அழியாத கோலங்கள் 2

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அழியாத கோலங்கள் 2
இயக்கம்எம். ஆர். பாரதி
தயாரிப்புஈஸ்வரி ராவ்
தேவா சின்கா
இசைஅரவிந்த் சித்தார்த்தா
நடிப்புபிரகாஷ் ராஜ்
ரேவதி (நடிகை)
அர்ச்சனா
ஒளிப்பதிவுஇராஜேஷ் கே. நாயர்
படத்தொகுப்புமு. காசிவிசுவநாதன்
கலையகம்சாருலதா பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 29, 2019 (2019-11-29)
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழியாத கோலங்கள் 2 (Azhiyatha Kolangal 2) என்பது 2019 ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும்.எம். ஆர். பாரதி எழுதி இயக்கிய இப்படத்தை ஈஸ்வரி ராவ் தயாரித்தார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரேவதி, அர்ச்சனா, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்தார். அழியாத கோலங்கள் 2 படத் தயாரிப்பு பணியானது செப்டம்பர் 2015 இல் தொடங்கியது.

கதை

எழுதாளரான கௌரி சங்கர் (பிரகாஷ் ராஜ்) தில்லியில் சாகித்திய விருது பெறுகிறார். 24 ஆண்டுகள் கழித்து தன் முன்னாள் காதலியான மோகனாவை ( அர்ச்சனா) அவரது வீட்டில் சந்திக்க வருகிறார். அங்கே தங்கள் பழைய நினைவுகளை பேசி மகிழ்கின்றனர். இந்நிலையில் திடீரென்று மாரடைப்பினால் கௌரி சங்கர் அங்கே இறந்து விடுகிறார். கல்லூரி செல்லும் வயதுடைய மகளைக் கொண்ட மோகனா இதனால் அதிர்ச்சி அடைகிறார். இந்த விசயத்தை ஊடகங்களும், அக்கம் பக்கத்தவர்களும் மனம் போன போக்கில் ஏளனமாக பேசுகின்றனர். கோரி சங்கரின் மனைவியான சீதா (ரேவதி) மோகனாவை வந்து சந்திக்கிறார் அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதையின் பிற்பகுதியாகும்.

நடிகர்கள்

தயாரிப்பு

அறிமுக இயக்குனர் மணி பாரதி பிரகாஷ் ராஜ், ரேவதி, அர்ச்சனா, நாசர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படத்திற்கான பணிகளை ஜூன் 2015 இல் துவக்கி பணியாற்றத் தொடங்கினர்.[1] துவக்கத்தில் ரேவதியும் அர்ச்சனாவும் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் பின்னர் முன்னாள் நடிகை ஈஸ்வரி ராவ் இந்த படத்தயாரிப்புக்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பிரகாஷ் ராஜ் ஒரு எழுத்தாளராக நடிப்பதாக தெரியவந்தது. மேலும் இந்த படமானது கவிஞ்ஞன் ஆக்கினாள் என்னை என்ற தற்காலிக பெயரில் உருவாக்கப்பட்டது.[2][3] படத்தின் முதல் பார்வை சுவரோட்டியானது பொங்கலை ஒட்டி 14 சனவரி 2016 அன்று வெளியிடப்பட்டது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அழியாத_கோலங்கள்_2&oldid=30322" இருந்து மீள்விக்கப்பட்டது