என் உயிர் நீதானே
என் உயிர் நீதானே | |
---|---|
இயக்கம் | எஸ். பி. இராஜ்குமார் |
தயாரிப்பு | அன்னூர் என். செந்தில், திப்பு, எஸ் செல்வராஜ் |
இசை | தேவா |
நடிப்பு | பிரபு தேவயானி கவுண்டமணி செந்தில் மகேஷ்வரி |
ஒளிப்பதிவு | இரமேஷ் காந்தி |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | ஜீவஜோதி பிலிம்ஸ் |
வெளியீடு | 19 அக்டோபர் 1998 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் உயிர் நீதானே (En Uyir Nee Thaane) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். எஸ். பி. இராஜ்குமார் இயக்கிய இப்படத்தில் பிரபு, தேவயானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படம் தெலுங்கு படமான பெல்லிசேசுகொண்டாம் படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] படம் 1998 அக்டோபர் 19 அன்று கலவையான விமர்சனங்களுக்கு வெளியானது.
கதை
வாசு ( பிரபு ) ஒரு பணக்கார தொழிலதிபர். தனது தந்தைக்கு முறை தவறி பிறந்த மகனை அவன் தாயின் மரணத்திற்குப் பிறகு எடுத்து வளர்க்கிறார். இதை அவரது தந்தை எதிர்க்கிறார். இதனால் குழந்தையுடன் தனியாக வாழ வாசு வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஜானகி ( தேவயானி ) ஒரு கொலை வழக்கில் கொலைகாரனுக்கு எதிராக சாட்சியமளிக்கிறாள். இதனால் கொலைகாரனின் சகோதரன் பழிவாங்குவதற்காக ஜானகியை பாலியல் பலாத்காரம் செய்கிறான். இதன்பிறகு ஜானகியை அவரது சகோதரர் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார். அவள் தன் தொழியின் வீட்டிற்குச் செல்கிறாள், ஆனால் அங்கே கூட, அவள் வெளியேற்றப்படுகிறாள். வாசு அவளை காப்பாற்ற வருகிறான். வாசுவின் முறைதவறி பிறந்த சகோதரனுக்கு தாயாகவும், வாசுவின் ஆலையில் மேலாளராகவும் ஜானகி ஆகிறாள். வாசு அவளை நோக்கி ஈர்க்கப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவள் அனுதாபத்தினால் அவ்வாறு செய்கிறான் என்று அவள் நம்புகிறாள். தனது அத்தை மகள் ( மகேஷ்வரி ) அமெரிக்காவிலிருந்து வருவதால், வாசு அவளையே திருமணம் செய்யவேண்டும் என்பதால் அவனது விருப்பத்தை ஏற்க்க வேண்டாம் என்று வாசுவின் தாயார் ( ஸ்ரீவித்யா ) ஜானகியிடம் கூறுகிறார. ஜானகி அதற்கு சம்மதித்து, தனக்கு பதிலாக மகேஸ்வரியை திருமணம் செய்து கொள்ளுமாறு வாசுவிடம் கேட்கிறாள். ஜானகியை பாலியல் வன்புணர்வு செய்தவன் அவளை திருமணம் செய்து கொண்டு, அவள் வழக்கை திரும்பப் பெறுச்செய்து பின்னர் அவளைக் கொன்றுவிட திட்டமிடுகிறான். வாசு அவளைக் காப்பாற்றுகிறான். இறுதியாக, மகேஸ்வரி ஜானகி மீதான வாசுவின் காதலை உணர்ந்து அவரை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறாள். வாசுவும் ஜானகியும் ஒன்றுபடுகிறார்கள்.
நடிகர்கள்
- பிரபு வாசுவாக
- தேவயானி ஜானகியாக
- கவுண்டமணி புல்லட் ஜாக்கியாக
- செந்தில் நிக்கோலஸாக
- மகேஷ்வரி சீமாவாக
- ராசன் பி. தேவ் ராஜசேகராக
- ஸ்ரீவித்யா வாசுவின் தாயாக
- ராஜேஷ் ஜானகியின் அண்ணனாக
- சி. ஆர். சரஸ்வதி ஜானகியின் அண்ணியாக
- தியாகு காவல் ஆய்வாளராக
- மகேந்திரன் ராஜசேகரின் மகனாக
- முத்துக்காளை - வாகனப் பழுது பாப்பவராக
- எல். ஐ. சி. நரசிம்மன் காவல் ஆணையராக
- அம்பிகா விருந்தினர் தோற்றத்தில்
இசை
இப்படத்திற்கு தேவா இசையமைத்தார். ஒலிப் பேழையில் 5 பாடல்கள் உள்ளன.[2][3] பழனி பாரதி, காமகோடியன், அறிவுமதி, எஸ். பி. ராஜ்குமார் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்..
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
1 | ஜனவரி நிலவே | கிருஷ்ணராஜ், சுஜாதா | எஸ். பி. ராஜ்குமார் | 05:31 |
2 | மெல்ல மெல்ல | மனோ, சித்ரா | பழனி பாரதி | 05:16 |
3 | நிக்கோபார் | மனோ, தேவா | காமகோடியன் | 05:15 |
4 | பதினெட்டு வயசு | சுஜாதா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | பழனி பாரதி | 05:03 |
5 | சிம்பொனி | பி. உன்னிகிருஷ்ணன், ஹரிணி | அறிவுமதி | 05:01 |
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130929093910/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ennuyir%20needhane.
- ↑ http://tamiltunes.com/en-uyir-neethane.html
- ↑ http://mio.to/album/29-tamil_movie_songs/16264-En_Uyir_Neethane__1998_/#/album/29-tamil_movie_songs/16264-En_Uyir_Neethane__1998_/[தொடர்பிழந்த இணைப்பு]