ஈஸ்வரி ராவ்
ஈஸ்வரி ராவ் | |
---|---|
சென்னையில் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அருகில் கே.ஜி.எஃப் 2 படத்தின் விளம்பரத்தில் ராவ் | |
பிறப்பு | 13 சூன் 1973 இந்தியா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம், தணுக்கு |
மற்ற பெயர்கள் | ஜனனி, விஜயஸ்ரீ, வைஜயந்தி |
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | எல். இராஜா (தி. 2005) |
பிள்ளைகள் | 2 |
ஈஸ்வரி ராவ் (Easwari Rao, பிறப்பு 13 சூன் 1973) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் .[1] மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் 1990 முதல் 1999 வரை முக்கிய வேடங்களில் நடித்தார். 2000 முதல் துணை, கதாபாத்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் 2005 இல் இயக்குனர் எல். இராஜாவை மணந்தார் [2] இந்த இணையருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு பிள்ளைகள் உள்ளனர். தற்போது, இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
தொழில்
ஈஸ்வரி ராவின் முதல் படம் தெலுங்கில் இன்டின்டா தீபாவளி (1990); ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து நடித்த ரம்பந்து என்ற படத்தில் நடித்த பின்னர் தெலுங்கில் முக்கியத்துவம் பெற்றார். இவர் தமிழில் அறிமுகமான கவிதை பாடும் அலைகள் (1990) படத்தில் ஜனனி என்ற பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். பாடல்கள் பிரபலமான போதிலும், படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா (1997) திரைப்படத்தின் மூலமாக இவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. இப்படத்திற்குப் பிறகு ஈஸ்வரி ராவ் புகழ் பெற்றார். மிகவும் கவர்ச்சியான பாத்திரமாக இருப்பதாக உணர்ந்ததால், கூட்டாளி என்ற படத்திலிருந்து விலகினார் . மனோஜ் குமாரின் குரு பர்வை (1998) திரைப்படத்தில் இவர் தோன்றினார். பாரதிராஜாவின் சிறகுகள் முறிவதில்லை படத்திலும் ஈஸ்வரி ஒரு பாத்திரத்தில் நடித்தார், இருப்பினும் படம் முன் தயாரிப்புக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.[3] அப்பு (2000) என்ற தமிழ் திரைப்படத்தில் பிரசாந்தின் சகோதரியாக நடித்தார். காலாவில் (2018) செல்வியாக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.
திரைப்படவியல்
படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | இண்டிண்டா தீபாவளி | தெலுங்கு | ||
கவிதை பாடும் அலைகள் | தமிழ் | ஜனனி | ||
1991 | ஜகன்நாடகம் | நீலா | தெலுங்கு | |
1991 | கலிகாலம் | தெலுங்கு | ||
1992 | ஊட்டி பட்டணம் | சீனா/ரஞ்சனி தம்புராட்டி | மலையாளம் | |
நாளைய தீர்ப்பு | ராணி | தமிழ் | ||
1993 | வேடன் | பிரியா | தமிழ் | |
1994 | மேகமலே | கன்னடம் | விஜயாஸ்ரீ | |
1996 | ரம்பந்து | காவேரி | தெலுங்கு | |
1997 | ராமன் அப்துல்லா | கௌரி | தமிழ் | |
1998 | குரு பார்வை | பூஜா/அலுமேலு | தமிழ் | |
சிம்மராசி | ராசாத்தி | தமிழ் | ||
1999 | பூமனமே வா | தமிழ் | ||
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் | கிருஷ்ணவேணி | தமிழ் | ||
2000 | அப்பு | சாரதா | தமிழ் | |
2001 | குட்டி | செந்தாமரை | தமிழ் | |
தவசி | கௌரி | தமிழ் | ||
2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | ஷாமா | தமிழ் | |
விரும்புகிறேன் | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (பெண்) | ||
2004 | சுள்ளான் | கற்பகம் | தமிழ் | |
2005 | பத்ரா | சுரேந்தரின் மனைவி | தெலுங்கு | |
2006 | சரவணா | சௌந்தர பாண்டியனின் மனைவி | தமிழ் | |
