சூர்யகாந்தம் (நடிகை)
சூர்யகாந்தம் | |
---|---|
பிறப்பு | சூர்யகாந்தம் 28 அக்டோபர் 1924 காக்கிநாடா, கிழக்கு கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா (தற்பொழுது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)[சான்று தேவை] |
இறப்பு | 18 திசம்பர் 1994 | (அகவை 70)
படித்த கல்வி நிறுவனங்கள் | பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம், ஆந்திரப்பிரதேசம் |
பணி | திரைப்பட நடிகை |
வாழ்க்கைத் துணை | பெத்திபோட்லா சலபதி ராவை |
சூர்யகாந்தம் (Suryakantham)(28 அக்டோபர் 1924 - 18 திசம்பர் 1994) என்பவர் தெலுங்குத் திரைப்படத் துறையின் சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தனது பெரும்பாலான திரைப்படங்களில் கொடூரமான மாமியார் வேடத்தில் நடித்து பிரபலமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா அருகே வெங்கட கிருஷ்ணராய புரத்தில் வசிக்கும் தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சூர்யகாந்தம். இவர் தனது பெற்றோருக்கு 14வது குழந்தையாக இருந்தார். இவர்களில் பத்து குழந்தைகள் இறந்துவிட்டனர். ஆறாவது வயதில் நடனம் மற்றும் பாடக் கற்றுக்கொண்டார்.
இவர் 1950-ல் உயர் நீதிமன்ற நீதிபதியான பெத்திபோட்லா சலபதி ராவை மணந்தார்.
தொழில்
ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த சந்திரலேகாவில் நடனக் கலைஞராகத் திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கினார் சூர்யகாந்தம். இத்திரைப்படத்திற்காக இவருக்கு 75 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டது. இவர் நாரத நாரடியில் குணச்சித்திரக் கலைஞராக தனது முதல் பாத்திரத்தைப் பெற்றார். ஆனால் இறுதியில் ஜெமினி ஸ்டுடியோவில் தனது வேலையை விட்டுவிட்டார்.
பின்னர், குருகபிரவேசம் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். சௌதாமினி படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் இதனை இவர் ஏற்கவில்லை. பின்னர் இவர் ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில் இவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் சம்சாரம் படத்தில் கொடூரமான மாமியார் வேடத்தில் நடித்தார்.
மற்றொரு "கதாநாயகி" பாத்திரம் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து இவருக்கு வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு கதாநாயகியை தனது படத்தில் இருந்து நீக்கிவிட்டார் என்பதையும், இதனால் இந்த வாய்ப்பு தனக்கு கொடுக்கப்பட்டது என்பதையும் அறிந்த சூர்யகாந்தம், "மற்ற கலைஞர்களின் மகிழ்ச்சியின்மையால் என்னால் வாழ முடியாது" என்று வாய்ப்பை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் கோடாரிகம் என்ற படத்தில் நடித்தார். இது இவருக்கு புதிய வெற்றியை தந்தது. இயக்குனர்கள் பி. நாகி ரெட்டியும், சக்ரபாணியும் சூர்யகாந்தம் இல்லாமல் படம் எடுக்க மாட்டார்கள். என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ். வி. ரங்காராவ் ஆகியோர் நடித்த குண்டம்மா கதை என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்தனர். இதில் குண்டம்மாவின் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யகாந்தம் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
