என்னத்த கண்ணையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என்னத்த கண்ணையா
பிறப்புகே. எஸ். கண்ணையா[1]
1925
திண்டுக்கல் - அய்யப்பட்டி
இறப்பு7 ஆகத்து 2012(2012-08-07) (அகவை 87)[2]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1949–2012
வாழ்க்கைத்
துணை
இராஜம்
பிள்ளைகள்அசோகன், சாய்கணேஷ், அமுதா,
தனலட்சுமி, மகேஸ்வரி,
சண்முகபிரியா

என்னத்த கண்ணையா என்றறியப்படும் கண்ணையா, தமிழ்த் திரைப்பட நடிகராவார். முதலாளி எனும் திரைப்படத்தில் நடித்து, ஆரம்ப நாட்களில் ‘முதலாளி' கண்ணையா என அறியப்பட்டார். நான் எனும் திரைப்படத்தில் விரக்தியான மனநிலை கொண்டவராக நடித்தார். அதன்பிறகு ‘என்னத்த' கண்ணையா என அழைக்கப்படலானார்.[3]

திரை வாழ்க்கை

1924 இல் மதுரையில் பிறந்த இவர் 1942 முதல் டி. கே. சண்முகம், எம். ஜி. சக்கரபாணி ஆகியோரது நாடகக் குழுக்களில் நடிக்கத் தொடங்கினார்.[4] தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் வடிவேலுவுடன் "வரும்.... ஆனால் வராது....." என்ற நகைச்சுவைக் காட்சி மூலம் வெகுவாக அறியப்பட்டார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

  1. ரத்னகுமார் (1949)
  2. முதலாளி (1957)
  3. உலகம் சிரிக்கிறது (1959)
  4. மரகதம் (1959)
  5. பாசம் (1962)
  6. கறுப்புப் பணம் (1964)
  7. நீ (1965)
  8. குமரிப் பெண் (1966)
  9. சரஸ்வதி சபதம் (1966)
  10. நான் (1967)
  11. மூன்றெழுத்து (1968) - சுகாடி
  12. கண்ணன் என் காதலன் (1968) - ரத்னசாமி
  13. நம் நாடு (1969) - கண்ணையா
  14. துலாபாரம் (1969)
  15. சொர்க்கம் (1970)
  16. என் அண்ணன் (1970)
  17. ரிக்க்ஷாக்காரன் (1971)
  18. அருட்பெருஞ்ஜோதி (1971)
  19. வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)
  20. சக்தி லீலை (1972)
  21. பாக்தாத் பேரழகி (1973)
  22. நீதிக்கு தலைவணங்கு (1976)
  23. என்னைப்போல் ஒருவன் (1978)
  24. அழைத்தால் வருவேன் (1980)
  25. மருமகள் (1986)
  26. வீர பாண்டியன் (1987)
  27. ஊர்க்காவலன் (1987)
  28. சிவா (1989)
  29. ராசாத்தி கல்யாணம் (1989)
  30. மன்னன் (1992)
  31. மிடில் கிளாஸ் மாதவன் (2001)
  32. தொட்டால் பூ மலரும் (2006)
  33. தவம் (2007)
  34. படிக்காதவன் (2009)
  35. வெடி (2011)

இறப்பு

என்னத்த கண்ணையா 2012 ஆகத்து 7 அன்று சென்னையில் தனது 87 ஆவது வயதில் மறைந்தார். கண்ணையாவுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=என்னத்த_கண்ணையா&oldid=21554" இருந்து மீள்விக்கப்பட்டது