மத்தாப்பூ (திரைப்படம்)
மத்தாப்பூ | |
---|---|
இயக்கம் | நாகராஜ் |
தயாரிப்பு | எஸ். சுடலைகண்ராஜா |
கதை | நாகராஜ் |
இசை | வேலாயுதம் சபேஷ் முரளி (பின்னணி) |
நடிப்பு | ஜெயன் காயத்ரி |
ஒளிப்பதிவு | சி. ஆர். மாறவர்மன் |
படத்தொகுப்பு | ஜி. கே. மகேஷ் |
கலையகம் | விநாயக புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 13 செப்டம்பர் 2013 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மத்தாப்பூ (Mathapoo) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். நாகராஜ் இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ஜெயன் மற்றும் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
நடிகர்கள்
- ஜெயன் கார்த்திக்காக
- காயத்ரி பூஜாவாக
- கீதா பூஜாவின் தாயாக
- சித்தாரா கார்த்திக்கின் சித்தியாக
- இளவரசு கார்த்திக்கி சித்தப்பாவாக
- ரேணுகா கார்த்திக்கின் தாயாக
- கிட்டி பூஜாவின் தந்தையாக
- விவேக் ராஜ்கோபால்
தயாரிப்பு
இப்படத்தை நாகராஜ் இயக்கியுள்ளார், இதற்கு முன்பு தினம்தோரம் (1998) படத்தை இயக்கியவர். மின்னலே (2001) மற்றும் காக்க காக்க (2003) ஆகிய படங்களுக்கான உரையாடலை எழுதினார்.[1][2] துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் பட்டம் பெற்ற ஜெயன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[1] 18 வயசு மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் காயத்ரி முக்கிய பெண் பாத்திரத்தில் நடிக்க ஒப்பதமானார்.[3] இப்படத்தின் இசை அமைப்பாளராக வேலாயுதம் நியமிக்கபட்டார். இவர் எம். எஸ். விஸ்வநாதனின் ஆசிரியரான வீரராகவனிடமிருந்து இசையைக் கற்றுக்கொண்டவர்.[1] இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி இப்படத்தின் பின்னணி இசையை அமைத்தனர்.[4] நடிகர்களும் படக் குழுவினரும் எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டனர். படம் அறுபது நாட்களில் படமாக்கப்பட்டது.[2]
இசை
படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வேலாயுதத்தால் இசையமைக்கபட்டன.[1] முதலில் 2012 திசம்பரில் இசை வெளியிட இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 24 ஏப்ரல் 2013 அன்று வெளியிடப்பட்டது.[2] இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ், எஸ். பி. ஜனநாதன், பாலசேகரன், அழகம்பெருமாள், பாண்டிராஜ், சுசீந்திரன், சசி, களஞ்சியம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.[3]
பாடல் தலைப்பு | பாடலாசிரியர் | பாடகர் (கள்) |
---|---|---|
"அட்டா இதயம் பறக்கிறதே" | அரிவழகன் | ஹரிஷ் ராகவேந்திரா |
"அவாரம்பூ ஒண்ணு" | ஜே. பிரான்சிஸ் கிருபா | கார்த்திக் |
"சுட சுட ஓடும் காற்று" | நா. முத்துக்குமார் | பிரசன்னா |
"உன்பர்வை வெளிச்சத்திலே" | ஹரிஷ் ராகவேந்திரா | |
"யாரிடமும் சொல்லாதே" | சின்மயி | |
"நில் நிலவே" | கார்த்திக் |
வெளியீடு
டைம்ஸ் ஆப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டைக் கொடுத்து, "இந்த நீண்ட திரைப்படத்தை சற்று தாங்கக்கூடியதாக உள்ளவை துணை கதாபாத்திரங்கள் தான். அவைதான் நம்மை கதாபாத்திரங்களுடன் ஒன்றவைக்கின்றன".[5] பிஹைண்ட்வுட்ஸ் ஐந்து நட்சத்திரங்களில் ஒன்றரையை கொடுத்தது. மேலும் "மிக மெதுவான நாடகப் படமான இது ஒரு தொலைக்காட்சி 'மெகா-தொடரை' போன்று உள்ளது" என்று எழுதியது.[4]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Kumar, S. R. Ashok (4 May 2013). "Audio Beat: Sparkling notes". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/audio-beat-sparkling-notes/article4683457.ece.
- ↑ 2.0 2.1 2.2 Manigandan, K. R. (24 November 2012). "Lights, camera, action, once again". The Hindu. https://www.thehindu.com/features/cinema/lights-camera-action-once-again/article4130106.ece.
- ↑ 3.0 3.1 "This director is back after a 12 years break, Nagaraj, Mathappu". https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/this-director-is-back-after-a-12-years-break-nagaraj-mathappu-25-04-13.html.
- ↑ 4.0 4.1 "Mathapoo Movie Review Mathapoo, Jayan, Gayathri". https://www.behindwoods.com/tamil-movies/mathapoo/mathapoo-review.html.
- ↑ "Mathapoo Movie Review {2.0/5}". The Times of India. 10 May 2016. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/mathapoo/movie-review/22617362.cms. பார்த்த நாள்: 18 August 2020.