இடம் பொருள் ஏவல்
இடம், பொருள் ஏவல் | |
---|---|
இயக்கம் | சீனு இராமசாமி |
தயாரிப்பு | லிங்குசாமி (தயாரிப்பளர்) திருப்பதி பிரதர்ஸ் |
கதை | சீனு இராமசாமி |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | விஜய் சேதுபதி விஷ்ணு நந்திதா (நடிகை) ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒளிப்பதிவு | ராகுல் தருமன் |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் |
விநியோகம் | டாக் என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | TBA |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இடம், பொருள் ஏவல் (Idam Porul Yaeval) சீனு ராமசாமி இயக்கத்தில் என். லிங்குசாமியின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு, நந்திதா ஸ்வேதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.[1]
நடிகர்கள்
- விஜய் சேதுபதி பாண்டியாக
- விஷ்ணு ஆசைத்தம்பியாக
- நந்தித ஸ்வேதா
- ஐஸ்வர்யா ராஜேஷ்
- வடிவுக்கரசி
- பால சரவணன்
- அருள்தாஸ்
- தீபெட்டி கணேசன்
தயாரிப்பு
2012 அக்டோபரில் நீர்ப்பறவையின் இசை வெளியீட்டிற்குப் பிறகு, சீனு ராமசாமி தனது அடுத்த படம் வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் பெங்களூரு தமிழன் என்ற பெயரில் எடுக்கப்போவதாக அறிவித்தார். அதில் விமல் முன்னணி பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.[2][3] ஜனவரி 2013 இல், விஜய் சேதுபதியும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சீனு ராமசாமி தெரிவித்தார். இந்தத் திரைப்படம் மதுரை மற்றும் கொடைக்கானல் அருகே தாண்டிகொடி அருகே மலைகளை அடிப்படையாக கொண்டு படமாக்கப் போவதாகவும் அறிவித்தார். தென்மேற்கு பருவகாற்று (2010) படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் போது தமிழ்நாட்டின் உட்பகுதியான, கோடலங்காடு கிராமத்திற்கு அருகே உள்ள இடங்களில் அதிக நாட்களை செலவிட்டார்.[4][5] இப்படத்தின் கதை கருவினை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உருவாக்க, சீனு ராமசாமி திரைக்கதை மற்றும் உரையாடல்களை உருவாக்கினார்.[5]
மே 2013 இல், இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன, தலைப்பு சொந்த ஊரு என மாற்றப்பட்டதுடன், நடிகர் விமல் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்தார்.[6] 2013 அக்டோபரில் நடந்த நிகழ்ச்சிகளில் என்.ஆர். லிங்குசாமி இப்படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது . ரகுநந்தனுக்கு பதிலாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் தலைப்பு இடம் பொருள் ஏவல் என மாற்றப்பட்டது, பின்னர் மீண்டும் அட்டகத்தி தினேஷுக்கு பதிலாக விஷ்ணு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][7] பிப்ரவரி 2014 இல், மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாய பெண்ணின் பாத்திரத்திற்காக மனீஷா யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9] படப்பிடிப்பு தொடங்கியவுடன் சீனு ராமசாமிக்கு மனீஷா யாதவின் நடிப்பு பிடிக்காமல் போனதால் அவருக்கு பதிலாக நந்திதா நடிக்க ஆரம்பித்தார்.[10] 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், விஷ்ணுவின் காதலியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக இயக்குனர் உறுதிப்படுத்தினார்.[11] மு. காசி விஸ்வநாதன் படத்தின் படத்தொகுப்பாளர் ஆவார், மதயானைக் கூட்டம் (2013) படப்புகழ் ராகுல் தருமன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார்.[12]
ஏப்ரல் 2014 இல் 30-35 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தது.[12][13] திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியின் விளைவாக இந்தப் படம் இன்னும் முடிக்கப்படவில்லை.[14]
ஒலிப்பதிவு
முதல் முறையாக இயக்குனர் சீனு ராமசாமி யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து இடம் பொருள் ஏவல் படத்தில் பணியாற்றியுள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார், இவரும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் தொழில் வாழ்க்கையில் முதல் முறையாக இணைந்தார்.[15][16] இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் முழு படமும் படம்பிடித்த பிறகு பெரும்பாலான பாடல்கள் இயற்றப்பட்டன.[5] இந்த இசை டிசம்பர் 18, 2014 அன்று சென்னையில் உள்ள சூரியன் பண்பலை வானொலி நிலையத்தில் வெளியிடப்பட்டது.[17] இருப்பினும், இந்த பாடல்கள், வெளியீட்டுக்குப் பல நாட்களுக்கு முன்னரே இணையத்தில் கசிந்தன.[18]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து.
