போளூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
போளூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
படிமம்:Constitution-Polur.svg
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிஆரணி
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,43,921[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கட்சி அதிமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

போளூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 66. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.[2]

இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன.

மேலானூர், சூத்திரகாட்டேரி, அன்மருதை, ஆவணியாபுரம், மேல்சாத்தமங்கலம், நரியம்பாடி, வினாயகபுரம், கோணையூர், கெங்காபுரம், கொழப்பலூர், இமாபுரம், நாராயணமங்கலம், மரக்குணம், அல்லியேயந்தல், மகாதேவிமங்கலம், மேல்பாளையம், தவணி, தெள்ளாரம்பட்டு, நமத்தோடு, செம்மம்பாடி, அனாதிமங்கலம், கோணாமங்கலம், மேலப்பூண்டி, விசாமங்கலம், மேலத்தாங்கல், ஜெகந்நாதபுரம், அரசம்பட்டு, நெடுங்குணம், தென்கடப்பந்தாங்கல், பெரணம்பாக்கம், மோரக்கனியனூர், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு மற்றும் மேல்நந்தியம்பாடி கிராமங்கள்.

துளுவபுபகிரி, வெள்ளுர், சேதாரம்பட்டு, பார்வதியகரம, அலியாபாத், எலுப்பக்குணம், நாராயணமங்கலம், காங்கிரானந்தல், புஷ்பகிரி, துரிஞ்சிகுப்பம், விளாங்க்குப்பம், கல்வாசல், முனியந்தாங்கல், சந்தவாசல், கஸ்தும்பாடி, ஏந்துவம்பாடி, முக்குரும்பை, கீழ்பட்டு, வடமாதிமங்கலம், தேப்பனந்தல், சித்தேரி, கேளூர், ஆத்துவாம்பாடி, கட்டிப்பூண்டி, பால்வார்துவென்றான், எட்டிவாடி, ஆலம்பூண்டி, ஓதியந்தாங்கல், ராயங்குப்பம், கூடலூர், சதுப்பேரிபாளையம், சதுப்பேரி, மடவிளாகம், ஜம்புக்கோணம்பட்டு, அரியாத்தூர், திருமலை, செங்குணம், பொத்தரை, பெரியகரம், அத்திமூர், ­களியம், திண்டிவனம், ரெண்டேரிப்பட்டு, குன்னத்தூர், குருகப்பாடி, வீரசம்பனூர், மோதனபாளையம், தும்பூர், இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டுமூ, கொத்தந்தவாடி, கொளக்கரவாடி, நரசிங்கபுரம், மொடையூர், ஓடநகரம், அரும்பலூர், மாணிக்கவள்ளி, மண்டகொளத்தூர், ஈயாகொளத்தூர், வெண்மணி, பாப்பாம்பாடி, மாம்பட்டு, எழுவம்பாடி, ஜடதாரிகுப்பம், சோமந்தபுத்தூர், எடப்பிறை, திரிச்சூர், படியம்பட்டு, சு-நம்மியந்தல், காங்கேயனூர், புதுப்பாளையம், வசூர், சனிக்கவாடி, கரைப்பூண்டி, புலிவாநந்தால், ஓட்டேரி, மட்டப்பிறையூர், கொழாவூர், கொரல்பாக்கம், சோத்துக்கனி, செம்மியமங்கலம், அல்லியாளமங்கலம், ஆத்துரை, தச்சம்பாடி, நம்பேடு, தேவிமங்கலம், செய்யானந்தல், சித்தாத்துரை, பேரணம்பாக்கம், ராந்தம், விளாபாக்கம், பெலாசூர், குருவிமலை, மன்சுராபாத், செவரப்பூண்டி, எடயன்குஸத்தூர், மருத்துவம்பாடி மற்றும் கெங்கைசூடாமனி கிராமங்கள்.

போளூர் (பேருராட்சி) சேத்துப்பட்டு பேரூராட்சி, களம்பூர் பேரூராட்சி[3]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 மாணிக்கவேல் நாயக்கர் பொது நல கட்சி 19508 54.65 அண்ணாமலை செட்டி காங்கிரசு 16190 45.35
1957 எசு. எம். அண்ணாமலை சுயேச்சை 17222 42.96 டி. பி. கேசவ ரெட்டியார் சுயேச்சை 10616 26.48
1962 கேசவ ரெட்டியார் திமுக 29283 62.16 பெரியசாமி காங்கிரசு 17828 37.84
1967 எசு. குப்பம்மாள் திமுக 33292 56.92 எசு. எம். அண்ணாமலை காங்கிரசு 20224 34.58
1971 தொ. ப. சீனிவாசன் திமுக 34728 57.92 டி. ஆர். நடேச கவுண்டர் ஸ்தாபன காங்கிரசு 25232 42.08
1977 கே. ஜே. சுப்பிரமணியன் அதிமுக 24631 37.82 எசு. முருகையன் திமுக 21902 33.63
1980 எல். பலராமன் காங்கிரசு 35456 48.92 எ. செல்வன் அதிமுக 33303 45.95
1984 ஜெ. இராசாபாபு காங்கிரசு 52437 62.40 டி. கே. சுப்பிரமணியன் திமுக 30319 36.08
1989 ஏ. ராஜேந்திரன் திமுக 31478 38.80 எசு. கண்ணன் அதிமுக (ஜெ) 21334 26.29
1991 டி. வேதியப்பன் அதிமுக 60262 62.13 எ. இராசேந்திரன் திமுக 21637 22.31
1996 ஏ. ராஜேந்திரன் திமுக 59070 55.45 அக்ரி. எசு. கிருசுணமூர்த்தி அதிமுக 34917 32.78
2001 நளினி மனோகரன் அதிமுக 59678 51.31 சி. ஏழுமலை திமுக 48871 42.02
2006 பி. எசு. விஜயகுமார் காங்கிரசு 58595 47 டி. வேதியப்பன் அதிமுக 51051 41
2011 எல். ஜெயசுதா அதிமுக 92391 55.42 எதிரொலி மணியன் பாமக 63846 38.30
2016 கே. வி. சேகரன் திமுக 66558 34.24 எம். முருகன் அதிமுக 58315 29.98
2021 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக[4] 97,732 48.38 கே.வி.சேகரன் திமுக 88,007 43.57
  • 1977ல் ஜனதாவின் டி. எம். சுப்ரமணியன் 11279 (17.32%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் ஜெ. இராசாபாபு 15453 (19.05%) & அதிமுக ஜானகி அணியின் எ. செல்வன் 12096 (14.91%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் கே. ஜி. ஏழுமலை 13026 (13.43%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எசு. சி. புருசோத்தமன் 6867 வாக்குகள் பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை

முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

வெளியிட்ட தேதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஆதாரம்
10.01.2018 114424 117389 2 231835 திருவண்ணாமலை மாவட்ட இணையதளம்
26.12.2019 115793 119324 5 249398 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. அதிமுக- திமுக நேருக்குநேர் போதும் போளூர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 17 மார்ச் 2021. Archived from the original on 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  3. http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf பரணிடப்பட்டது 2016-08-04 at the வந்தவழி இயந்திரம் தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
  4. போளூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா

வெளி இணைப்புகள்