விருதுகள் மற்றும் பட்டங்கள்
விருதுகள்
- மகாநதி சாவித்திரி நினைவு விருது
- பத்மாவதி மகிளா பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம்
பட்டங்கள்
- கய்யாலி அட்டா
- சகஜ நாடக கலா சிரோமணி
- ஹாஸ்ய நாத சிரோமணி
- பஹுமுக நடன பிரவீணா
- ரங்கஸ்தலா சிரோமணி
- அருங்கலை மாமணி (தமிழ்)
திரைப்படவியல்
ஆண்டு | படம் | மொழி | கதாபாத்திரம் |
---|---|---|---|
1946 | நாரத நாரடி | தெலுங்கு மொழி | |
1949 | தர்மங்கடா | தெலுங்கு | |
1950 | சம்சாரம் | தெலுங்கு | வெங்கம்மா |
1952 | தாசி | தெலுங்கு | டாக்டர் சரளா |
1952 | கல்யாணம் பண்ணிப்பார் | தமிழ் | |
1952 | கல்யாணம் பண்ணிப்பார் | தெலுங்கு | சுக்காலாம்மா |
1952 | பிரேமா | தெலுங்கு | சிம்லி |
1953 | வேலைக்காரி மகள் | தெலுங்கு | |
1953 | மருமகள் (1953 திரைப்படம்) | தெலுங்கு | சேஷம்மா |
1953 | பிராடுகு தெருவு | தெலுங்கு | கோட்டாம்மா |
1954 | சக்ரபாணி | தெலுங்கு | மனோரமா |
1954 | சந்திரஹாரம் | தெலுங்கு | |
1955 | டொங்கா ராமுடு | தெலுங்கு | |
1955 | கன்யாசுல்கம் | தெலுங்கு | மீனாட்சி |
1956 | சிரஞ்சீவுலு | தெலுங்கு | அகிலாண்டம்மா |
1956 | சரண தாசி | தெலுங்கு | சேஷம்மா |
1956 | இளவேள்பு | தெலுங்கு | |
1956 | பெண்கி பெல்லம் | தெலுங்கு | |
1957 | பாக்யா ரேகா | தெலுங்கு | |
1957 | டொங்கல்லோ டோரா | தெலுங்கு | |
1957 | மாயா பஜார் | தெலுங்கு | இடும்பி |
1957 | தோடி கோடலு | தெலுங்கு | அனசூயா |
1958 | அப்பு சேசி பப்பு கூடு | தெலுங்கு | ராஜரத்தினம் |
1958 | மஞ்சி மனசுக்கு மஞ்சி ரோஜுலு | தெலுங்கு | |
1958 | மஞ்சள் மகிமை | தெலுங்கு | |
1959 | ஜெயபேரி | தெலுங்கு | ரத்னலு |
1959 | கிருஷ்ண லீலாலு | தெலுங்கு | |
1960 | சாந்தினிவாசம் | தெலுங்கு | |
1964 | தூய உள்ளம் | தெலுங்கு | கனக துர்கம்மா[1] |
1961 | பார்யா பர்தாலு | தெலுங்கு | |
1961 | பெல்லி கனி பில்லாலு | தெலுங்கு | |
1961 | இட்டாரு மித்ருலு | தெலுங்கு | |
1961 | கலசிவுண்டே காலடு சுகம் | தெலுங்கு | |
1961 | சபாஷ் ராஜா | தெலுங்கு | |
1961 | வாக்தானம் | தெலுங்கு | பாலமணி |
1962 | ஆத்மா பந்துவு | தெலுங்கு | விதவை மகள் |
1962 | பீஷ்மர் | தெலுங்கு | |
1962 | குண்டம்மா கதா | தெலுங்கு | குண்டம்மா |
1962 | குல கோட்ராலு | தெலுங்கு | |
1962 | மாஞ்சி மனசுலு | தெலுங்கு | |
1962 | மோகினி ருக்மாங்கதா | தெலுங்கு | |
1962 | ரக்த சம்பந்தம் | தெலுங்கு | |
1962 | சிறி சம்படலு | தெலுங்கு | |
1963 | சதுவுக்குன்னா அம்மாயிலு | தெலுங்கு | வர்தனம் |
1963 | லவகுசா | தெலுங்கு | |
1963 | மூகா மனசுலு | தெலுங்கு | |
1963 | நர்தனசாலா | தெலுங்கு | |
1963 | பருவு பிரதிஷ்டை | தெலுங்கு | |
1963 | ஈடு ஜோடு | தெலுங்கு | ரங்கம்மா |
1963 | புனர்ஜன்மா | தெலுங்கு | |
1963 | திருப்பதம்மா கதை | தெலுங்கு | |
1964 | மருத்துவர் சக்கரவர்த்தி | தெலுங்கு | |
1964 | முரளி கிருஷ்ணா | தெலுங்கு | |
1964 | ராமுடு பீமுடு | தெலுங்கு | |
1965 | ஆத்ம கவுரவம் | தெலுங்கு | சந்தான லட்சுமி |
1966 | கண்ணே மனசுலு | தெலுங்கு | |
