கோலெழுத்து
Jump to navigation
Jump to search
கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது.[1][2] இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது.[3]
வட்டெழுத்திலிருந்து கோலெழுத்து உருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்கு உரியதாகும்.[4]
வட்டெழுத்துக்கு முன்பே சங்க காலத்தில் கோலெழுத்தும் கண்ணெழுத்தும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என விளக்கப்படுகிறது.[5] இன்னுமொரு கருத்து, "கோடு எழுத்துக்கள்" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது.[6]
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- ↑ "Ancient writing schemes of Kerala" இம் மூலத்தில் இருந்து 2009-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091109222758/http://www.kerala.gov.in/language%20%26%20literature/alphabets.htm.
- ↑ A. Aiyappan (1948). Report on the Socio-economic Conditions of the Aboriginal Tribes of the Province of Madras. Government Press. பக். 131. http://books.google.co.uk/books?id=bHmwAAAAIAAJ&q=kolezhuthu+tamil&dq=kolezhuthu+tamil&hl=en&sa=X&ei=NCqtUdFHqJnRBczfgeAF&ved=0CF8Q6AEwCQ.
- ↑ "மொழி". http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=227&pno=79. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2015.
- ↑ "Grantha, Vattezhuthu, Kolezhuthu, Malayanma, Devanagiri, Brahmi and Tamil alphabets". http://c-radhakrishnan.info/alphabet.htm. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2015.
- ↑ "தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற் காரணம்". http://archives.thinakaran.lk/2011/11/05/?fn=f1111051. பார்த்த நாள்: 12 செப்டம்பர் 2015.
- ↑ K. S. Singh & S. Manoharan, People of India: National Series Volume IX: Languages and Scripts: Archaeological Survey of India, 1993, p. 27.