வேட்டைக்காரன் (2009 திரைப்படம்)
வேட்டைக்காரன் | |
---|---|
இயக்கம் | பாபு சிவன் |
இசை | விஜய் அன்டனி |
நடிப்பு | விஜய் அனுஷ்க்கா |
கலையகம் | ஏவிஎம் நிறுவனம் |
வெளியீடு | 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹15 கோடி |
மொத்த வருவாய் | ₹100 கோடி[1][2] |
வேட்டைக்காரன் (Vettaikkaran) சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் "விஜய்",அனுஷ்கா,மற்றும் பலர் நடிப்பில் 2009 திசம்பர் 18 அன்று வந்த தமிழ்த் திரைப்படமாகும்.[3][4] இப்படம் 2007-இல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
கதை
தூத்துக்குடியை சேர்ந்தவர் ரவி (விஜய்). ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் அங்கு நியாயம் கேட்க ரவி சென்று விடுவான். அதனால் ஊரில் ரவியின் பெயர் 'போலீஸ் ரவி' என்று ஊர் மக்கள் சூட்டினர். ரவியின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம், சென்னையில் வசிக்கும் தேவராஜ் (ஸ்ரீ ஹரி) போன்று ஒரு பெரிய போலீஸ் ஆபிசர் ஆக வேண்டும் என்பது தான். 12 முடித்த பின்பு 'போலீஸ் ரவி' சென்னையில் ஒரு கல்லூரியில் சேருகிறான். சென்னையில் சுசீலா (அனுஷ்கா ஷெட்டி) என்னும் பென்னை பார்த்தவுடன் காதலில் விழுகிறான். சுசீலாவின் பாட்டியின் உதவியுடன் சுசீலாவும் ரவியை காதலிக்கிறாள். ரவி படிக்கும் கல்லூரியில் உமாவும் படிக்கிறாள். ரவியும் உமவும் நன்பர்களாக பழகுகின்றனர்.
சென்னையில் செல்லா எனும் ஒரு ரவுடி, தான் ஆசை கொள்ளும் அனைத்து பெண்களையும் அடைய வேண்டும் எனும் என்னம் கொண்டவன். செல்லா உமாவை ஒரு நாள் பார்த்துவிட்டு, உமாவை அனுப்புமாறு உமாவின் தந்தையை மிரட்டுவான். இதை அறிந்த ரவி செல்லாவையும் அவன் ஆட்களையும் அடித்து துவம்சம் செய்து விடுவான். செல்லாவின் தந்தை வேதனாயகம் (சலிம் கோஸ்) தன் கையில் உள்ள ஒரு காவல் அதிகாரி 'கட்டபொம்மன்' (ஷியாஜி ஷிண்டே) மூலம் ரவியை போலி என்கௌன்டெர் (encouonter) மூலம் 'பாம் செல்வம்' என்பவனுக்கு பதிலாக கொள்வதர்க்கு ஏற்பாடுகள் செய்வான். அதில் இருந்து ரவி தப்பித்து விடுவான். ரவி, தேவராஜ் வசிக்கும் வீட்டிற்கு சென்ற பின்பு, வேதனாயகம் தேவராஜின் குடும்பத்தை அழித்துவிட்டு அவரையும் குருடணாக்கி விட்டான் என்று.
ரவி எங்கு செல்வது என தெரியாமல் வேதனாயகமிடம் செல்லும் பொழுது, வேதனாயகம் நீ என் அடிமையாக இருக்க வேண்டும் என்று கூறி அவன் வாழ்க்கை வர்லாற்றை ரவியிடம் கூறுவான். பின்பு ரவியும் அவன் நன்பர்களும் சேர்ந்து வேதனாயகத்தையும் அவன் கூட்டாலிகளையும் எதிர்த்து போராடுவார்கள். இப்போராட்டத்தில் இருவ்ர் பக்கத்திலும் உயிர் இழப்புகள் ஏற்படும். கடைசியில் யார் ஜெய்கிறார்கள், ரவி போலீஸ் ஆகிறான இல்லையா என்பது தான் மீதி கதை.
