பெருந்துறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெருந்துறை
—  சிறப்பு நிலை பேரூராட்சி  —
பெருந்துறை
இருப்பிடம்: பெருந்துறை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°16′29″N 77°34′58″E / 11.274600°N 77.582700°E / 11.274600; 77.582700Coordinates: 11°16′29″N 77°34′58″E / 11.274600°N 77.582700°E / 11.274600; 77.582700
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி பெருந்துறை

-

சட்டமன்ற உறுப்பினர்

சி. ஜெயக்குமார் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

24,930 (2011)

1,066/km2 (2,761/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

23.39 சதுர கிலோமீட்டர்கள் (9.03 sq mi)

303 மீட்டர்கள் (994 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/perundurai


பெருந்துறை (ஆங்கிலம்:Perundurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை வட்டம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது. பெருந்துறை நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

முக்கிய சாலைகள்

அமைவிடம்

ஈரோடு மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், ஈரோடு சந்திப்பிலிருந்தும் சுமார் 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

23.39 ச.கி.மீ. பரப்பளவும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 மக்கள்தொகையும் கொண்டது. [5]

பொருளாதாரம் - தொழில்வளம்

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சேலம்-ஈரோடு-கோயம்புத்தூர்-கொச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 544ன் புறவழிச்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.

கல்வி

பள்ளிகள்

  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி
  • சாகர் பன்னாட்டுப் பள்ளி
  • ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
  • காருண்யா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கல்லூரிகள்

வழிபாட்டுத் தலங்கள்

1.பெருந்துறை முனியப்பசாமி கோயில்

2. கோட்டை மாரியம்மன் கோயில்

3. சோழீசுவரர் கோயில்

4. செல்லாண்டியம்மன் கோயில்

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்
  5. Perundurai Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=பெருந்துறை&oldid=108940" இருந்து மீள்விக்கப்பட்டது