கோலெழுத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது.[1][2] இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது.[3]

வட்டெழுத்திலிருந்து கோலெழுத்து உருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்கு உரியதாகும்.[4]

வட்டெழுத்துக்கு முன்பே சங்க காலத்தில் கோலெழுத்தும் கண்ணெழுத்தும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என விளக்கப்படுகிறது.[5] இன்னுமொரு கருத்து, "கோடு எழுத்துக்கள்" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது.[6]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கோலெழுத்து&oldid=12787" இருந்து மீள்விக்கப்பட்டது