சும்மா இருங்க மச்சான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சும்மா இருங்க மச்சான்
இயக்கம்எஸ். என். பிரசாத்
தயாரிப்புஜோதி பிரசாத்
கதைஎம். எஸ். கமலேஷ்குமார் (உரையாடல்)
திரைக்கதைஎஸ். என். பிரசாத்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுநித்யா
படத்தொகுப்புபானர்ஜி
கலையகம்மாருதி ஆர்ட் பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 15, 1996 (1996-03-15)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சும்மா இருங்க மச்சான் (Summa Irunga Machan) என்பது 1996 ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எஸ். என். பிரசாத் இயக்கிய. இப்படத்தில் பாண்டியராஜன், பிரகதி, திவ்யசிறீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலேசியா வாசுதேவன், கோவை சரளா, கவிதா, சார்லி, அலெக்ஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜோதி பிரசாத் தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துள்ளார். படமானது 1996 மார்ச் 15 அன்று வெளியானது.[1][2]

கதை

சுப்பிரமணி ( பாண்டியராஜன் ) ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் வேலையற்ற இளைஞன். சென்னையில் உள்ள தனது மாமாவிடம் ( மலேசியா வாசுதேவன் ) வந்து சேர தனது கிராமத்திலிருந்து வருகிறான். அவனுக்கு ஆச்சரியப்படுமு விதமாக, அவனது மாமாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் : பரமு ( கோவை சரலா ) மற்றும் ராஜம்மா ( கவிதா ) ஆகியோராவர். அவர்கள் வெவ்வேறு வீடுகளில் வசிக்கிறார்கள், மாமா தனது இரு மனைவிகளுடையே போராடுகிறார். பரமுவின் மகள் உமா ( பிரகதி ), ராஜம்மாவின் மகள் ரமா (திவ்யசிறீ), இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். சுப்ரமணியின் மாமா அவன் யாரென்று காட்டிக்கொள்ளாமல் ஒரு வேலைக்காரன்போல இருக்குமாறு அறிவுறுத்துகிறார். பரமு, ராஜம்மா இவனை வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். உமாவும் ராமாவும் சுப்பிரமணியை காதலிக்கிறார்கள். மாமாவைப் போலல்லாமல், சுப்பிரமணி பலதார மணத்துக்கு எதிரானவன். அடுத்தது என்ன நடக்கிறது என்பதே கதை ஆகும்.

நடிகர்கள்

இசை

திரைப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையமைத்தார். 1996 இல் வெளியான இசைப் ஒலிப்பதிவில், காளிதாசன் எழுதிய ஐந்து பாடல்கள் இருந்தன.

எண் பாடல் பாடகர் (கள்) பாடல் காலம்
1 'சந்திரனும்' தேவா காளிதாசன் 3:33
2 'பட்டம் பட்டம் பட்டம்பூச்சி' கிருஷ்ணராஜ், லோகநாதன் 3:47
3 'மாமா மாமா' சிந்து, டி. கே. கலா, மனோ 4:04
4 'டிக் டிக் டிக்' கே.எஸ் சித்ரா, மனோ 4:03
5 'காதலுக்கு கண்ணிருக்கு மனோ, சிந்து 4:36

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சும்மா_இருங்க_மச்சான்&oldid=33473" இருந்து மீள்விக்கப்பட்டது