கலாட்டா கணபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கலாட்டா கணபதி
இயக்கம்கார்த்திக் குமார்
தயாரிப்புஆர். ராதாகிருஷ்ணன்
கதைராம் செல்வா (வசனம்)
திரைக்கதைகார்த்திக் குமார்
இசைசௌந்தர்யன்
நடிப்புபாண்டியராஜன்
சங்கவி
ஒளிப்பதிவுரவிசுந்தரம்
படத்தொகுப்புமஹாவிஷ்ணு
மழைதாசன்
கலையகம்மாருதி பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 26, 2003 (2003-09-26)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கலாட்டா கணபதி (Galatta Ganapathy) 2003 இல் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். கார்த்திக் குமார் இதனை இயக்கியுள்ளார். இப்படத்தில் பாண்டியராஜன் மற்றும் சங்கவி ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் தோன்றியிருந்தனர். இவர்களுடன் வெண்ணிற ஆடை மூர்த்தி, வினு சக்ரவர்த்தி, வடிவுக்கரசி, சிட்டி பாபு, சேது வினாயகம், கீர்த்தனா, பாண்டு மற்றும் மகாநதி சங்கர் போன்றோரும் நடித்திருந்தனர். ஆர். ராதாகிருஷ்ணன் இதை தயாரித்திருந்தார். சௌந்தர்யன் இசையமைத்த இத்திரைபடம் 2003 செப்டம்பர் 26 அன்று வெளிவந்தது.[1][2]

கதைச் சுருக்கம்

கணபதி (பாண்டியராஜன்) மற்றும் வீரப்பன் (சிட்டி பாபு) இருவரும் ஒரு கிராமத்து காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிகின்றனர். வீரப்பனுக்கு, முத்துலட்சுமி (லேகாஸ்ரீ) என்ற பேராசை கொண்ட மனைவி இருக்கிறாள். கணபதிக்கு திருமணம் ஆகவில்லை. அவனது தாயார் பேராசை கொண்ட அன்னபூரணி (வடிவுக்கரசி) தனது சகோதரனின் வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் பெற்று வருகிறார்., அவரது கணவர் சுந்தரம் (வெண்ணிற ஆடை மூர்த்தி) வேறு சில வேலைகளை செய்து வருமானம் ஈட்டி வருகிறார், அவரால் மூத்த மகன் ஜெகன் (ஜெகன்) அவரது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கிறார். கணபதி தனது முழு சம்பளத்தையும் அவரது தாயாரிடம் அளித்து விடுகிறார். அவர் எல்லோருடைய வாழ்க்கையையும் நரகத்தை போல ஆக்குகிறார்.

கணபதி கிராமத்திற்கு புதிதாய் வரும் நந்தினி (சங்கவி) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். கணபதியின் தாயார் இத்திருமணத்திற்கு வரதட்சணை கேட்கிறார். நந்தினி அப்பணத்தை அளிக்கிறார். மறுநாள். நந்தினி அந்த ஊர் காவல் நிலையத்தின் அதிகாரியாக பொறுப்பேற்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. நந்தினி வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் அன்னபூரணி மேல் வழக்கு தொடுக்கிறார். இதற்கிடையில் நடக்கும் பல சம்பவங்களுக்குப் பிறகு அன்னபூரணி தனது தவறுகளை உணர்கிறார். ஜெகன் தனது மனைவியுடன் மீண்டும் இணைகிறார், அபி தனது காதலனுடன் இணைகிறார். நந்தினிக்கும் ,கணபதிக்கும் திருமணத்தை அன்னபூரணி நடத்தி வைக்கிறார்.

நடிப்பு

தயாரிப்பு

வெண்ணிற ஆடை மூர்த்தி, சிட்டிபாபு மற்றும் பாண்டு போன்றோர் நகைச்சுவை பகுதியை பாண்டியராஜனுடன் இணைந்து நடித்திருந்தனர். அன்புத் தொல்லை படத்தில் தன்னுடன் நடித்திருந்த நடிகை ரவாலியை இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க பாண்டியராஜன் திட்டமிட்டிருந்தார். ஆனால் இயக்குநர் பெண் கதாபாத்திரத்தில் சங்கவியை நடிக்க வைத்தார்.[3]

ஒலித்தொகுப்பு

Galatta Ganapathy
soundtrack
வெளியீடு2003
ஒலிப்பதிவு2003
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்22:07
இசைத் தயாரிப்பாளர்Soundaryan

பிறைசூடன் (கவிஞர்) , முத்து விஜயன் மற்றும் இளைய கம்பன் ஆகியோர் பாடல்களை எழுத இதன் இசையை செளந்தர்யன் மேற்கொள்ள 2003இல் வெளிவந்தது.[4][5][6]

எண் பாடல் பாடியோர் காலம்
1 'கண்ணிமைக்கும் நேரத்திலே' கிருஷ்ணராஜ் 4:29
2 'விக்கல் எடுத்துக்கிச்சுடா' ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாப் ஷாலினி 4:16
3 'பாண்டிச்சேரி' அனுராதா ஸ்ரீராம் 4:32
4 'அம்மா அப்பா விளையாட்டு' பிரசன்னா ராவ், ஸ்ரீவர்தினி 4:46
5 'நீலாங்கரை அஞ்சல' மாணிக்க விநாயகம், ஸ்ரீவர்தினி 4:04

மேற்கோள்கள்

  1. "Galatta Ganapathy on KTV". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018.
  2. "Galatta Ganapathy Tamil Movie". woodsdeck.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018.
  3. "Sanghavi to pair with Pandiarajan in Galatta Ganapathi" (in Tamil). filmibeat.com. 5 February 2004. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Galatta Ganapathi (2003) - Soundaryan". mio.to. Archived from the original on 10 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Galatta Ganapathi (Original Motion Picture Soundtrack) - EP by Soundaryan". itunes.apple.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018.
  6. "Galatta Ganapathi songs". saavn.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2018.
"https://tamilar.wiki/index.php?title=கலாட்டா_கணபதி&oldid=31937" இருந்து மீள்விக்கப்பட்டது