வத்திராயிருப்பு
வத்ராப்
வத்திராயிருப்பு | |
---|---|
தேர்வு நிலை பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 9°38′7″N 77°38′20″E / 9.63528°N 77.63889°ECoordinates: 9°38′7″N 77°38′20″E / 9.63528°N 77.63889°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
அரசு | |
• நிர்வாகம் | வட்டம் |
ஏற்றம் | 73 m (240 ft) |
மக்கள்தொகை (2001)[1] | |
• மொத்தம் | 15,999 |
மொழி | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 626 132 |
தொலைபேசி எண் | 04563 |
வாகனப் பதிவு | TN-84 |
அருகிலுள்ள நகரம் | மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் |
மக்களவைத் தொகுதி | தென்காசி |
சட்டமன்றத் தொகுதி | திருவில்லிபுத்தூர் |
தட்பவெப்ப நிலை | Apr-May - Min 20 Deg C Max 42 Deg C and May - Mar - Min 20 Deg C Max 30 deg C |
வத்ராப் (Watrap) அல்லது வத்திராயிருப்பு (Vathirairuppu), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் இருக்கும் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். மேலும் இது 18 பிப்ரவரி, 2019 அன்று புதிதாக துவக்கப்பட்ட வத்திராயிருப்பு வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.
வத்திராயிருப்பு, மதுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில், மதுரையிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 38 கி.மீ தொலைவிலும், கிருஷ்ணன் கோயிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது. மேலும் வத்திராயிருப்பிலிருந்து, சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை10 கி.மீ தொலைவில் உள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,634 வீடுகளும், 16,784 மக்கள்தொகையும் கொண்டது.[2] இது 13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 36 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]