சி. வி. சந்திரசேகர்
Jump to navigation
Jump to search
சி. வி. சந்திரசேகர் | |
---|---|
பிறப்பு | சிம்லா, இமாசலப் பிரதேசம், இந்தியா | மே 22, 1935
இறப்பு | சூன் 19, 2024 சென்னை, தமிழ்நாடு | (அகவை 89)
பணி | நடனக் கலைஞர், கல்வியாளர், நடன இயக்குநர், |
செயற்பாட்டுக் காலம் | 1947–நடப்பு[1] |
வலைத்தளம் | |
www |
சி. வி. சந்திரசேகர் (C. V. Chandrasekhar, 22 மே 1935 – 19 சூன் 2024) பரதக் கலைஞர், ஆசிரியர், இசையமைப்பாளர், நடன அமைப்பாளர், கல்வியாளர் எனப் பன்முகத் தன்மையுள்ளவர். சிம்லாவில் பிறந்தாலும் பூர்வீகம் தமிழகமே. தமிழகக் கலையான பரதத்தை கற்றுத் தேர்ந்தவர் இவர். 24 நாடுகளில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
கல்வி
புதுதில்லி எம்.இ.ஏ. உயர்நிலைப்பள்ளியிலும், சென்னை பெசன்ட் தியாசாபிகல் உயர்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பு படித்தார். விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டமும், காசி இந்து பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலாசேத்ரா கல்லூரியில் பரதநாட்டியத்தில் முதுநிலைப் பட்டயமும் பெற்றார்.
விருதுகள்
- இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
- குஜராத் அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
- உத்திரப்பிரதேச அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது
- பரோடா திரிவேணி கலைக்கூட விருது[2]
- இந்திய அரசின் பத்ம பூசண் விருது -2011[3]
இறப்பு
பேராசிரியர் சி. வி. சந்திரசேகர் 2024 சூன் 19 அன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தனது 89-ஆவது அகவையில் இறந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ A tale of fortitude: C.V. Chandrasekhar and Jaya Chandrasekhar.. The Hindu, Jan 25, 2008.
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்126
- ↑ http://www.rediff.com/news/report/padma-awards-2011-the-winners/20110126.htm
- ↑ "Veteran Bharatanatyam dancer C.V. Chandrasekhar passes away". தி இந்து. 19 சூன் 2024. https://www.thehindu.com/entertainment/dance/veteran-bharatanatyam-dancer-cv-chandrasekhar-passes-away/article68307196.ece.
வெளி இணைப்புகள்
- Nrityashree, website பரணிடப்பட்டது 20 ஏப்ரல் 2021 at the வந்தவழி இயந்திரம்