வில்லுப்பாட்டுக்காரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வில்லுப்பாட்டுக்காரன்
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புகருமாரி கந்தசாமி
ஜே. துரை
கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்விஜயா மூவிஸ்
வெளியீடுநவம்பர் 27, 1992 (1992-11-27)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வில்லுப்பாட்டுக்காரன் (Villu Pattukaran) 1992 ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் ராணி நடிப்பில், கங்கை அமரன் இயக்கத்தில், கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை தயாரிப்பில், இளையராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2].

கதைச்சுருக்கம்

வில்லுப்பாட்டு கலையில் சிறந்து விளங்கும் கலைஞன் காளிமுத்து (ராமராஜன்). அந்த கிராமத்தின் தலைவர் (சண்முகசுந்தரம்) அங்குள்ள கோயிலைப் புதுப்பித்துக்கட்ட முடிவுசெய்கிறார். அதற்கான நிதி வசூலிக்கும் பொறுப்பை காளிமுத்து வசம் ஒப்படைக்கிறார். அந்தக் கோயிலை புனரமைப்பதற்கான நிதி கேட்டு இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்திக்கின்றனர். அவரும் கோயில் கட்டுவதற்கான நிதிஉதவி செய்கிறார்.

போதுமான நிதி கிடைத்த பிறகு கோயில் கட்டுவதற்கு சிற்பியாக அருகிலுள்ள ஊரின் சிற்பியை (எம். என். நம்பியார்) ஒப்பந்தம் செய்கிறார்கள். சிற்பியின் மகள் அபிராமி (ராணி). சிற்பியும் அவரது மகள் ராணியும் கோயில் கட்டுவதற்காக அந்த ஊருக்கு வருகின்றனர். கோவில் கட்டுமானப்பணிகள் துவங்குகிறது. அபிராமியும் காளிமுத்துவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். அபிராமியின் தந்தைக்கு அவளுடைய முறை மாமனான ராஜசேகரனுக்கு (சந்திரசேகர்) திருமணம் செய்துவைக்க விருப்பம். அந்த கிராமத்துத் தலைவரின் மகன் செல்லதுரையும் (விகாஷ் ரிஷி) ராணியை அடைய எண்ணுகிறான்.

கோயில் வேலைமுடிந்து குடமுழுகிற்குத் தயாராகிறது. அதேநேரம் ராஜசேகரனுக்கும் அபிராமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. கோயில் குடமுழுக்கில் தடங்கல் ஏற்படுத்த செல்லதுரை சதிசெய்கிறான். அவனுடைய சதியை முறியடித்து குடமுழுக்கை வெற்றிகரமாக நடத்துகிறான் காளிமுத்து. இறுதியில் ராஜசேகரனின் சம்மதத்துடன் காளிமுத்து - அபிராமி திருமணம் நடக்கிறது.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா.[3] பாடலாசிரியர்கள் கங்கை அமரன் மற்றும் வாலி. இதில் கவிஞர் வாலி உதடு ஒட்டாமல் பாடக்கூடிய தந்தேன் தந்தேன் என்ற ஒரு பாடலை மட்டுமே இயற்றினார் [4].

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 கலைவாணியோ ராணியோ எஸ். பி. பாலசுப்ரமணியன் 5:04
2 பொன்னில் வானம் எஸ். ஜானகி 4:29
3 சக்தி பகவதி மனோ, ராஜகோபால் 2:31
4 சோலை மலை ஓரம் எஸ். பி. பாலசுப்ரமணியன், எஸ். ஜானகி 4:52
5 தந்தேன் தந்தேன் மலேசியா வாசுதேவன் 4:33
6 வானம் என்னும் சித்ரா 4:57

விமர்சனம்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: படத்தின் கதை பலவீனமாக உள்ளது. ஆனால் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது[5].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வில்லுப்பாட்டுக்காரன்&oldid=37654" இருந்து மீள்விக்கப்பட்டது