ஜனா
ஜனா | |
---|---|
இயக்கம் | ஷாஜி கைலாஸ் |
இசை | தீனா |
நடிப்பு | அஜித் சினேகா |
வெளியீடு | மே 2004 |
மொழி | தமிழ் |
ஜனா 2004ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஷாஜி கைலாஸ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார், கதாநாயகியாக சினேகா மற்றும் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் ரகுவரன், ராதாரவி, கருணாஸ், ஸ்ரீவித்யா நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தீனா இசை அமைத்துள்ளார்.
கதைச் சுருக்கம்
கிராமத்தில் வாழ்ந்து வரும் ஜனா (அஜித்), அங்கே வாழும் மக்களுக்காக குரல் கொடுக்கிறார். அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் அவரைச் சுற்றிலும் பல எதிரிகள் உருவாகுகிறார்கள். அதற்கெல்லாம் ஜனா பொறுமையாக இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு ஜனாவின் முந்தைய வாழ்க்கையை அறிய முடிகிறது.
மும்பையில் பிரபல ரவுடியான ஜனா அங்கே உள்ள அனைத்து ரவுடிகளும் பார்த்து பயப்படும் அளவுக்கு பயங்கரமாக இருக்கிறார். அங்கே பந்தாரியை கொன்று விட்டு தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கிராமத்தில் நல்லவராக வாழ்கிறார்.
நடிகர்கள்
- அஜித் குமார் - ஜனா
- சினேகா - மணிமேகலை
- ஸ்ரீவித்யா - ஜனாவின் அம்மாவாக
- மனோஜ் கே. ஜெயன் - ஜனாவின் சகோதரராக
- ராதாரவி - வீரபாண்டி
- ரகுவரன் - ஜனாவின் அப்பாவாக
- கருணாஸ்
- ரியாஸ் கான்
- சித்திக் - பந்தாரி
- டெல்லி கணேஷ்
தயாரிப்பு
இத்திரைப்படம் 2002ம் ஆண்டின் தொடக்கத்தில் "திருடா" என்னும் பெயரில் அறிவிக்கப்பட்டது. இதில் அஜித்குமாருடன் நடிகை திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் மற்ற திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருந்ததால் அவரால் இத்திரைப்படத்தில் நடிக்க இயலவில்லை.[1] அதற்குப் பின்னர் "ஜனா" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2002-ல் தொடங்கியது.[2][3] இத்திரைப்படத்தில் திரிஷாவுக்கு பதிலாக நடிகை சினேகா கதாநாயகியாக நடித்தார்.[4]
வெளியீடு
இத்திரைப்படத்தின் கதாநாயகன் அஜித் குமார் தனது பணியை சிறப்பாக செய்திருந்தாலும் இத்திரைப்படத்தின் கதையானது முன்னர் தமிழில் வெளியான "நாயகன், பாட்ஷா திரைப்படங்களுடன் ஒத்து இருப்பதாக அறியப்பட்டது.[5][6][7]
பின்னர் இத்திரைப்படம் தெலுங்கில் ரௌடி டான் என மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதற்கு பின்னதாக மெயின் ஹூன் சோல்சர் என மொழிமாற்றம் செய்யப்பட்டு குறுந்தகட்டில் வெளியானது.
பாடல்கள்
ஆறு பாடல்கள் உள்ள இத்திரைப்படம் இசையமைப்பாளர் தீனாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.
எண் | பாடல் | பாடியவர்கள் |
---|---|---|
1 | "ஒரு வானமாய்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | "தித்தித்திடவே" | பாம்பே ஜெயஸ்ரீ |
3 | "பொதுவா பலருக்கு" | கார்த்திக், அனுராதா ஸ்ரீராம் |
4 | "தகதிமி தகதிமி" | திப்பு |
5 | "பூச்சாண்டி வந்துட்டான்" | சுனிதா சாரதி |
6 | "கொஞ்சம் உறவினையும்" | சங்கர் மகாதேவன் |
மேற்கோள்கள்
- ↑ "www.ajithkumar.fr.fm". www.ajithkumar.fr.fm. http://ajithkumar.free.fr/derniere04.htm. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "Movies: The Ajith Interview". rediff.com. 2002-12-21. http://www.rediff.com/movies/2002/dec/21ajit.htm. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "www.ajithkumar.fr.fm". www.ajithkumar.fr.fm. http://ajithkumar.free.fr/derniere_g.htm. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "www.ajithkumar.fr.fm". www.ajithkumar.fr.fm. http://ajithkumar.free.fr/derniere_i.htm. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "AllIndianSite.com - Jana - It's All About movie". Kollywood.allindiansite.com இம் மூலத்தில் இருந்து 2012-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120511220945/http://kollywood.allindiansite.com/jana.html. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "Unleashed Entertainment in Tamil Cinema". Behindwoods.com. http://www.behindwoods.com/features/Reviews/reviews3/jana1.html. பார்த்த நாள்: 2012-08-06.
- ↑ "Jana". The Hindu. 2004-05-07 இம் மூலத்தில் இருந்து 2012-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110145523/http://www.hindu.com/thehindu/fr/2004/05/07/stories/2004050701940301.htm. பார்த்த நாள்: 2012-08-06.