நடிகர்கள்
- "காவலர்" இரவியாக விஜய்
- சுசீலா அக்கா சூசியாக அனுஷ்கா
- முக்கிய எதிரியாக வேதநாயகம் வேடத்தில் சலீம்கவுஸ்
- இரவியின் தோழியான உமாவாக சஞ்சிதா படுகோனே
- இரவியின் நெருங்கிய நண்பரான சுகுவாக சத்யன்
- ஷுகரிதுணை ஆணையர் தேவராஜ்யாக ஐபிஎஸ் , இரவி முன்மாதிரி
- ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியாக ஏ.சி.பி கட்டபோம்மனாக சாயாஜி சிண்டே
- இரவியின் நண்பரான வலயபதியாக ஸ்ரீநாத்
- வேதநாயகத்தின் மகன் செல்ல வேதநாயகமாக இரவிசங்கர்
- இரவியின் தந்தையாக டெல்லிகணேஷ்
- இரவியின் தாயாக இலட்சுமிராமகிருஷ்ணன்
- சுசீலாவின் பாட்டியாக சுகுமாரி
- உமாவின் தந்தையாக மாணிக்க விநாயகம்
- சென்னை போலீஸ் கமிஷனராக இரவி பிரகாஷ்
- கட்டட உரிமையாளராக கொச்சின் ஹனீஃபா
- பாலா சிங்யாக இராஜசேகர்
- ஜீவா சண்டியாக
- செல்லாவின் மனைவியாக ஜெயஸ்ரீ
- ஜானுவாக பி.ஜெயலட்சுமி
- நிருபராக மனோபாலா
- கலிராணி
- நியா ரென்ஜித்
- இம்மான் அன்னாச்சி
- ஜேசன் சஞ்சய் ("நான் ஆதிச்சா" பாடலில் சிறப்பு தோற்றம்)
- மதலசா சர்மா (சிறப்புத் தோற்றம்)
- அசோக் ராஜா ("புலி உரமுடு" பாடலில் சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நீ:நொ) | பாடலாசிரியர் | படம்பிடித்த இடம் |
1 | "நான் அடிச்சா" | சங்கர் மகாதேவன் | 4:37 | கபிலன் | ராஜ் முந்திர் |
2 | "கரிகாலன்" | சுசீத் சுரேசன், சங்கீதா ராஜேஷ்வரன் | 4:17 | கபிலன் | பொள்ளாச்சி |
3 | "புலி உறுமுது" | ஆனந்த், மகேஷ் விநாயகம் | 4:17 | கபிலன் | ஏவிஎம் ஸ்டுடியோ மற்றும் மதுரை |
4 | ஒரு சின்னத் தாமரை" | கிரிஷ், தினேஷ் கணகரத்னம், பொனிகில்லா, சுசித்ரா | 4:35 | விவேக் | புனே |
5 | "என் உச்சிமண்டைல" | கிருஷ்ணா ஐயர், ஷோபா சந்திரசேகர், சாருலதா மணி, சக்திஸ்ரீ கோபாலன் | 4:12 | அண்ணாமலை | ஏவிஎம் ஸ்டுடியோ |
விமர்சனங்கள்
சிஃபி இந்த படத்திற்கு 4/5 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது, மேலும் "படத்திற்கு மேஜர் பிளஸ் விஜய் ஆண்டனி இசையமைத்த ஐந்து பெப்பி பாடல்கள் நன்றாக நடனமாடப்பட்டுள்ளன ... கனல் கண்ணனின் ஆக்ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக நடனமாடப்படுகின்றன. கோபிநாத்தின் கேமரா மென்மையாய் உள்ளது மற்றும் படத்தொகுப்பு வேகமானது ". பிகன்டுஉட்ஸ் 2/5 மதிப்பிடப்பட்டது மேலும் குறிப்பிடப்பட்ட "கவர்ச்சியான திரைத் தோற்றம் விஜய் , இன்பம் இசை தடங்கள், ஜொலிக்கும் ஸ்டண்ட், உமிழும் பஞ்ச் கோடுகள், கையொப்பம் இலகுவான தருணங்களை மற்றும் கால் தட்டுவதன் எண்கள், திரைப்பட குடும்ப பார்வையாளரை மகிழ்விக்கவும் செய்கிறது, மற்றும் இயக்குனர் என்று கூறினார் பி.பாபுசிவன் ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா 5 இல் 2.5 நட்சத்திரங்களை வழங்கியது, இரண்டாம் பாதியில் கதையை சரியாக சொல்லத் தவறியதற்காக பாபுசிவனை விமர்சித்தார்.
மேற்கோள்கள்
- ↑ P, Kanmani (June 22, 2022). "Vettaikaaran collects 100 crore worldwide in its 100 days run at the box office". Asianet News Network Pvt Ltd. Archived from the original on May 23, 2024. பார்க்கப்பட்ட நாள் May 23, 2024.
- ↑ "Vettaikaaran collects 70 crore in Tamil nadu box office alone". IndiaGlitz.com. 2011-02-23. பார்க்கப்பட்ட நாள் 2024-03-28.
- ↑ "2009- Kollywood Hits & Misses!". Sify. Archived from the original on 10 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 February 2012.
- ↑ "Vijay-Anushka: Puli Veta releasing in 1st week of March". Ragalahari.com. 22 February 2011. Archived from the original on 4 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011.