பாடல் வரிசை | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
1. | "ஈரகாத்தே" | செந்தி தாஸ், அனிதா | 6:06 | |||||||
2. | "குறுந்தொகை" | வி. வி. பிரசன்னா, சோனியா | 3:40 | |||||||
3. | "எந்த வழி" | வைக்கம் விஜயலட்சுமி | 4:34 | |||||||
4. | "கொண்டாட்டமே" | ஸ்ரீராம் பார்த்தசாரதி | 4:55 | |||||||
5. | "அத்துவான காட்டுக்கு" | யுவன் சங்கர் ராஜா | 4:05 | |||||||
6. | "வையம்பட்டி" | அந்தோணிதாசன், பிரியதர்ஷிணி | 4:09 | |||||||
மொத்த நீளம்: |
27:31 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 It’s going to be Vijay Sethupathi, Vishnu and Yuvan!. Behindwoods. 14 October 2013. Retrieved 23 August 2014.
- ↑ Seenu Ramasamy to team up with Vimal next! பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம். சிஃபி. 1 November 2012. Retrieved 23 August 2014.
- ↑ Vimal in Seenu Ramasamy’s next. தி இந்து. 16 December 2012. Retrieved 23 August 2014.
- ↑ Gupta, Rinku (30 January 2013). Director Seenu Ramasamy heads to the hills. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Retrieved 23 August 2014.
- ↑ 5.0 5.1 5.2 http://www.thehindu.com/features/cinema/director-seenu-ramasamy-cycling-against-the-wind/article6796875.ece
- ↑ Attakathi Dinesh replaces Vemal in 'Sontha Ooru' பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 May 2013. Retrieved 23 August 2014.
- ↑ Vishnu joins Vijay Sethupathi பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 October 2013. Retrieved 23 August 2014.
- ↑ M. Suganth (25 February 2014). Manisha Yadav bags film opposite Vijay Sethupathi. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 23 August 2014.
- ↑ "Manisha Yadav bags role in 'Idam Porul Eval'". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 25 February 2014. Retrieved 23 August 2014.
- ↑ Karthik, Janani (17 March 2014). Nandita replaces Manisha Yadav in Vijay Sethupathi film. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 23 August 2014.
- ↑ C. R. Sharanya (26 April 2014). Aishwarya to play lead in Seenu’s film. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 23 August 2014.
- ↑ 12.0 12.1 Vijay Sethupathi will move to Kodaikanal. Behindwoods. 20 February 2014. Retrieved 27 August 2014.
- ↑ Gupta, Rinku (7 April 2014). 'I Don't Have Many Dialogues in IPE'. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Retrieved 23 August 2014.
- ↑ http://www.cinemaexpress.com/stories/news/2018/jan/31/seenu-ramasamy-goes-on-a-filmmaking-spree-4282.html
- ↑ For the first time in Yuvan’s career.... Behindwoods. 20 January 2014. Retrieved 27 August 2014.
- ↑ Yuvan and Vairamuthu for the first time. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 January 2014. Retrieved 23 August 2014.
- ↑ "Idam Porul Yaeval audio launched". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 December 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Idam-Porul-Yaeval-audio-launched/articleshow/45560353.cms.
- ↑ "Idam, Porul, Eval songs leaked online". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 December 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Idam-Porul-Eval-songs-leaked-online/articleshow/45514317.cms.