கும்பகோணம் மும்மூர்த்தி விநாயகர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மும்மூர்த்திவிநாயகர் கோயில்

இருப்பிடம்

கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் கும்பகோணம் பிரம்மன் கோயில் கடைத்தெருவில் உள்ளது.

மூலவர்

இக்கோயிலின் மூலவர் மும்மூர்த்தி விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.மும்மூர்த்தி விநாயகர் மகாகணபதி (பரமேஸ்வரர் அம்சம்) இடப்பாகம் உள்ள சித்தி விநாயகர் (பிரம்மாவின் படைப்பு அம்சம்), வலப்பாகத்தில் உள்ள வல்லப கணபதி (விஷ்ணுவின் காக்கும் அம்சம்) என்ற நிலையில் உள்ளார். [1]

குடமுழுக்கு

இக்கோயிலின் குடமுழுக்கு 12.6.2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.[1]

அருகிலுள்ள கோயில்கள்

இக்கோயிலின் அருகில் வரதராஜப்பெருமாள் கோயில் மற்றும் பிரம்மன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 குடந்தை மும்மூர்த்தி விநாயகர் கோயிலில் மகாகும்பாபிஷேகம், தினமணி, 13.6.2015

மேலும் பார்க்க