வெண்ணிலா கபடி குழு 2
வெண்ணிலா கபடி குழு | |
---|---|
இயக்கம் | செல்வ சேகரன் |
தயாரிப்பு | பூங்காவனம் ஆனந்த் |
திரைக்கதை | செல்வ சேகரன் |
இசை | வி. செல்வகணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இ.கிருஷ்ணசாமி |
படத்தொகுப்பு | அஜய் |
கலையகம் | சாய் அர்புதம் சினிமாஸ் |
வெளியீடு | சூலை 12, 2019 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
வெண்ணிலா கபடி குழு 2 (Vennila Kabaddi Kuzhu 2) என்பது 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுசீந்திரன் கதையை செல்வ சேகரன் திரைகதை எழுதி இயக்கயிருந்தார். இத்திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் அர்த்தனா பினு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வி. செல்வகனேஷ் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
கதை
கதையின் நாயகனான சரவணன் (விக்ரந்த்) ஆடியோ கேசட்டுகளை விற்பனை செய்கிறார். அவரது தந்தை சாமி (பசுபதி) தொழில் ரீதியாக ஒரு பேருந்து ஓட்டுனராக உள்ளார். ஆனாலும் கபடியில் ஈடுபாடுள்ளவர். எங்கு கபடி போட்டி நடந்தாலும் அங்கு செல்வார். கபடி ஈடுபாட்டால் ஓட்டுனர் தொழில் பாதிக்கப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதனால் சரவணனுக்கு தந்தையை பிடிக்காமல் போகிறது. கடிந்து கொள்கிறார். மலர் எனும் கல்லூரிப் பெண்ணை சரவணன் காதல் செய்கிறார். இந்நிலையில் தந்தை விரும்பும் கபடி விளையாட்டையும், தந்தையின் திறனையும் அறிகிறார். சரவணனும் கபடி வீரராக மாறுகிறார்.
நடிகர்கள்
- விக்ராந்த் (நடிகர்) - சரவணன்
- அர்த்தனா பினு - மலர்
- பசுபதி (நடிகர்) - சாமி, சரவணனின் தந்தை
- அனுபமா குமார் - சின்னதாயி, சரவணனின் தாய்
- சூரி - சுப்பிரமணி
- கிஷோர் - சவடமுத்து
- கஞ்சா கறுப்பு - பாண்டியாக, சரவணனின் மாமா
- ரவி மரியா மலாரின் தந்தை பவானி
- சோனியா வெங்கட் - மலரின் அம்மா
- அப்புக்குட்டி - அப்புக்குட்டி
- அருள்தாஸ் - தாஸ்
- வாசு விக்ரம்
- அகல்யா
- மாலாரியின் பாட்டியாக மதுரை சரோஜா
- குமாராக பொராலி திலீபன்
- சரவணனின் நண்பரான முரளியாக கருர் முரளி
- சரவணனின் நண்பராக பெஞ்சமின்
- சரவணனின் நண்பராக மிப்பு
- பேச்சிமுத்து
- நிதிஷ் வீரா - சேகர்
- அய்யப்பனாக ஹரி வைரவன்
- பாண்டியாக ரமேஷ் பாண்டியன்
- மூதி என மாயி சுந்தர்
- ரயில் ரவி போலீஸ் இன்ஸ்பெக்டராக
- கோடங்கி என தவசி
- முருகனாக பான் ராஜ்
- அஸ்வந்த் அசோக்குமார் இளம் சரவணனாக
- இளம் சரவணனின் நண்பராக ஜட்டி ஜெகநாதன்
- விஜய் கணேஷ்
- கபாடி வீரராக ராண்டில்யா
- பிரியா அஸ்மிதா சிறப்பு தோற்றத்தில்
இசை
திரைப்படத்திற்கு வி. செல்வகணேஷ் இசையமைந்திருத்தார்.
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "கபடி கபடி" | சங்கர் மகாதேவன் | 4:11 | |
2. | "ஒரசாத டி" | கார்த்திக், ஸ்வேதா மோகன் | 4:41 | |
3. | "ஒத்த பார்வையில்" | ஹரிச்சரன் | 3:52 | |
4. | "திருவிழா" | அனிருத் ரவிச்சந்திரன் | 4:16 |
தயாரிப்பு
2009 இல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஒரு கதையை சுசீந்திரன் எழுதியிருந்தார். பசுபதி அவர்களை தந்தையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [1][2]