பா. ர. பழனிச்சாமி
பா. ர. பழனிச்சாமி | |
---|---|
இயக்கம் | எம். முத்துரத்தினம் |
தயாரிப்பு | பி. தங்கவேல் |
கதை | சுரேஷ் தேவராஜ் |
இசை | தினா (இசையமைப்பாளர்) |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பாஸ்கர் ரவி |
படத்தொகுப்பு | கே. எம். இத்ரிஸ் எம். சங்கர் |
கலையகம் | தங்கம் ரியல் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 11, 2010 |
ஓட்டம் | 110 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பா .ர. பழனிச்சாமி (Pa. Ra. Palanisamy) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியானதமிழ் பரபரப்புத் திரைப்படம் ஆகும். எம். முத்துரத்னம் இயக்கிய இப்படத்தில் மூகூர் சுந்தர், அஸ்வின், சீனிவாச ராவ், மீனாட்சி கைலாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் அலெக்ஸ், கராத்தே ராஜா, பாண்டு, பாலா சுப்பிரமணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். பி. தங்கவேல் தயாரித்த இப்படத்திற்கு, தினா இசை அமைத்துள்ளார். படமானது 11 சூன் 2010 அன்று வெளியானது.[1][2]
நடிகர்கள்
- மூகூர் சுந்தர் பா. ர. பழனிச்சாமியாக
- அஸ்வின் சின்னாவாக
- சீனிவாச ராவ் பிராபகராக
- மீனாட்சி கைலாஷ் மகேஸ்வரியாக
- அலெக்ஸ் வைத்தீஸ்வரன்
- கராத்தே ராஜா ஜான்சனாக
- பாண்டு
- பாலபுப்பிரமணி முரளீதரனாக
- சிசர் மனோகர் நாகராஜனாக
- முத்துக்காளை தலைமைக் காவலர் சுனாமியாக
- நதிஷ் காவலராக
- விஜய் கணேஷ் காவலராக
- பேபி பூஜாசிறீ
- நெல்லை சிவா
- கோவை செந்தில்
- தேனி முருகன்
- ரஞ்சன்
- சீலா
- இலட்சுமி
- சுஜிபாலா சிறப்புத் தோற்றத்தில்
- பிரபுதேவா சிறப்புத் தோற்றத்தில்
- ராஜூ சுந்தரம் சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
1000 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய மூத்த நடனக் கலைஞர் முகூர் சுந்தர், பா. ர. பழனிசாமி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . தங்கம் ரியல் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் சீனிவாச ராவ், மீனாட்சி கைலாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர், பாண்டு, அலெக்ஸ், கராத்தே ராஜா ஆகியோர் துணை நடிகர்களாக நடித்தனர். படத்திற்கான இசையை தினா அமைத்தார். சுரேஷ் தேவராஜ் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த படத்தில் முகூர் சுந்தரும் அவரது மகன்களான பிரபுதேவா, ராஜூ சுந்தரம் ஆகியோர் நடனமாடியுள்ளனர். இதை நடன இயக்குநர் ஸ்ரீதர் அமைத்தார்.[3][4][5][6]
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தினா அமைத்தார். 2010 இல் வெளியான இந்த இசைப்பதிவில், சுரேஷ் தேவராஜ் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன.[7]
எண் | பாடல் | பாடகர் (கள்) | காலம் |
---|---|---|---|
1 | "இன்டர் சிட்டி" | ஹரிசரண் | 4:34 |
2 | "மாலை நேர சூரியன்" | எஸ். பி பவன் | 1:43 |
3 | "நெஞ்சுக்குள் மரியாள்" | பென்னி தயாள், பிரியா இமேஷ் | 4:38 |
4 | "நேற்று அது உனக்கு" | தினா | 5:00 |
5 | "சிங்கரிமாவா சிங்ககுட்டி" | முகேஷ், சின்னப்பொண்ணு | 4:37 |
6 | "தேடிவந்தேன்" | சங்கர் மகாதேவன், மாலதி லட்சுமணன் | 4:14 |
வெளியீடு
இந்த படம் சென்னை மண்டலத்தில் சராசரியான வசூலை ஈட்டியது.[8]
குறிப்புகள்
- ↑ "Pa.Ra.Palanisamy (2010) Tamil Movie". spicyonion.com. https://spicyonion.com/movie/pa.ra.palanisamy/.
- ↑ "Jointscene : Tamil Movie Pa. Ra. Pazhanisami". jointscene.com இம் மூலத்தில் இருந்து 7 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110407072356/http://www.jointscene.com/movies/Kollywood/Pa._Ra._Pazhanisami/17981.
- ↑ "Sundaram Master turns hero!". சிஃபி. 4 December 2009. http://www.sify.com/movies/sundaram-master-turns-hero-news-tamil-kkfrlHdgebbsi.html.
- ↑ "Pa Ra Palanisamy". ayngaran.com. http://www.ayngaran.com/frame.php?iframepath=moviedetails.php?movid=597.
- ↑ "Prabhu Deva's father turns hero!". filmibeat.com. 3 December 2009. https://www.filmibeat.com/tamil/news/2009/sundaram-debut-movie-031209.html.
- ↑ "A family song by Prabhu Deva". lakshmansruthi.com இம் மூலத்தில் இருந்து 27 ஜனவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230127054843/http://www.lakshmansruthi.com/news/march2010/a-family-song-by-prabhu-deva.asp.
- ↑ "Pa Ra Palanisamy (2010) - Dheena". mio.to. https://mio.to/album/Pa+Ra+Palanisamy+(2010).[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Pa Ra Palanisamy - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 14 June 2010. http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-june-14/tamil-cinema-topten-movie-pa-ra-palanisamy.html.