சாத்தூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாத்தூர்
சாத்தூர்
இருப்பிடம்: சாத்தூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°21′29″N 77°54′56″E / 9.358000°N 77.915600°E / 9.358000; 77.915600Coordinates: 9°21′29″N 77°54′56″E / 9.358000°N 77.915600°E / 9.358000; 77.915600
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
வட்டம் சாத்தூர் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி சாத்தூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஏ. ஆர். ஆர். ரகுராமன் (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

29,398 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.83 சதுர கிலோமீட்டர்கள் (1.48 sq mi)

91 மீட்டர்கள் (299 அடி)

குறியீடுகள்


சாத்தூர் (ஆங்கிலம்:Sattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வட்டம் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.[3] இதன் அருகாமையில் எட்டு கி.மீ. தாெலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. சாத்தூர் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 91 மீட்டர் (299 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,093 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 29,398 ஆகும். அதில் 14,400 ஆண்களும், 14,998 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2691 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 913 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,257 மற்றும் 239 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.3%, இசுலாமியர்கள் 3.45%, கிறித்தவர்கள் 5.13% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[5]

பெயர்க்காரணம் மற்றும் வரலாறு

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தாத்த தேசிகன் எனும் ஆச்சார்யரான பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெருமாள் ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்துச் செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையைக் கண்டு அங்கிருந்த அரச மரத்தடியில் தான் கொண்டு வந்த சிலைகளை வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்திலேயே விட்டுவிடுங்கள் எனக் கூறி விட்டு மாயமானான். அந்த ஸ்வாமிகளின் பெயரால் அப்பகுதி தாத்தய்யன் மேடு என வழங்கி வந்தது.[சான்று தேவை]

சாத்தூரிலிருந்து 50 மைல் அப்பால் உள்ள சேத்தூர் ஜமீன்தார் மிகவும் பண வசதி படைத்தவர், மிக்க பெருமாள் பக்தி உடையவர். ஆனால் பிறவியிலேயே பார்வை இழந்தவர், தமது ஆச்சார்யரான தாத்தாச்சர்யார் ஸ்வாமி ஒருவரை அணுகி பிரார்த்திக்க ஒரு நாள் அவரது கனவில் பெருமாள் தோன்றினார். அவருக்கு அந்த அரச மரமும் தெளிவாக தெரிந்தது. ஜமீன்தார் பெருமாளைப் பார்த்து பெருமானே என்னைப் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாதவனாய் படைத்து விட்டாய். நான் எப்படி உன்னை சேவிப்பேன் என முறையிட்டார். உடனே பெருமாள் உனக்கு இன்று முதல் ஒரு கண் தெரியும், நீ என்னை தேடி வந்து என்னை சேவிக்கும் கணமே உனது மறு கண்ணும் உனக்கு தெரியும் என கூறினார். உடனே அந்த ஜமீன்தார் தனது ஆட்களுடன் வெங்கடப்பெருமானை தேடி புறப்பட்டார். அவர்கள் செல்லும் வழியில் தெற்கே அந்த பெருமான் இருப்பதைக் கண்ட அவரது ஆட்கள் ஜமீன்தாரிடம் சொன்னார்கள். அவர் பெருமானே என வணங்கவும் அவருக்கு மற்றொரு கண்ணும் பார்வை வந்தது. மகிழ்ந்த அந்த ஜமீன் பெருமாளுக்கு அங்கு கோவில் கட்ட எண்ணினார். ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலைச் சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.[சான்று தேவை]

அக்கோவில் குடமுழுக்கு விழா திருப்பதி குருக்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது. பெருமாள், குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்கு பகுதியில் ஒரு ஆலமரத்தின் அடியில் இருப்பதாகக் கூறி, விவரமறிந்த ஜமீன்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, ஆலமரத்தடியில் வெங்கடாசலபதியைக் கண்டார். அந்த குருக்கள் இந்தப் பகுதி படந்தால் என அழைக்கபடும் எனவும் பெருமாள் குடி கொண்டிருப்பதால் தென் திருப்பதி என அழைக்கப்படும் எனவும் மொழிந்தார். இன்றும் படந்தால் மற்றும் சாத்தூர் என அருகருகே இரண்டு ஊர்களிலும் பெருமாள் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத் திருவிழாவின் போது சாத்தூரப்பன், படந்தால் சென்று தங்கிய பின்புதான் தேரில் எழுந்தருள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வி

சாத்தூரில் ஸ்ரீ ச. இராமசுவாமி நாயுடு நினைவுக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி மற்றும் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.மிக பழமை வாய்ந்த ஆயிர வைசிய மேல்நிலைபள்ளி உள்ளது.

கோயில்கள்

சாத்தூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில், சிவன் கோயில், வழிபாட்டு கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில், மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில், முருகன் கோயில் என பல கோயில்கள் உள்ளன. சாத்தூருக்கு அருகாமையில் அமைந்துள்ள இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது வருடந்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.[சான்று தேவை]

தேவாலயங்கள்

சாத்தூரில் பல தேவாலயங்கள் உள்ளன. முக்கியமாக C.S.I தூய பவுலின் ஆலயம் மற்றும் ஒரு கத்தோலிக்க ஆலயம் உள்ளது.

போக்குவரத்து

ஏழாம் தேசிய நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாக செல்கிறது.

நீராதாரம்

சாத்தூரில் வைப்பாறு ஒன்று உள்ளது.

சேவு

சாத்தூரில் தயாாிக்கப்படும் காரச்சேவு மிகவும் பிரசத்தி பெற்றது.[6]. இங்குள்ள நீர், விளையும் மிளகாய் வற்றல், தயாரிப்புமுறையால் கிடைக்கும் ருசிக்காக இச்சேவு அறியப்படுகிறது. முன்பு பனை ஓலைக் கொட்டான்களில் அடைத்துத் தரப்பட்டது. காலப்போக்கில் ஓலைக் கொட்டான்கள் மறைந்து அதற்குப் பதிலாக பாலிதீன் பைகளில் தரப்படுகிறது.[7]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.
  4. "Sattur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. சாத்தூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  6. மொறு மொறு "சாத்தூர் சேவு ஆன்லைனில்...
  7. http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=2767&Cat=502 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். சாத்தூர் சேவு

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாத்தூர்&oldid=112675" இருந்து மீள்விக்கப்பட்டது