இராஜஸ்ரீ பிர்லா
இராஜஸ்ரீ பிர்லா | |
---|---|
பிறப்பு | 1948 (அகவை 76–77) மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | தொழிலதிபர் |
வாழ்க்கைத் துணை | ஆதித்ய விக்ரம் பிர்லா |
பிள்ளைகள் | குமார் மங்கலம் பிர்லா (மகன்), வாசவதத்தா பஜாஜ் (மகள்) |
விருதுகள் | பத்ம பூசண் பெண் சாதனையாளர் விருது ஆண்டின் பெருநிறுவன குடிமகன் சேவா ஷிரோமணி விருது |
வலைத்தளம் | |
Official web page |
இராஜஸ்ரீ பிர்லா (Rajashree Birla) ஒரு இந்தியக் கொடையாளர் ஆவார். இவர் பிர்லா குடும்பத்தின் வணிக வம்சாவளியைச் சேர்ந்த "ஆதித்யா பிர்லா"வைத் திருமணம் செய்துகொண்டார். 1995 ல் கணவர் இறந்த பிறகு, இராஜஸ்ரீ பெருநிறுவங்களின் சமூக பொறுப்புணர்வுத் துறை மற்றும் தொண்டு துறைகளில் பணிபுரிந்தார், அது அவரது குடும்பத்தினரால் நிதியளிக்கப்பட்ட ஒரு பெரிய நிறுவனமாகும். 2011இல், அவரது சமூக சேவைக்காக இந்திய அரசு மூன்றாவது சிறந்த குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம பூசண் விருது வழங்கி அவரை கௌரவித்தது.[1]
சுயசரிதை
இராஜஸ்ரீ 1948இல் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரையில் வடமேற்கு இந்தியாவில் உள்ள ராஜஸ்தானின் ஒரு புகழ் பெற்ற ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ராதாகிஷன் ஃபோம்ரா,[2] பர்மா ஷெல் நிறுவனத்தின் முகவராக இருந்தார்,[3] தாயார் பார்வதி தேவி ஃபோம்ரா ஒரு இல்லத்தரசியாவார், இவர்கள் குடும்பத்தினர் மார்வாரி வைசியர்கள் மற்றும் மகேஸ்வரி உப ஜாதியைச் சார்ந்தவர்கள் ஆவர்.
சமூகப் பணிகள்
இராஜஸ்ரீ பிர்லா 2006 ஆம் ஆண்டு புனேயில் 2006 ஆம் ஆண்டு, 30 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், 325 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான ஆதித்ய பிர்லா மெமோரியல் மருத்துவமனையை நிறுவியுள்ளார், இது 18 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இம்மருத்துவமனை சமூக முயற்சிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஆதித்யா பிர்லா மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் ஆதித்யா பிர்லா அறக்கட்டளை மூலம் நிதியளிக்கப்படுகிறது.
மற்ற சமூக நடவடிக்கைகள்
இராஜஸ்ரீ பிர்லா அரசு சார்பற்ற அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார், அவர் ஹாபிடேட் ஃபார் ஹியுமானிட்டி என்ற நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். 2012 இல் ஆசிய பசிபிக் மற்றும் உலகளாவிய குழுக்களின் பிலிப்பைன்ஸ் மானிலா மாநாட்டில் கலந்து கொண்டார். அதே வருடத்தில், மகேந்திரசிங் தோனி போன்ற புகழ்பெற்ற துடுப்பாட்ட குழுமத்தை நிறுவனங்களின் முயற்சிகளுக்காக 2 மில்லியன் டாலர்கள் தொகை திரட்டினார். அவர் ₹ 100 மில்லியனுக்கான பங்களிப்பை ஹாபிடேட் ஃபார் ஹியுமானிட்டி என்ற நிறுவனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.[3] இராஜஸ்ரீ பிர்லா ராஜஸ்தானிலுள்ள பிலானியில் தனது கணவருக்கு நினைவுச்சின்னம் கட்டியுள்ளார். மேலும் புனேயில் ஒரு கோயில் கட்டுவதற்கு முயல்கிறார்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Padma announcement". பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
- ↑ "Early life". Archived from the original on 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
- ↑ 3.0 3.1 "Hindu business line". பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
வெளி இணைப்புகள்
- பைனான்சியல் டைம்ஸ் Write up on Rajashree Birla[1]
- Birla family history on Money Control[2]
- Profile on BAIF Development Research Foundation[3]
- on YouTube – 1[4]
- on YouTube – 2[5]
- Address at the Rotary Convention – video[6]
- ↑ "FT". பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
- ↑ "Family history". பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
- ↑ "Baif" (PDF). Archived from the original (PDF) on 25 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "YT 1". பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
- ↑ "YT 2". பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
- ↑ "Rotary". பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.