ஆரணி (சட்டமன்றத் தொகுதி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆரணி
இந்தியத் தேர்தல் தொகுதி
படிமம்:Constitution-Arani.svg
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிஆரணி
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,88,820[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அதிமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ஆரணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 67. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. ஆற்காடு, கலசப்பாக்கம், போளூர், செய்யார், வந்தவாசி, வேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

ஆரணி தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவிகிதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 28 சதவிகிதமும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 17 சதவிகிதமும், இதர சமூகத்தினர் 25 சதவிகிதம் உள்ளனர்.

ஆரணி தொகுதியில் விவசாயம், நெசவுத் தொழில், அரிசி ஆலை உள்ளிட்டவை பல்வேறு தொழில்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று கூறும் அளவிற்கு ஆரணி தொகுதி உள்ளது. அதேபோல், இந்தியாவில் பட்டு உறுபத்தி செய்யும் தொகுதிகளில் ஒன்றாக ஆரணி தொகுதி உள்ளது. ஆரணி பட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தொகுதியில் ஆரணி மேற்கு, ஆரணி மற்றும் செய்யாறு (சில பகுதிகள்) ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளது.

ஆரணி சட்டமன்றத் தொகுதி

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி, ஆரணி வட்டத்தில் உள்ள ஊராட்சிகள்

கடுகனூர், மேல்நகரம்பேடு, மேல்மட்டை, விண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, மாளிகைப்பட்டு, மேல்கொவளைவேடு, வள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை, நாவல்பாக்கம், கொருக்கத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி, மேல்புத்தூர், தேவனாத்தூர் மற்றும் பில்லாந்தி கிராமங்கள்[2].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 வி. கே. கண்ணன் பொது நல கட்சி 17761 48.14 டபள்யு. எசு. சீனிவாச ராவ் காங்கிரசு 10329 28.00
1957 பி. துரைசாமி ரெட்டியார் சுயேச்சை 20237 51.59 வி. கே. கண்ணன் காங்கிரசு 18989 48.41
1962 கோதண்டராம பாகவதர் காங்கிரசு 30773 51.60 எ. சி. நரசிம்மன் திமுக 23055 38.66
1967 எ. சி. நரசிம்மன் திமுக 38038 60.74 டி. பி. ஜெ. செட்டியார் காங்கிரசு 17320 27.66
1971 எ. சி. நரசிம்மன் திமுக 37682 60.50 எம். தருமராசன் ஸ்தாபன காங்கிரசு 24599 39.50
1977 வீ. அர்ச்சுனன் அதிமுக 33925 41.47 ஈ. செல்வராசு திமுக 24703 30.20
1980 ஏ. சி. சண்முகம் அதிமுக 42928 50.65 ஈ. செல்வராசு திமுக 37877 44.69
1984 எம். சின்னகுழந்தை அதிமுக 54653 54.83 ஆர். சிவானந்தம் திமுக 43620 43.76
1989 எ. சி. தயாளன் திமுக 38558 36.21 டி. கருணாகரன் அதிமுக (ஜெ) 30891 29.01
1991 ஜெய்சன் ஜேக்கப் அதிமுக 66355 58.51 ஈ. செல்வராசு திமுக 32043 28.26
1996 ஆர். சிவானந்தம் திமுக 63014 51.29 எம். சின்னகுழந்தை அதிமுக 44835 36.49
2001 கா. இராமச்சந்திரன் அதிமுக 66371 50.98 ஏ. சி. சண்முகம் புதிய நீதி கட்சி 52889 40.62
2006 ஆர். சிவானந்தம் திமுக 69722 --- எ. சந்தானம் அதிமுக 57420 ---
2011 ஆர். எம். பாபு முருகவேல் தேமுதிக 88,967 50.06 ஆர். சிவானந்தம் திமுக 81001 45.58
2016 சேவூர் ராமச்சந்திரன் அதிமுக 94074 45.27 சி. பாபு திமுக 86747 41.75%
2021 சேவூர் ராமச்சந்திரன் அதிமுக[3] 102,961 46.50 எஸ். எஸ். அன்பழகன் திமுக 99,833 45.09
  • 1977ல் ஜனதாவின் எம். தேலூர் தர்மராசன் 19448 (23.78%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஏ. சி. சண்முகம் 21827 (20.50%) & காங்கிரசின் எ. லோகநாதன் 12793 (12.01%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் எம். மூர்த்தி கவுண்டர் 11902 (10.50%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. ரமேசு 6292 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

வெளியிட்ட தேதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் ஆதாரம்
10.01.2018 126629 133145 5 259779 .திருவண்ணாமலை மாவட்ட இணையதளம்
26.12.2019 128190 135117 11 263318 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1749 %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 24 Jan 2022.
  2. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  3. ஆரணி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆரணி_(சட்டமன்றத்_தொகுதி)&oldid=85120" இருந்து மீள்விக்கப்பட்டது