திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்
தேவாரம்,திருப்புகழ் பாடல் பெற்ற திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 12°59′06″N 80°15′37″E / 12.984884°N 80.260330°E |
பெயர் | |
பெயர்: | திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவான்மியூர் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மருந்தீஸ்வரர் |
உற்சவர்: | சந்திரசேகரர் |
தாயார்: | திரிபுரசுந்தரி |
சிறப்பு திருவிழாக்கள்: | சூரசம்ஹாரம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்தரம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம்,திருப்புகழ் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் |
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் (Marundeeswarar Temple) சென்னை—புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]
இறைவன், இறைவி
இங்கு மூலவர் மருந்தீசுவரர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார், தாயார் திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சன்னதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முன்னே தெப்பகுளமும், உள்ளே ஒரு சிறிய தடாகமும், நந்தவனம் கோயிலுக்கு உள்ளேயேயும் அமைந்துள்ளது.
அமைப்பு
இராஜ கோபுரம் கிழக்குப் பார்த்த நிலையில் உள்ளது. இராஜ கோபுரத்தை அடுத்து உள்ளே முன் மண்டபம் உள்ளது. அதனை அடுதது கோயிலின் வலப்புறம் திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி உள்ளது. கோயிலின் வெளியே குளம் உள்ளது. கோயிலின் வெளி திருச்சுற்றில் மூன்று விநாயகர்கள், வேதாகம பாடசாலை, நூலகம், திருமுறை மண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதிக்கு வலப்புறம் தியாகராசர் சன்னதி உள்ளது. மூலவர் மருந்தீசர் சன்னதியின் உள் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நடராசர் சன்னதி, 108 சிவலிங்கங்கள், கால பைரவர், கேதாரீஸ்வரர், இராமாநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், உண்ணாமலையம்மை, ஜம்புகேஸ்வரர், 67 நாயன்மார்கள், விநாயகர், நால்வர் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை திருச்சுற்றில் துர்க்கை, சண்டிகேஸ்வரர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, கணபதி ஆகியோர் உள்ளனர். மேற்கு வாயில் வழியின் வரும்போது கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன.
முக்கிய திருவிழாக்கள்
பிற சிறப்புகள்
- வருடம் 365 நாட்களும் இக்கோயிலில் சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
- நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும் உள்ளது.
- ஆன்மிக நூலகம் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
படக்காட்சிகள்
திருவான்மியூர் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருமயிலை |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருக்கச்சூர் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 25 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 257 |