சூரியன் சட்டக் கல்லூரி
சூரியன் சட்டக் கல்லூரி | |
---|---|
இயக்கம் | ஆர். பவன் |
தயாரிப்பு | சிவசக்தி பாண்டியன் |
கதை | ஆர். பவன் (உரையாடல்) |
திரைக்கதை | ஆர். பவன் |
இசை | தேவா |
நடிப்பு | கஜ்னி மித்ரா குரியன் |
ஒளிப்பதிவு | யூ. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | எஸ் சூரஜ்கவே |
கலையகம் | எஸ். எஸ். மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 25, 2009 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சூரியன் சட்டக் கல்லூரி (Suriyan Satta Kalloori) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். பவன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான கஜ்னி, மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், இதில் ராதாரவி, பவன், எம். எசு. பாசுகர், கஞ்சா கறுப்பு, ஆரத்தி, காதல் சுகுமார், சாம்ஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். சிவசக்தி பாண்டியன் தயாரித்த இப்படத்திற்கு, தேவாவின் இசை அமைத்தார். படம் 25 செப்டம்பர் 2009 அன்று வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள்
- கஜ்னி சூரியனாக (சூரியநாராயணன்)
- மித்ரா குரியன் மகாலட்சுமியாக
- ராதாரவி கல்லூரி துணைவேந்தர்
- பவன் திருச்செல்வன் மற்றும் கலைச்செல்வனாக
- எம். எசு. பாசுகர் சாமா ஐயராக
- கஞ்சா கறுப்பு இடிதாங்கியாக
- ஆர்த்தி பூமாவாக
- காதல் சுகுமார் இரகுவாக
- சாம்ஸ் கீத்துவாக
- செல்வராஜ்
- பெசன்ட் ரவி ரவியாக
- ராஜ்யலட்சுமி சூரியனின் தாயாக
- சுஜிபாலா சிறப்புத் தோற்றத்தில்
- சிறீகாந்து தேவா சிறப்புத் தோற்றத்தில்
- தேவா சிறப்புத் தோற்றத்தில்
தயாரிப்பு
காதல் கோட்டை (1996) மற்றும் வெற்றிக் கொடி கட்டு (2000) போன்ற படங்களைத் தயாரித்த சிவசக்தி பாண்டியன், அறிமுக இயக்குநர் ஆர். பவன் இயக்கிய சூரியன் சட்டக் கல்லூரி என்ற படத்தை தயாரிப்பதன் மூலமாக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் படம் தயாரிக்கத் துவங்கினார்.[2] படத் தயாரிப்பாளர் காஜா மொகைதீனின் மகன் புதுமுகம் கஜ்னி, மலையாள நடிகை மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பவன், ராதாரவி, எம். எசு. பாசுகர், கஞ்சா கறுப்பு, ஆர்த்தி போன்ற நடிகர்கள் பிற வேடங்களில் நடித்தனர். யூ. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசை அமைத்தார். படத்தொகுப்பை எஸ். சூரஜ்கவே மேற்கொண்டார்.[3][4][5]
இசை
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா அமைத்தார். ரீரிகார்டிங் முடிக்க தேவா 21 நாட்கள் எடுத்துக்கொண்டார்.[6] 2009 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், கபிலன், ஆர். பவன் எழுதிய ஐந்து பாடல்கள் இருந்தன.[7]
எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | காலம் |
---|---|---|---|---|
1 | "கலாய் கலாய் கலாக்கிறாய்" | உதித் நாராயண், ஜனனி பரத்வாஜ் | கபிலன் | 5:28 |
2 | "குரு பிரம்மா குரு விஷ்ணு" | ஹரிஹரன், சாதனா சர்கம் | 4:46 | |
3 | "காதல் பண்ணப் போரியா" | தேவா | 4:06 | |
4 | "மசாக்கி மசாக்கி" | நிர்தியா | 4:46 | |
5 | "தீக தீக தீக்கனா" | சின்னப்பொண்ணு | ஆர்.பவன் | 4:43 |
வெளியீடு
இந்த படம் 25 செப்டம்பர் 2009 அன்று நான்கு படங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது.[8]
வணிகம்
இந்த படம் சென்னை மண்டலத்தில் சராசரிக்கும் குறைவான வசூலைத் துவக்கியது.[9][10]
குறிப்புகள்
- ↑ "Jointscene : Tamil Movie Suriyan Satta Kalloori". jointscene.com இம் மூலத்தில் இருந்து 24 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090924232636/http://www.jointscene.com/movies/kollywood/Suriyan_Satta_Kalloori/8869.
- ↑ "Producer Sivasakthi Pandian is back". kollywoodtoday.net. 6 September 2008 இம் மூலத்தில் இருந்து 7 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170607115255/http://www.kollywoodtoday.net/news/producer-sivasakthi-pandian-is-back/.
- ↑ "Three in one go!". indiaglitz.com. 11 March 2009. https://www.indiaglitz.com/three-in-one-go-tamil-news-45523.
- ↑ "Sooriyan Satta Kallori". ayngaran.com. http://www.ayngaran.com/frame.php?iframepath=movieshows.php?movid=195.
- ↑ "சிவசக்தி பாண்டியனின் சூரியன் சட்டக்கல்லூரி!" (in Tamil). filmibeat.com. 6 September 2008. https://tamil.filmibeat.com/specials/06-siva-sakthi-pandians-sooriyan-satta-kalloori.html.
- ↑ "Deva takes 21 days to complete RR for Sooriyan Satta Kalloori" (in Tamil). filmibeat.com. 5 February 2004. https://tamil.filmibeat.com/specials/16-deva-takes-21-days-to-complete-rr.html.
- ↑ "Suriyan Satta Kallori (2009) - Deva". mio.to இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161219044357/http://mio.to/album/Suriyan+Satta+Kallori+(2009).
- ↑ "Five Tamil films this Friday!". சிஃபி. 23 September 2009. http://www.sify.com/movies/five-tamil-films-this-friday-news-tamil-kkfr2mhedcgsi.html.
- ↑ "Suriyan Satta Kaloori - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 28 September 2009. http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-sep-28/tamil-cinema-topten-movie-suriyan-satta-kaloori.html.
- ↑ "Suriyan Satta Kaloori - Behindwoods.com - Tamil Top Ten Movies". behindwoods.com. 5 October 2009. http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-oct-05/tamil-cinema-topten-movie-suriyan-satta-kalloori.html.