விஜய் கிருஷ்ணராஜ்
விஜய் கிருஷ்ணராஜ் | |
---|---|
மற்ற பெயர்கள் | கிருஷ்ணராஜ் |
பணி | இந்திய நடிகர், திரைப்பட படைப்பாளி, கதை எழுத்தாளர், தொலைக்காட்சி நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1979 – தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்தூண் (திரைப்படம்), ராணுவ வீரன் (திரைப்படம்), ராஜாத்தி ரோஜாக்கிளி, மதுரை வீரன் எங்க சாமி, அண்ணன் என்னடா தம்பி என்னடா |
தொலைக்காட்சி | பொம்மலாட்டம், பாரிஜாதம், லட்சுமி வந்தாச்சு, பாண்டவர் இல்லலம், றெக்கை கட்டி பறக்குது மனசு, கைராசி குடும்பம் |
விஜய் கிருஷ்ணராஜ் (Vijay Krishnaraj) என்று அழைக்கப்படும் ஆர் கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகர், எழுத்தாளர், இயக்குனர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். 1979 ஆம் ஆண்டில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். எஸ். தேவராஜன் இயக்கிய தமிழ் திரைப்படமான ராஜாத்தி ரோஜாக்கிளியில் சுலக்சனாவுடன் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1][2]
திரைப்பட வாழ்க்கை
இவர் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிறந்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் கதை எழுத்தாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது கதை, வசனத்தில் எடுக்கபட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்தூண், ராணுவ வீரன் போன்றவை ஆகும். பின்னர், 1985 ஆம் ஆண்டில் ராஜாத்தி ரோஜாக்கிளி படத்தில் துணை வேடத்தில் நடித்தார். மூத்த தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராகவேந்திர ராவின் ஆறு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இவர் நடித்து நன்கு அறியப்பட்ட திரைப்படங்களாக ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே , காலையும் நீயே மாலையும் நீயே, பூந்தோட்ட காவல்காரன், சந்தனக் காற்று, வான்மதி, வாய்மையே வெல்லும் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார் என்றாலும் அண்ணன் என்னடா தம்பி என்னடா படத்தில் நடிதமைக்காக இவரது நடிப்பு பாராட்டபட்டது .[3][4]
தொலைக்காட்சி வாழ்க்கை
2000 களின் முற்பகுதியில் படிப்படியாக இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது, இவர் பல தமிழ் தொடர்களில் நடித்து வருகிறார். இவரது குறிப்பிடத்தக்க தமிழ் தொலைக்காட்சித் தொடர்களளின் பட்டியல் கீழே:[5]
- கோபுரம்
- குடும்பம்
- ஆனந்த்
- பூவிளங்கு (இயக்குநரும் கூட)
- வரம்
- பாரிஜாதம்
- பிள்ளை நிலா
- பொம்மலட்டம்
- லட்சுமி வந்தாச்சு
- கங்கை
- பொன்மகள் வந்தாள்
- பாண்டவர் இல்லம்
- றெக்கை கட்டி பறக்குது மனசு
- முள்ளும் மலரும்
- அமுதா ஒரு ஆச்சார்யகுறி
- சந்திரகுமாரி
- கைராசி குடும்பம்
- கோகுலதில் சீதை
- சந்திரலேகா
திரைப்படவியல்
நடிகராக
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1985 | ராஜாத்தி ரோஜாக்கிளி | சீனு தேவர் | |
1986 | தாய்க்கு ஒரு தாலாட்டு | பக்கிரி | |
1988 | காலையும் நீயே மாலையும் நீயே | ||
1988 | பூந்தோட்ட காவல்காரன் | ||
1989 | நினைவு சின்னம் | ||
1990 | வாழ்க்கைச் சக்கரம் | ||
1990 | புலன் விசாரணை | ||
1990 | சந்தனக் காற்று | ||
1990 | வேலை கிடைச்சுடுச்சு | ||
1990 | மதுரை வீரன் எங்க சாமி | ||
1992 | அண்ணன் என்னடா தம்பி என்னடா | ||
1993 | மதுரை மீனாட்சி | ||
1993 | ஏழை ஜாதி | ||
1994 | வண்டிச்சோலை சின்ராசு | ||
1994 | மகுடிக்காரன் | ||
1995 | செல்லக்கண்ணு | ||
1996 | வான்மதி | ||
1996 | ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே | ||
1997 | ரெட்டை ஜடை வயசு | ||
1997 | கல்யாண வைபோகம் | ||
1997 | வாய்மையே வெல்லும் | ||
1997 | ரட்சகன் | ||
1998 | பகவத் சிங் | ||
2000 | நினைவெல்லாம் நீ | ||
2000 | வல்லரசு | ||
2000 | தை பொறந்தாச்சு | ||
2001 | எங்களுக்கும் காலம் வரும் | ||
2002 | கேம் | ||
2003 | திருமலை | ||
2004 | குத்து | ||
2006 | கோவை பிரதர்ஸ் | ||
2006 | இலக்கணம் | ||
2007 | பிறப்பு | ||
2007 | பெரியார் | ||
2008 | பட்டைய கெளப்பு | ||
2008 | தித்திக்கும் இளமை | ||
2008 | கோடைக்கானல் | ||
2008 | வைத்தீஸ்வரன் | ||
2018 | ஓநாய்கள் ஜாக்கிரதை | அஞ்சலியின் தந்தை | |
2019 | அழியாத கோலங்கள் 2 | அரசியல்வாதி |
கதை மற்றும் உரையாடல் எழுத்தாளராக
ஆண்டு | படம் | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
1979 | ரோசாப்பூ ரவிக்கைக்காரி | சிவகுமார், தீபா | கிருஷ்ணா என்று பெயர் போட்டப்பட்டது |
1980 | ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது | சிவகுமார், சரிதா | |
1981 | கல்தூண் | சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா | |
1981 | ராணுவ வீரன் | இரசினிகாந்து, ஸ்ரீதேவி | |
1982 | நெஞ்சங்கள் | சிவாஜி கணேசன், லட்சுமி, மஞ்சுளா | |
1982 | ஊரும் உறவும் | சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா | |
1985 | ராஜாத்தி ரோஜாக்கிளி | ராஜேஷ், நளினி | |
1986 | தாய்க்கு ஒரு தாலாட்டு | சிவாஜி கணேசன், பாண்டியன் |
இயக்குநராக
ஆண்டு | படம் | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
1982 | கண்ணோடு கண் | ரவிக்குமார், சுலக்சனா | இயக்குநராக அறிமுகமானார் |
1984 | சிம்ம சொப்பனம் | சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பிரபு, ராதா | |
1985 | திறமை | சத்யராஜ், ரேவதி | |
1987 | வாழ்க வளர்க | ராதாரவி | |
1992 | அண்ணன் என்னடா தம்பி என்னடா | ||
1994 | தாட்பூட் தஞ்சாவூர் |
- பின்னணி குரல் கலைஞராக
ஆண்டு | படம் | நடிகர் | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | பாறை | விஜயன் |
குறிப்புகள்
- ↑ "Vijay Krishnaraj [Story,Dialogue Writer,Actor,Director]". Antru Kanda Mugam (in English). 2016-07-29. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ "Kannodu Kan (1982) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ "Tamil Tv Actor Vijay Krishnaraj Biography, News, Photos, Videos". nettv4u (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ "Vijay Krishnaraj". Onenov (in English). 2018-07-06. Archived from the original on 2019-11-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ Sakthi (2019-05-06). "நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் அவர்கள் யார் தெரியுமா வெளிவந்த உண்மை தகவல்". NewsTiG (in English). Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.