1966 | நவராத்திரி | தெலுங்கு | |
1966 | ஜமீன்தார் | தெலுங்கு | |
1966 | ஆஸ்திபருலு | தெலுங்கு | காசுலம்மா |
1967 | உம்மடி குடும்பம் | தெலுங்கு | |
1967 | க்ருஹலக்ஷ்மி | தெலுங்கு | |
1967 | பூலா ரங்காடு | தெலுங்கு | |
1968 | நின்னே பெல்லடிடா | தெலுங்கு | |
1968 | கோவுல கோபண்ணா | தெலுங்கு | மகாலட்சுமி |
1968 | டிக்கா சங்கரய்யா | தெலுங்கு | காந்தம்மா |
1969 | ஆத்மியுலு | தெலுங்கு | மஹான்காளி |
1969 | புத்திமந்துடு | தெலுங்கு | |
1969 | பலே ரங்காடு | தெலுங்கு | |
1970 | பாலராஜூ கதா | தெலுங்கு | |
1970 | கோடலு தித்தின கபுரம் | தெலுங்கு | |
1970 | தாலி பொட்டு | தெலுங்கு | |
1971 | தசரா புல்லோடு | தெலுங்கு | ஏஎன்ஆரின் வளர்ப்புத் தாய் |
1971 | ஸ்ரீமந்துடு | தெலுங்கு | |
1971 | அட்டாலு கொடல்லு | தெலுங்கு | கிருஷ்ணனின் மாற்றாந்தாய் |
1971 | மனசு மாங்கல்யம் | தெலுங்கு | |
1972 | இல்லு இல்லு | தெலுங்கு | ராஜா பாபுவின் மாமியார் - சூரம்மத்தா |
1972 | அந்த மன மஞ்சிக்கே [2] | தெலுங்கு | லீலா ராவ் |
1972 | இட்டாரு அம்மாயிலு | தெலுங்கு | சுந்தரம்மா |
1972 | கலாம் மரிண்டி | தெலுங்கு | |
1972 | கொடுக்கு கோடலு | தெலுங்கு | |
1972 | விசித்ர பந்தம் | தெலுங்கு | காண்டம் |
1973 | ஆண்டாள ராமுடு | தெலுங்கு | சாமலம்மா |
1973 | கங்கா மங்கா | தெலுங்கு | |
1975 | முடியால முகு | தெலுங்கு | ஒப்பந்தக்காரரின் மனைவி |
1975 | பூஜை | தெலுங்கு | |
1976 | நிறுவனத்தின் செயலாளர் | தெலுங்கு | |
1976 | ஸ்ரீ ராஜேஸ்வரி விலாஸ் காபி கிளப் | தெலுங்கு | |
1977 | அர்த்தங்கி | தெலுங்கு | |
1977 | அந்தமே ஆனந்தம் | தெலுங்கு | |
1977 | யமகோலா | தெலுங்கு | சீதாம்மா |
1978 | கோரண்ட தீபம் | தெலுங்கு | |
1979 | கார்த்திகை தீபம் | தெலுங்கு | |
1980 | புச்சி பாபு | தெலுங்கு | |
1980 | கயாலி கங்கம்மா | தெலுங்கு | கங்கம்மா |
1981 | பிரேமா மந்திரம் | தெலுங்கு | |
1982 | பெளலீடு பில்லாலு | தெலுங்கு | |
1982 | கலவாரி சம்சாரம் | தெலுங்கு | |
1983 | பெல்லி சூப்புலு | தெலுங்கு | |
1983 | முண்டடுகு | தெலுங்கு | |
1983 | கொண்டே கொடல்லு | தெலுங்கு | வரலம்மா |
1985 | அமெரிக்கா அல்லுடு | தெலுங்கு | |
1985 | சூர்ய சந்திரா | தெலுங்கு | |
1986 | உக்ர நரசிம்மம் | தெலுங்கு | |
1987 | குண்டம்மகரி கிருஷ்ணுலு | தெலுங்கு | |
1988 | யமுடிக்கு முகுடு | தெலுங்கு | காளியின் பாட்டி |
1989 | பந்துவுலோஸ்துன்னாரு ஜாக்ரதா | தெலுங்கு | சுந்தரம்மா |
1989 | ஹை ஹை நாயக | தெலுங்கு | சூர்யகாந்தம்மா |
1990 | இடெம் பெல்லாம் பபோய் | தெலுங்கு | |
1993 | ரத சாரதி | தெலுங்கு | குணதம்மா |
1993 | ஒன் பை டூ | தெலுங்கு | ஸ்ரீகாந்தின் பாட்டி |
1993 | கோவிந்தா கோவிந்தா | தெலுங்கு | |
1994 | அண்ணா | தெலுங்கு | |
1994 | எஸ்.பி.பரசுராம் | தெலுங்கு | லட்சுமிகாந்தம் |
மேற்கோள்கள்
- ↑ Narasimham, M.L. (13 May 2015). "Velugu Needalu (1961)". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/velugu-needalu-1961/article8591612.ece.
- ↑ Anta Mana Manchike (1972) - IMDb (in English), retrieved 2021-07-28