட்டைப்படம்
இயக்கம்ஏ. வி. பிரான்சிசு
தயாரிப்புசி. ஆர். குமரேசன்
அகத்தியம் புரொடக்சன்சு
பி. கோவிந்தராஜ்
இசைஆர். கோவர்த்தனம்
நடிப்புஜெமினி கணேசன்
விஜயகுமாரி
வாணிஸ்ரீ
ஒளிப்பதிவுகே. வி. கன்னியப்பன்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
நடன அமைப்புதங்கப்பன், சலீம்
வெளியீடுமார்ச்சு 14, 1969
நீளம்3675 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பொற்சிலை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியம் புரொடக்சன்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

கதைச் சுருக்கம்

செருப்பு தைக்கும் ஒரு ஏழைத் தொழிலாளியின் மகள் பொற்சிலை. தாழ்ந்த ஜாதியில்பிறந்துவிட்டோம் என்று, அவளுக்கே தெரியும் - இருந்தாலும் அவள் இதயம் அதை நினைக்கவில்லை. இவள் ஒரு ரத்தின வியாபாரியின் மகனை விரும்புகிறாள்! பெரிய கோடீஸ்வரன் மகனான அவரைக் கணவராக அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்!

எத்தனையோ ஏற்ற தாழ்வுகள். மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம். அவனை நினைப்பதற்கே தகுதி இல்லை. அவள் இருப்பதோ சேரியில் குடிசை. “அவன்” வாழ்வதோ பெரிய மாளிகையில். இவளோ சமுதாய விரோதிகளால் பிரிக்கப்பட்ட தாழ்ந்தகுலம். அவனோ மக்களால் கை கூப்பி வணங்கும் உயர்ந்தகுலம்.

இன்னும் எத்தனையோ ஏற்ற தாழ்வுகள். அத்தனையையும் மறந்து, பொற்சிலை தன் இதயத்தில் அவனையே நினைக்கிறாள். அவளது எண்ணப்படியே அவனை மணக்கிறாள். கணவனாக கரம்பிடிக்கிறாள். இது எப்படி முடிந்தது என்பது கதை.

இசை

படங்களுக்கு "ஸ்ரீ மகா கணபதி பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.

ஒலித் தடங்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஸ்ரீ மகா கணபதி"   ஜேசுதாசன் குழுவினர்  
2. "நாளைப் பொழுது"  கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்  
3. "கட்டித் தங்கம்"  கண்ணதாசன்எஸ். ஜானகி  
4. "அழகைப் பாட வந்தேன்"  கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா  
5. "அக்கரையில் அவனிருக்க"  கண்ணதாசன்பி. சுசீலா  

மேற்கோள்கள்

  1. "பொற்சிலை - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. Retrieved 2022-02-01.
"https://tamilar.wiki/w/index.php?title=பொற்சிலை&oldid=453171" இலிருந்து மீள்விக்கப்பட்டது