சத்ய விரத சாத்திரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சத்ய விரத சாத்திரி
Prof Satya Vrat Shastri in 2013.jpg
பிறப்பு29 செப்டம்பர் 1930 (1930-09-29) (அகவை 94)
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்பஞ்சாப் பல்கலைக்கழகம், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பணிஅறிஞர், கல்வியாளர், கவிஞர், இலக்கண விமர்சகர்
விருதுகள்1968: சாகித்திய அகாதமி விருது
2006: ஞானபீட விருது
வலைத்தளம்
satyavrat-shastri.net

சத்ய விரத சாத்திரி (ஆங்கிலம்: Satya Vrat Shastri) (பிறப்பு செப்டம்பர் 1930 29 ) இந்தியாவைச் சேர்த இவர் ஒரு மிகவும் அலங்கரிக்கப்பட்ட சமசுகிருத அறிஞர் ஆவார். இவர் எழுத்தாளராகவும், இலக்கண விமர்சர்கராகவும், கவிஞராகவும் இருந்துள்ளார். அவர் மூன்று மகாகாவியங்கள், மூன்று கண்டகாவியங்கள், ஒரு பிரபந்தகாவியங்கள் மற்றும் ஒரு பத்ரகாவியம் போன்றவற்றையும், சமசுகிருத விமர்சன எழுத்துகளில் ஐந்து படைப்புகளையும் எழுதியுள்ளார். இவரது முக்கியமான படைப்புகள் இராமகிருதி மகாகாவியம், பிரகத்தரம் பாரதம், சிறீ போதிசத்வச்சரிதம், வைதிக வியாகரணா, சர்மன்யாதேச சூத்திர விபதி போன்றவற்றையும், ஏழு தொகுதிகள் அடங்கிய "சமஸ்கிருத புதையல்களைக் கண்டுபிடிப்பது" என்பதையும் எழுதியுள்ளார்..[1]

தற்போது புது தில்லியின் சவகர்லால் நேரு பல்கலைக்கழக சமசுகிருத ஆய்வுகளுக்கான சிறப்பு மையத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார். சமசுகிருதத் துறையின் தலைவராகவும் , புதுதில்லி பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தின் தலைவராகவும் இருந்த அவர், பண்டிதர் மன்மோகன் நாத் தார் என்ற சமசுகிருத பேராசிரியராக இருந்தார் (1970–1995).

தனது தொழில் வாழ்க்கையில் 1968 ஆம் ஆண்டில் சிறீகுருகோவிந்தசிம்கசரிதம் என்ற கவிதை படைப்புகளுக்காக இந்தியாவின் தேசிய கடிதங்களின் அகாதமி சாகித்திய அகாதமி வழங்கிய சமசுகிருதத்திற்கான சாகித்ய அகாதமி விருது, உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.[2] பின்னர் 2006 இல், சமசுகிருத மொழியில் ஞானபீட விருதைப் பெற்றவர் (2009 இல் அவரது சீடரும் தாய்லாந்தினின் இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்ன்இதை வழங்கினார்).

கல்வி

சாத்திரி தனது தந்தை சிறீசாரு தேவ சாத்திரி என்ற புகழ்பெற்ற அறிஞரின் கீழ் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். அதன்பிறகு, அவர் வாரணாசிக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் சுக்தேவ் சா மற்றும் சித்தேசுவர் வர்மா ஆகியோரின் கீழ் கல்வி கற்றார்.

அவர் தனது இளங்கலையில் மேதகைமை பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலை, மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் தத்துவத முனைவர் பட்டம் ஆகியவற்றை பெற்றார்.[3]

தொழில்

பின்னர், அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு தனது கற்பித்தல் வாழ்க்கையின் அடுத்த நாற்பது ஆண்டுகள் சமசுகிருதத் துறையின் தலைவர், கலை பீடத்தின் தலைவர் போன்ற முக்கியமான பதவிகளை வகித்தார். ஒரிசாவின் பூரி, சிறீ சகந்நாத் சமசுகிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், பாங்காக்கில் உள்ள சுலலாங்கொர்ன் மற்றும் சில்பாகார்ன் பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும், தாய்லாந்தின்வடகிழக்கு புத்த பல்கலைக்கழகம், நாங்காய், தப்பிங்கன் பல்கலைக்கழகம், தூபிங்கன் , ஜெர்மனி, கத்தோலிக்க பல்கலைக்கழகம், இலியூவன், பெல்ஜியம் மற்றும் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், எட்மண்டன், கனடா ஆகியவற்றிலும் வருகை பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். அவர் தாய்லாந்தின் இளவரசி மகா சக்ரி சிரிந்தோர்னுக்கு [1977-1979] சமசுகிருதத்தை கற்பித்தார்.[4]

சத்ய விரத சாத்திரி சமசுகிருதத்தில் பல முக்கியமான கவிதைப் படைப்புகளை எழுதியுள்ளார், மிக முக்கியமானது தாய் மொழியிலிருந்து சமசுகிருதமாக, இராமாயணத்தின் தாய் பதிப்பான, அதாவது, சிறீ-ராம-கீர்த்தி-மகா-காவ்யம், அரசரின் வேண்டுகோளின் பேரில், தாய்லாந்து இளவரசி எழுதிய முன்னுரையுடன் இது எழுதப்பட்டது. அவரது தற்போதைய ஆராய்ச்சி திட்டங்கள் தாய்லாந்தில் உள்ள சமசுகிருத கல்வெட்டுகள் மற்றும் இந்து கோவில்கள், காளிதாச ஆய்வுகள், யோகவசித்தத்தின் விமர்சன பதிப்பு, தென்கிழக்கு ஆசியாவின் சமசுகிருத சொற்களஞ்சியம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இராம கதை ஆகியவை.

2009 ஆம் ஆண்டில், (2006) ஞானபீட விருதை வென்ற ஒரே சமசுகிருத கவிஞரானார். மொழியின் செழுமைக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காகவும், அவரது முன்னாள் சீடரான தாய்லாந்து இளவரசி மகா சக்ரி சிரிந்தோனால் இது வழங்கப்பட்டது.[5]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சத்ய_விரத_சாத்திரி&oldid=19753" இருந்து மீள்விக்கப்பட்டது