சுஜிபாலா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சுஜிபாலா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003-2016
வாழ்க்கைத்
துணை
பிரானேஷ் (தி. 2016)

சுஜிபாலா (Sujibala) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களிலும், சில கன்னட மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

தொழில்

சுஜிபாலா கிச்சா வயசு 16 (2005) படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக இரண்டாம் நாயகியாக நடித்தார். மேலும் கன்னட திரைப்படமான மிஸ்டர் பக்ரா (2005) படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.[1] சந்திரமுகி (2005) படத்தில் மாளவிகாவின் கதாபாத்திரத்தின் சகோதரியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.[2] வஞ்சகன் (2006) மற்றும் டான் சேரா (2006) போன்ற குறைந்த செலவில் எடுக்கபட்ட பல தமிழ்ப் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார்.[3][4] இவர் கோபாலபுராணம் (2008) படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். ஒரு விமர்சகர் "மலையாளத்தில் இதைவிட மோசமான அறிமுகப் படத்தை சுஜிபாலா தேர்ந்தெடுத்திருக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.[5] இயக்கம் (2008) படத்தில் இவரது நடிப்பைப் பற்றி குறிப்பிட்ட, ஒரு விமர்சகர் இவர் திட்டமிட்ட திரைக்கதையில் தொலைந்து போனதாக எழுதினார்.[6] அய்யாவழி (2008) படத்தில் ஒரு வண்ணாத்தி தொழிலாளியாக நடித்தார்.[7] லோகேஷ் உடன் மானாட மயிலாட (2008) நடனப் போட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது பருவத்தில் அரையிறுதிப் போட்டியாளராக இருந்தார்.[8] கோரிப்பாளையம் (2010), முத்துக்கு முத்தாக (2011), கழுகு (2012) ஆகிய படங்களில் கருணாசின் மனைவியாக துணை வேடங்களில் நடித்தார்.[2][9]

தனிப்பட்ட வாழ்க்கை

உண்மை (2012) படத்தில் பணிபுரிந்தபோது, இயக்குநர் பி. ரவிக்குமார் இவரிடம் தன் காதலைக் கூறினார். காதலை ஏற்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். பின்னர் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். சுஜிபாலா அவரை திருமணம் செய்து கொள்ள தயங்கினார், எனவே சுஜிபாலா தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.[10][11][12]

2016 ஆம் ஆண்டு, கத்தாரில் ஒரு உணவகத்தில் பணிபுரியும் உதகையைச் சேர்ந்த பிரனேஷை மணந்தார்.[13][14]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2003 தென்னவன் செவிலியர்
கலாட்டா கணபதி அபி
2004 கேம்பஸ் மாணவி
டிரீம்ஸ்
2005 கிச்சா வயசு 16 சுப்பு
மிஸ்டர். பக்ரா கன்னடத் திரைப்படம்; ரோகிணி என்ற பெயரில் குறிப்பிடப்பட்டார்.
சந்திரமுகி கந்தசாமியின் இளைய மகள்
சகா சகி கன்னடப் படம்
2006 டான் சேரா கீதா
வஞ்சகன் ஜீவா
2008 கோபாலபுராணம் நந்திணி நாயர் மலையாளப் படம்
இயக்கம் மலர்
அய்யாவழி
2009 இரு நதிகள்
இளம்புயல் மொழி
வைகை சிறப்புத் தோற்றம்
சூரியன் சட்டக் கல்லூரி சிறப்புத் தோற்றம்
2010 கோரிப்பாளையம் ராணி
பா. ர. பழனிச்சாமி சிறப்புத் தோற்றம்
திட்டக்குடி மல்லிகா
மேஷ்ட்ரு கன்னடப் படம்
2011 மின்சாரம் சிறப்புத் தோற்றம்
முத்துக்கு முத்தாக ராசாத்தி
உப்புக்கண்டம் பிரதர்ஸ்: பேக் இன் ஆக்சன் மலையாளப் படம்
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை சிறப்புத் தோற்றம்
காசேதான் கடவுளடா சிறப்புத் தோற்றம்
2012 கழுகு வள்ளி
2014 கலவரம் சிறப்புத் தோற்றம்
விலாசம்
2016 திருநாள்
அஞ்சுக்கு ஒண்ணு சிறப்புத் தோற்றம்
2025 மத கஜ ராஜா 2012 இல் படமாக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது.

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பங்கு தொலைக்காட்சி
2007-2008 மானாட மயிலாட (பருவங்கள் 1 & 2) போட்டியாளர் கலைஞர் தொலைக்காட்சி
2009 வெங்கடேஷ் பட் உடன் சமையல் சமையல் விஜய் தொலைக்காட்சி
2012 ஆண் பாவம் சன் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

  1. "Jaggesh returns to acting". Viggy. Archived from the original on 31 October 2023. Retrieved 25 November 2023.
  2. 2.0 2.1 "'சர்ச்சை' நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்... கத்தார் ஹோட்டல் ஊழியரை மணந்தார்! | Actress Sujibala marries Ooty man". Filmibeat. 6 September 2016.
  3. "Vanjagan release on August 4". Filmibeat. 2 August 2006. Archived from the original on 4 May 2018. Retrieved 3 May 2018.
  4. "DONSERA Review". Koodal (in Tamil). koodal.com. Archived from the original on 2 February 2010. Retrieved 5 September 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Gopalapuranam Review | Gopalapuranam Malayalam Movie Review by Veeyen". 15 March 2008. Archived from the original on 25 November 2023. Retrieved 25 November 2023.
  6. S. R. Ashok Kumar (2 May 2008). "Game called murder -- Iyakkam". தி இந்து. Archived from the original on 25 November 2023. Retrieved 3 March 2019.
  7. Shankar, Settu (17 May 2007). "Sujibala without a blouse in Ayyavazhi". ஒன்இந்தியா. Archived from the original on 30 September 2007.
  8. "Chennai's Radio Cityzens catch up with 'Maanaada Mayilaada' semi finalists". www.radioandmusic.com. 29 September 2008. Archived from the original on 25 November 2023. Retrieved 25 November 2023.
  9. "Kazhugu review. Kazhugu Tamil movie review, story, rating - IndiaGlitz.com - IndiaGlitz.com". Indiaglitz. 10 January 2017. Archived from the original on 10 January 2017.
  10. "Director reveals intimate pics of actress Sujibala". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 August 2018. Archived from the original on 2023-11-25. Retrieved 2023-11-25.
  11. "Sujibala files death threat complaint against director". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 January 2017. Archived from the original on 25 November 2023. Retrieved 25 November 2023.
  12. "Actress Attempts Suicide - Suji Bala - Goripaalayam - Tamil Movie News - Behindwoods.com". www.behindwoods.com. Archived from the original on 2023-11-25. Retrieved 2023-11-25.
  13. "நடிகை சுஜிபாலா திருமணம்". தினமலர். 6 September 2016. Archived from the original on 25 November 2023. Retrieved 25 November 2023.
  14. "நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்: ஊட்டியை சேர்ந்தவரை மணந்தார்". மாலை மலர். 5 September 2016. Archived from the original on 25 November 2023. Retrieved 25 November 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுஜிபாலா&oldid=366357" இலிருந்து மீள்விக்கப்பட்டது