2014 | லெஜண்ட் | ஜெய்தேவாவின் உறவினர் | தெலுங்கு | |
2015 | அனந்த புரி | தெலுங்கு | ||
2016 | பிரேமம் | சிஸ்தர்யாவின் தாய் | தெலுங்கு | |
பிரம்மோத்சவம் | புவலட்சுமி | தெலுங்கு | ||
அ ஆ | காமேஸ்வரி | தெலுங்கு | ||
இஸ்ம் | சத்தியாவதி / அம்மாஜி | தெலுங்கு | ||
2017 | நேனு லோக்கல் | பாபுவின் தாய் | தெலுங்கு | |
மிஸ்டர் | சாயாவின் மாற்று தாய் | தெலுங்கு | ||
ஜவான் | ஜெய்யின் தாய் | தெலுங்கு | ||
2018 | காலா | செல்வி | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான பிகைன் உட் தக்கப்பதக்கம்[4] ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது[5] தமிழ் திரையுலகில் சிறந்த கலைஞருக்கான அவள் விருதுகள் - 2018 |
ஏ மாயா பெர்மிடோ | தெலுங்கு | |||
அரவிந்தா சமிதா | ரீதம்மா | தெலுங்கு | ||
2019 | எப்2 – பன் அண்ட் புர்டேசன் | விசுவநாதின் மனைவி | தெலுங்கு | |
உண்டா | லலிதம்மா | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
அழியாத கோலங்கள் 2 | செய்தி வாசிப்பாளர் | தமிழ் | தயாரிப்பாளராகவும் | |
2020 | அலா வைகுண்டபுரம்லோ | செவிலி சுலோச்சனா | தெலுங்கு | |
ஜோஹர் | கங்கா | தெலுங்கு | ஹாஹா பிலிம்ஸ் | |
லாக்கப் | இளவரசி | தமிழ் | ஜீ5 பிலிம்ஸ் | |
வர்மா | பவாணி | தமிழ் | சிம்பிலி சவுத் ஒடிடி தளத்தில் வெளியானது | |
விராட்ட பர்வம் | தெலுங்கு | படப்பிடிப்பில் | ||
காக்கி | தமிழ் | படப்பிட்டிப்பில் |
தொலைக்காட்சி
- கோகிலா எங்கே போகிறாள் (சன் டிவி)
- உதயம் (சன் டிவி) ராடான் மீடியாவொர்க்ஸ்
- கஸ்தூரி (சன் டிவி)
- அவள் அப்படிதான் (ஜெயா டிவி)
- நின்னி பெல்லாடுதா (ஜெமினி டிவி)
- அக்னி சாட்சி (விஜய் டிவி)
- வாழ்ந்து காடுகிறேன் ( ஏவிஎம் புரொடக்சன்ஸ் ) (சன் டிவி)
- மாயா (ஜெயா டிவி)
- ஆஹா (விஜய் டிவி)
- காந்தம் கதலு (தூர்தர்ஷன் - தெலுங்கு)
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
விருது | வகை | முடிவு | குறிப்பு |
---|---|---|---|
தமிழக அரசு திரைப்பட விருதுகள் | சிறந்த பெண் துணை நடிகை | பெற்றார்[6] | |
பின்வுட் தங்கப்பதக்கம் | சிறந்த துணை நடிகை | பெற்றார்[7] | |
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் | சிறந்த துணை நடிகை | பெற்றார்[8] | |
8 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகை | பெற்றார்[5] |
மேற்கோள்கள்
- ↑
- Chowdhary, Y. Sunita (20 February 2017). "Easwari Rao: Smooth second coming". The Hindu (in English). பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
- "Kaala actress Easwari Rao on working with Rajinikanth: I feared I might end up playing his mother- Entertainment News, Firstpost". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
- ↑ Kavirayani, Suresh (18 June 2017). "Eswari Rao stages a comeback". deccanchronicle.com (in English). Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
- ↑ "1997-98 Kodambakkam babies Page". Indolink.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2013-08-17.
- ↑ https://www.behindwoods.com/tamil-actress/easwari-rao/easwari-rao-photos-pictures-stills-15.html
- ↑ 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 2020-11-15.
- ↑ https://www.filmistreet.com/celebrity/easwari-rao-biodata-biography-wiki-age/
- ↑ "List of Winners for BGM Iconic Edition".
- ↑ "ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை".