இராமானுஜ கவிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இராமானுஜ கவிராயர் (ஆங்கிலம்: Ramanuja Kavirayar) (பிறப்பு: 1780, ராமநாதபுரம்; இறப்பு: 1853, சென்னை) ஒரு தமிழ் அறிஞரும் கவிஞரும் ஆவார். சென்னையில் வாழ்ந்து தமிழிலக்கிய உலகில் கோலோச்சிய இவர் பல சிறந்த தமிழ் அறிஞர்களை தனது மாணாக்கர்களாகக் கொண்டிருந்தார்.

இராமானுஜ கவிராயர் தமிழ் செவ்வியல் நூல்களை முதன்முறையாக அச்சில் கொண்டு வரும் பணிக்கு முன்னோடியாக இருந்தது மட்டுமல்லாது அவற்றில் சிலவற்றிற்கு விளக்கவுரையும் எழுதினார். ஒரு சிறந்த கவிஞராக விளங்கினாலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளையைப் போலவே, இவரது தமிழாசிரியப் பணியே அவரது சிறந்த தமிழ்த் தொண்டாகக் கருதப்படுகிறது. இவர் பல தமிழறிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். 1820-க்கும் 1853-க்கும் இடையிலான காலகட்டத்தில் மதராஸ் பட்டணத்தில் இருந்த பல ஐரோப்பிய தமிழ் அறிஞர்களுக்கு இவர் பயிற்சி அளிக்கும் குருவாக விளங்கினார். அந்நாளில் மொழி ஆசிரியர்களைக் குறிக்கும் சொல்லான "முன்ஷி" (அதாவது குரு) என்று அழைக்கப்படலானார்.

அடிக்குறிப்பு

  • காமில் வி. ஸ்வலேபில், Companion Studies to the History of Tamil Literature, 1992, pp. 160–61
"https://tamilar.wiki/index.php?title=இராமானுஜ_கவிராயர்&oldid=3384" இருந்து மீள்விக்கப்பட்டது